இரண்டு நாட்கள், மூன்று படங்கள்

சமீபத்தில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட மூன்று படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தேன். நீர்ஜா, தடம் மற்றும் சூப்பர் டீலக்ஸ். மூன்றையும் பற்றிய என் கருத்துக்கள் இங்கே.

நீர்ஜா

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். இதிலுள்ள பெரிய சவால், கதை எல்லோருக்கும் தெரியும் என்பது தான். பொதுவாக என்னை பயோ-பிக்குகள் அவ்வளவாக ஈர்ப்பதில்லை. ஆனால் சோனம் கபூருக்காகப் பார்க்க வேண்டிய படம் என்று என் லிஸ்டில் இருந்தது. நேற்றைய இழுவையான மேட்சின் போது திடீரென இதைப் பார்க்கலாம் என முடிவு செய்தேன். எதிர்பாராமல் பார்க்க நேரும் இம்மாதிரியான படங்கள் தான் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொள்கின்றன. ஒரு முன் இரவில் கதை தொடங்குகிறது. ஒரு பக்கம் அன்றைய (1984) பாம்பேயில், சாதாரண மத்தியத் தர குடும்பப் பார்ட்டி ஒன்றில் நீர்ஜா குழந்தைகளோடு பலூனை வெடித்து விளையாடிக்கொண்டிருக்கையில், 1:30 மணி தூரத்தில் இருக்கும் கராச்சியில் பாலஸ்தீன தீவிரவாதிகள் அடுத்த நாள் வரப்போகும் Pan Am விமானத்தைக் கடத்துவதற்காக வெடிபொருட்களைத் தயார் செய்து கொண்டிருக்கின்றனர். வழக்கமான கடத்தல் கதைகளில் உள்ளது போலக் குழந்தைகள், கர்ப்பிணி, வயதான பெண்மணி என்று இதிலும் உண்டு. ஆனால் அவர்களை பற்றியெல்லாம் இழுக்காமல் கதை நீர்ஜாவை மட்டுமே சுற்றி வருகிறது. உயிர் பயத்தை தன் இழந்த மண வாழ்க்கை அனுபவத்திலிருந்து போக்குவது, துப்பாக்கி முனையிலும் கடமையைச் செய்யப் போராடுவது, அமெரிக்கர்களிடம் இருந்து மட்டும் பாஸ்போர்ட் வாங்காமல் அவர்களை காப்பாற்றுவது, அந்த காதல் கடித்ததைப் படிக்கையில் கண்ணீரோடு புன்னகைப்பது என சோனம் கபூர் நீர்ஜாவாகவே வாழ்ந்திருக்கிறார். ஸிண்டகி பேடி ஹனீ சாஹியே லாம்பி நஹி (வாழ்க்கை நீண்டதாக இருக்கத் தேவை இல்லை, பெரிதாக இருந்தாலே போதுமானது) என்ற ஆனந்த் (1971) பட வசனத்திற்கும் நியாயம் செய்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு நடிகர் ஷாபனா ஆஸ்மி. மகளுக்காக மஞ்சள் நிற உடை எடுக்க செல்கையிலும், இறுதியில் விமான நிலையத்தில் வந்திறங்கும் சவப்பெட்டியில் அந்த உடையை வைக்கும் போது கொடுக்கும் முகபாவங்களிலும் கண் கலங்க வைத்துவிடுகிறார். நிச்சயமாக சோனம் கபூரின் சிறந்த படங்களில் ஒன்றாக இது நிலைத்திருக்கும்.

தடம்

ஒருரு இரட்டையரில் யார் கொலையாளி எனத்தெரியாமல் காவல்துறையும், நீதித்துறையும் திணறி இறுதியில் இருவரையும் விடுவித்தால் அது தான் தடம். இரட்டையரில் (அருண் விஜய்) எழில் சிவில் என்ஜினியாராக பணி புரியக் கவின் தன் நண்பன் சுருளி (யோகி பாபு) உடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளைச் செய்து வருகிறார். ஒரு நாள் ஆனந்த் என்பவன் கொலையாகப் பழி எழில் மீது விழுகிறது. அதே சமயம் குடிபோதையில் போலீஸ் வண்டி மீது இடித்ததாகக் கவினும் கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்படுகிறார். இருவரில் ஒருவர் கொலையாளி என்கிற நிலையில், பழைய பகையை மனதில் வைத்து எழிலை மடக்க நினைக்கிறார் இன்ஸ்பெட்டராக வரும் பெப்ஸி விஜயன். இன்னொரு புறம், கவினின் நடத்தையை வெறுக்கும் எஸ்.ஐ. வித்யா கவினைத் தண்டிக்கவேண்டும் என நினைக்கிறார். இந்த நிழல் யுத்தத்தை எப்படி இரட்டையர் தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக்கொள்கிறார்கள் என்பதை சீட் நுனியில் உட்கார வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. கவினுக்கு எப்படி எழில் கைதானது தெரியும், பல வருடங்களாகத் தொடர்பே இல்லதா பெண்ணை திடீரென ஏன் ஆன்ந்த் கடத்தினான், சண்டையிட்டாலும் ஏன் இருவரும் ஒன்று சேர்ந்தனர் என விடை தெரியாத கேள்விகள் பல. ஆனால் சுவாரசியமான திரைக்கதையில் அவையெல்லாம் மறந்து விடுகின்றன. இரண்டு கதாநாயகிகளுக்கும் பெரிதாக ஒன்றும் வேலை இல்லை என்றாலும், இருவருமே கிடைத்த வாய்ப்பில் பிரகாசிக்கின்றனர். கள்ளம் கபடமற்ற ஸ்மிருதி தன் கண்களாலேயே உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார். இன்னொரு நாயகி தான்யா ‘கேள்வியைச் சரியா கேளுங்க’ என சுவரசியப்படுத்துகிறார். ஒருமுறை பார்க்கலாம்.

சூப்பர் டீலக்ஸ்

சமீபத்திய ஓவர் ஹைப் படங்களுள் ஒன்று. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படம் (7-8 வருடங்களுக்குப் பிறகு!). தமிழ் இளம் இயக்குநர்களில் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று விளம்பப்படும் மிஷ்கின், நலன், நீலன் ஆகியோரும் பணிபுரிந்த திரைக்கதை, விஜய் சேதுபதி பெண்ணாக நடிக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். கதை என்ன? வேம்பு பழைய காதலனோடு உறவில் ஈடுபடுகையில் அவன் இறந்துவிடுகிறான். கணவனுக்குத் தெரிய வருகையில் அவன் எதிர்வினை என்ன? நான்கு பதின்பருவ சிறுவர்கள் நண்பன் வீட்டில் நீலப்படம் பார்க்கச் செல்கின்றனர். படத்தில் நடித்திருப்பது தன் அம்மா என ஒருவனுக்குத் தெரிய வரும்போது கோபத்துடன் தன் அம்மாவைக் கொல்ல புறப்படுகின்றான். அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் என்ன நடந்தது? கோபத்தில் அவன் உடைத்த தொலைக்காட்சியை அப்பா வருவதற்குள் மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் மீதம் இருப்பவர்கள். எப்படி அவர்கள் டிவியை மாற்றினார்கள்? சுனாமியில் இலட்சம் பேர் சாக ஒருத்தன் மட்டும் பிழைக்கிறான். தனக்குக் கடவுள் அருள் உள்ளதாக எண்ணி நோயுற்றவர்களை குணப்படுத்துவதாகக் கூறிக்கொள்கிறான். அவன் மகனே விபத்தில் சிக்கும் போது என்ன செய்கிறான்? இன்னொரு புறம் ஏழு ஆண்டுகளுக்கு முன் தங்களை விட்டுச் சென்ற மாணிக்கம் திரும்பி வருகிறான் என மகிழ்ச்சியில் இருக்கின்றனர் அவனின் மனைவி ஜோதியும், மகன் ராசுக்குட்டியும். ஆனால் வருவதோ பாலின மாற்றம் செய்துகொண்ட ஷில்பா. அதனால் வரும் பிரச்சனைகள் என்ன? இவற்றிர்கான பதில் தான் சூப்பர் டீலக்ஸ். படத்தின் மிகப்பெரிய ப்ளெஸ் வசனங்களும், நடிப்பும். சின்ன சின்ன பாத்திரங்களில் வருபவர்கள் கூட அந்த கதாபாத்திரத்திற்கு வழு சேர்கின்றனர். மிகப்பெரிய மைனஸ் நேரமும், படம் நடப்பது எந்த காலகட்டமும் என்ற குழப்பமும் தான். உலக முழுவதும் திரைப்படத்தின் நேரம் குறைந்து வருகின்றது. உலக சினிமாக்கள் என்று போற்றப்படும், விருதுகள் அள்ளும் படங்களே ஒரு மணி நேரம், கூட சில நிமிடங்களில் முடிவடையும் போது மூன்று மணி நேரம் என்பது அநியாயம். அதிலும் சமந்தா பகத் பாசில் வரும் பகுதிகள் என் பொறுமையைச் சோதித்தன. கணவன் இருக்கையில் பழைய காதலனோடு உறவு என்பது பத்து வருடத்துக்கு முந்தய ஹிந்தி படங்களின் கதை. இன்று இந்திய தொடர்களில் குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது இம்மாதிரியான கதையைக் கொண்டிருக்கும். மேலும், பெட்டுக்குள் பிணத்தை வைத்து கீழே போடுவது, பிணத்தை காருக்குள் வைத்துக்கொண்டு சாவதானமாக இருவரும் பேசிக்கொண்டு சொல்வது, இருவரின் மிகை நடிப்பு என இந்த பகுதி படத்தில் ஒட்டவே இல்லை. இன்னொரு புறம் முன்னால் நீலப்பட நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணனும் அவர் கணவனாக வரும் மிஷ்கினும் அசரடிகிறார்கள். விரும்பித்தான் அந்த படத்தில நடிச்சேன், எல்லாத்தையும் மாதிரி அதுவும் ஒரு தொழில் தான் எனச் சொல்லும் காட்சிகளில் கம்பீரமாக மிளிர்கிறார் ரம்யா. அற்புதமாக வரும் மிஷ்கின் தன் மனைவி தன்னை கேள்விகேட்கும் போது அதிர்ச்சியில் உறைவதும், தன் கடவுளிடம் தன் மகனுக்காக மன்றாடுவதும் என நடிப்பில் பின்னுகிறார். சாரு நிவேதிதா குறிப்பிட்டிருந்தது போல மிஷ்கின் என்னும் நடிகனைத் தமிழ் சினிமா இன்னும் அதிகமா உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்டவன் கட்டளை வந்த போது விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய ரசிகனாய் இருந்தேன். ஆனால், இப்போதெல்லாம் உணர்ச்சிகளற்ற ஒரு பிம்பமாகவே தன் கதாபாத்திரங்களைக் கையாள்கிறார் எனத் தோன்றுகிறது. அதே போல அவர் ஏற்றிருக்கும் திருநங்கை பாத்திரமும் அது பற்றிய எந்த புரிதலும் இன்றி உருவாக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அவரைப்பற்றிச் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மூன்று பேர், பகத் வீட்டுக்கு வரும் அந்த வால் பையனும், விஜய் சேதுபதியின் மகனாக வரும் ராசுக்குட்டியும் மற்றும் அந்த முட்ட பப்ஸு குண்டு பையனும். கலக்கியிருக்கிறார்கள். கஷ்ட நேரத்தில் சிலையிலிருந்து வைரம் கொட்டுவது, க்ளைமாக்ஸில் யாருக்கும் சேதாரம் இன்றி வில்லன் தலையில் டிவி விழுவது எனப் பல க்ளிஷேக்கள். இடையில் ஒரு ஏலியன் வேறு வருகிறது. விமர்சகர்களின் கருத்துக்களைப் பார்த்தால் இது ஒரு குறியீட்டுப் படம் என்று தெரிய வருகின்றது. பரத்வாஜ் ரங்கன் போன்ற சினிமாப் புலிகள் முதுகில் இருக்கும் மச்சம் கட் பண்ணினால் அடுத்த ஷாட்டில் எப்படி முகத்தில் வருகின்றது என்று ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். நேரம் இருப்பவர்கள் படித்துப்பார்க்கலாம். மற்றபடிக்கு ஒரு முறை பார்க்கக்கூடிய படம்.

நேர்த்திகாசு

இந்த கதை மிகப் பரவலாக எங்கள் குடும்பத்துப் பெண்களிடையே புழங்கி வருகின்றது. அதுவும் சற்றே அலைபாயும் மனமுடைய ஆண்களாக இருந்துவிட்டால், அவர்கள் காதில் விழும்படியாக மூத்த பெண்களாலும், வயதானவர்களாலும் குழந்தைகளான எங்களுக்குச் சொல்வது போலச் சொல்லப்படும். எங்கள் குடும்பம் புகழ்பெற்ற வணிக சமூகத்தைச் சேர்ந்தது. 1900களில் பர்மாவிற்குச் சென்று லேவாதேவி தொழில் (வட்டித்தொழில்) செய்து பெரும் பணம் ஈட்டிய குடும்பங்களில் எங்களுடையதும் ஒன்று. எங்கள் எள்ளுத்தாத்தா இரங்கூனில் ஒரு முக்கிய புள்ளியாகத் திகழ்ந்தவர். அன்றைய நாட்களிலெல்லாம் தமிழர்கள் மிகுந்த செல்வாக்கோடு பர்மாவில் வலம் வந்தனர். நேரிடையாகவும், மறைமுகமாகவும் அவர்களின் உதவி அரசு ஊழியர்கள் உட்படப் பலருக்குத் தேவைப்பட்டது. தொழில் பெருகப் பெருக தமிழ்நாட்டில் குறிப்பாகச் செட்டிநாட்டுப் பகுதிகளிலிருந்து பல இளைஞர்கள் இரங்கூனுக்குச் சென்ற வண்ணமிருந்தனர். அந்த நாட்களில் பர்மா மாப்பிள்ளைகளுக்கென்று ஒரு அந்தஸ்து காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உருவாகியிருந்தது.

ஆனால் கனவுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரண்டாம் உலகப்போர் வந்தது. பர்மா அப்போது ஆங்கிலேயரின் காலனியாக இருந்த காரணத்தால் கிழக்கில் ஒரு முக்கிய போர் முனையமாக மாறியது. 1942களின் தொடக்கத்தில் ஜப்பான் படைகள் பர்மாவின் மேல் தாக்குதலை ஆரம்பித்தன. மக்களுக்கு ஆங்கிலேயப் படைகள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை. சூரியன் மறையாத பிரிட்டன் பேரரசை இந்தக் குள்ள ஜப்பானியர்கள் அசைத்து விடுவார்களா என்ன என்று அலட்சியமாய் இருந்தனர். ஆனால் சிறந்த வணிகரான எங்கள் எள்ளுத்தாத்தாவிற்கு உள்ளே இருந்த வியாபார மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது. தன்னுடைய முக்கியமான முதலீடுகளைத் திரும்பப்பெற்று தங்கமாகவும், பணமாகவும் மாற்றிப் போர் தீவிரமடைந்து கப்பல் போக்குவரத்து தடைபடும் முன்பே தன் மகளையும், மருமகனையும், மனைவியையும் கப்பலிலேற்றி தமிழ்நாட்டுக்கு அனுப்பிவிட்டார்.

ஒரு சில சிறு முதலீடுகளுடன் தன் மூத்த மகனுடனும் அவன் மனைவியுடனும் இரங்கூனில் தான் பொறுத்துப்பார்ப்பது எனவும், சூழ்நிலையைப்பொருத்து முடிவு செய்யலாம் என்றும் திட்டமிட்டிருந்தார். அவர் சிறு வயதிலேயே பர்மாவிற்கு வந்துவிட்டவர். பிறந்த இடத்தை விடப் புகழும் செல்வமும் தந்து சீராட்டிய இரங்கூன் மீது அவருக்கு பெரும் பற்றிருந்தது. எனவே கடைசிவரை தாக்குப்பிடித்துப் பார்ப்பது என்ற எண்ணத்திலிருந்தார். மூத்தவன் தந்தை சொல்லுக்கு மறுசொல் அறியாதவன். மருமகளோ வாயில்லா பூச்சி. குழந்தை இல்லை என்பதே அவளின் ஒரே கவலை. தினமும் அதிகாலை அவள் பிறந்த முறையூரின் மீனாட்சி கனவில் வந்து பாலாற்றில் குளிக்க அழைப்பதே அவளின் ஒரே மகிழ்ச்சி. முறையூரோ, திருக்களப்பட்டியோ, இல்லை இரங்கூனோ அவள் அன்றாட வாழ்க்கையில் பெரிய மாற்றம் இல்லை. மாமியார் இருக்கும் வரை உணவு பரிமாறுவது அவரின் வேலை. இப்போது அதை மட்டும் சேர்த்துச் செய்யும்படி இருந்தது. சூரியன் உதித்து மறைவது போல் வாழ்வில் ஒரு மாற்றமும் இருக்காது என அவள் நம்பினாள்.

ஆனால், காலம் வேறு மாதிரி நகர்ந்தது. அலையென வந்த ஜப்பானியப் படைகள் முன் ஆங்கிலேயப்படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவர்கள் வடக்கில் பின் வாங்கி மலைப்பாங்கான இந்தியப் பகுதியிலிருந்து ஜப்பானியப்படைகளைத் தாக்கலாம் என்ற எண்ணத்திலிருந்தனர். படைகளோடு அலுவலர்களும் பின்வாங்க வேண்டி இருந்தது. தாத்தாவோடு பழகிய அதிகாரிகள் அவரையும் தங்களோடு வந்துவிடச் சொன்னார்கள். பர்மியர்களோ தமிழர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியை ஆங்காங்கே கொள்ளை, கொலை என நிகழ்த்தி நியாபகப்படுத்தினர். மார்ச் மாத நாளொன்றில் ஜப்பான் விமானங்கள் குண்டு வீசி சென்ற பின் ஒரு பர்மியக் கூட்டம் அவர் இருந்த சந்தைப்பகுதிக்குள் நுழைந்தது. கண்ணில் கண்டதையும் கையில் கிடைத்ததையும் வாரி சென்றனர். வயதான மூனாரூனாவின் கடையில் பணம் ஏதும் இல்லாத கோபத்தில், பர்மிய இளைஞன் ஒருவன் தராசு கல்லை எடுத்து அவரை அறைந்துவிட்டான். இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த மூனாரூனா தாத்தாவை அசைத்துவிட்டார். மகனோடும், மருமகளோடும் மறுநாளே புறப்படுவதென முடிவாயிற்று. மூன்று பேரும் உடன் மூன்று வேலையாட்களுமாக காரில் தொடங்கிய பயணம், புரோம், மாந்தளை, மொனீவா வழியாக கலேவாவுக்கு வந்து சேர்ந்த போது மூவருடன் இரண்டு துணி மூட்டைக்கள் மட்டுமே மிஞ்சியிருந்தன.

கலேவா நகர், பர்மாவின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த தமிழர்களாலும், சீக்கியர்களாலும், அஸ்ஸாமியர்களாலும், பெங்காளிகளாலும் நிரம்பியிருந்தது. ஆங்காங்கே தென்னை ஒலையில் அமைக்கப்பட்ட தற்காலிக குடிசைகளில் மக்கள் கூட்டமாக அடைந்து கிடந்தனர். கல்கத்தாவிலிருந்து போர்முனைக்கு எரிபொருள் மற்றும் உணவு எடுத்துச்செல்லும் வாகனங்கள் திரும்ப வரும்பொழுது காலியாக வரும். அவற்றில் ஆங்காங்கே முகாம்களிலிருந்த மக்களை இம்பாலுக்கும், அங்கிருந்து கல்கத்தாவிற்கும் அனுப்பும் வண்ணம் ஆங்கிலேய அரசு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் லாரிகளில் இடம் கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. மக்கள் பசியிலும், கடும் வெயிலிலும், புழுதி மண்டிய சாலைகளில் லாரிகளை எண்ணி தவம் செய்பவர்களென கிடந்தனர்.

எள்ளுத்தாத்தாவைப் போன்ற வசதியான ஓரிருவர் மட்டும் ஊருக்குள் ஒரு இடத்தை அமர்த்திக்கொண்டு அங்கு வந்திருந்த ஒடுக்கப்பட்ட மக்களையும், ஏழை மணிப்புரிகளையும் தங்கள் ஏவல் வேளைக்குப் பயன்படுத்திக்கொண்டனர். இவர்களில் பலர் தோட்டவேலைகளுக்கென அழைத்து வரப்பட்ட ஏழை எளிய கிராமத்தவர். அடிமை வாழ்வைப் பழகிப்போனவர்கள். இப்போதும் எஜமானர்களின் ஓரணா இரண்டணாவிற்கு எந்த காரியமும் செய்யத் தயாராயிருந்தனர். வந்திருந்த கூட்டத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட சாதி குடும்பமும் அடக்கம். கணவன், மனைவி மற்றும், பிறந்து சில நாட்களேயான குழந்தையோடு இன்னும் இரண்டு சிறுவர்களென அந்த குடும்பம் புரோமிலிருந்து வந்திருந்தது. பிள்ளை பெற்ற பெண் ஆதலால் அவளால் வெயிலில் காத்துக் காயவோ, லாரிகளில் அடித்துப்பிடித்து ஏறவோ இயலவில்லை. எனவே, அவளின் கணவன் சிறிது நாட்கள் தாமதித்துச்செல்லலாம் என்றெண்ணி எள்ளுத்தாத்தா தங்கியிருந்த கட்டிடத்தின் எதிரில் இருந்த அரசமரத்தடியில் தன் குடும்பத்திற்கு இடம் பிடித்துக்கொண்டான். பக்கத்தில் இருப்பவர்களுக்குச் சிறு சிறு ஏவல் வேலைகள் செய்வதன் மூலம் அவனும் குடும்பமும் நாட்களைத்தள்ள எண்ணியிருந்தனர். ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இல்லை. அங்கு வந்தவர்களில் பலர் பணக்காரர்களாயினும் பெரும் பணத்தை இழந்தே அங்கு வந்திருந்தனர். பகட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்களாயிருந்தாலும் கருணை மனம் கொண்டவர்களாக இருக்கவில்லை. யுத்தத்தினால் பொருட்களின் விலைகளோ பன்மடங்கு கூடியிருந்தது. இரண்டொரு நாட்களிலேயே பிறந்த குழந்தைக்குப் பால் தரவும் சக்தியின்றி கடும் பசியில் அந்த பெண் மரத்தடியில் கிடந்தாள். அவள் கணவனோ உணவும் வேலையும் தேடி நகர் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்தான். இவர்களின் நிலையைப்பார்த்த தாத்தாவின் மருமகளுக்கோ பெரும் வருத்தம். கறுத்த நிறத்தில் முட்டைக் கண்களோடு கிடந்த குழந்தை அவள் மனதைக் கொள்ளைகொண்டது. கட்டிடத்தில் இருந்தவாறே அதற்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தாள். இரக்கத்தில் இரவில் ஒரு பழத்துடன் வெளியே வந்தவளை மாமனார் பார்த்துவிட்டார். ‘ம்ம், என்ன?’ என்ற அவரின் அதட்டலுக்கு ஒரு பதிலும் சொல்லாமல் உள்ளே வந்துவிட்டாள்.

இரண்டு நாட்களாகத் தினமும் காலையில் கிழவர் மூத்தமகனுடன் வெளியே கிளம்பி பயணநிலைமைகளையும், போர்ச்செய்திகள் குறித்தும் அறிந்து வருவது வழக்கம். அன்று மகனை மட்டும் சென்று வரச்சொன்னார். திடீரென்று நினைவுக்கு வந்தவராக, ‘இவளையும் கூட்டிட்டு போ. வழியில ஏதாவது ரொட்டி, காய் கிடைச்சா வாங்கிட்டு வாங்க’ என்றார். இருவருக்கும் இது வியப்பாயிருந்தது. கல்யாணமான நாளிலிருந்து கணவனுடன் தனியே வெளியே சென்றதாய் அவளுக்கு நினைவில்லை. அவர்கள் கிளம்பிய பின் அவர் வாசலுக்கு வந்தார். மரத்தில் சாய்ந்து கிடந்த அந்த குடும்பத்தலைவனைக் கை வீசி அலைத்தார். ‘லேய், போயி இந்த தந்திய அடிச்சிட்டு வாலே’ என அவன் கையில் ஒரு ஐந்தணாவைத் திணித்தார். வாங்கியவன் சிட்டாய் நகருக்குள் பறந்தான். கைகளைக் கட்டியபடி மெல்ல அரசமரத்தடிக்கு வந்தவரைப் பார்த்து அந்த பெண் வாரிச்சுருட்டி எழுந்தாள். ‘பெட்டி படுக்கையெல்லாம் கொஞ்சம் கட்டனும். ஒருத்தனுமில்லே. வந்தொரு கை தாரியா’ என்றார் அவளிடம். அவள் தயக்கமாகக் குழந்தைகளைப் பார்த்தாள். ‘ஹ்ம்ம், காலேல வெச்ச சோறு கொஞ்சம் கிடக்கு, கொடுத்தா நீயும் குட்டிகளும் சாப்பிடுவீகளேனு பாத்தேன்’ என்றார். சோறு என்ற சொல் அவள் கண்களில் ஒளியைப் பாச்சியது. கைக்குழந்தையை மரத்தின் கிளையில் கட்டியிருந்த பழைய சீலை தொட்டிலில் போட்டுவிட்டு அவர் பின் சென்றாள்.

மகனும், மருமகளும் திரும்பிய போது, அந்த கைக்குழந்தை வீறிட்டுக்கொண்டிருந்தது. அந்தக் கணவனோ வெறித்த கண்களுடன் மரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பக்கத்தில் நெருங்கிய போது தான் அந்தப்பெண் அலங்கோலமாய் விரிந்த கண்களுடன் மரத்தடியில் கிடந்தது தெரிந்தது. அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. கணவனின் கையை இறுகப்பற்றிக்கொண்டாள். கதவைத்தட்டிய போது கிழவர் வந்து திறந்தார். குழந்தையின் வீறல் கேட்டு ‘எளவு இது வேற’ என்று கண்ணைச்சுருக்கியவர், அவர்களைத்தாண்டி அவனை நோக்கிச்சென்றார். ‘லேய் இந்தா’ என்று ஒரு நாணயத்தை அவனை நோக்கி வீசியவர், ‘ஆவ வேண்டியத பாருளே’ என்றுவிட்டுத் திரும்பிவந்தார். அன்று மாலை அவர்கள் கிளம்பிய போது அந்த மரத்தடி வெறிச்சோடிக்கிடந்தது. காலையில் தாத்தா வீசிய காசு அதே இடத்தில் புழுதி படிந்து கிடந்தது. இவனுக்கு வந்த வாழ்வப்பாரேன் என்று கிழவர் அந்த காசை எடுத்து மகனிடம் தந்தார். இரவில் இம்பால் செல்ல அவர்களுக்கு ஒரு லாரி கிடைத்தது. கலேவாவிலுருந்து இம்பலுக்குச் சாலைகள் இராணுவத்தால் அவசர அவசரமாகப் போடப்பட்டிருந்தன. மலைகளை குடைந்தும், காடுகளை ஊடறுத்தும் குண்டும் குழியுமான அந்த சாலைகள் ஒரு நாளில் பல்லாயிரம் பேரை இம்பாலுக்கு அழைத்துச்சென்றன. லாரியில் மகனும் மருமகளும் ஒரு மூலையில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். கிழவரோ லாரியின் ஓரத்தில் நின்றபடி இரவின் குளிரை ரசிப்பவராக அமைதியாக வந்துகொண்டிருந்தார். மேடு பள்ளங்களைத் தாண்டும்போதெல்லாம், அவள் கணவனின் மீது மோதிக்கொண்டிருந்தாள். திடீரென்று அவனுக்கு அவள் இருந்த இடம் காலியாக இருப்பதாகத் தோன்றியது. அதே சமயத்தில் ‘அய்யோ’ என்று அவனின் தந்தையின் அலறல் கேட்டது. அரைத்தூக்கத்தில் வந்து கொண்டிருந்த பயணிகள் கூச்சலிட்டு லாரியை நிறுத்தினர். அது ஒரு வளைவு. கீழே பல நூறடிக்குப் பள்ளத்தாக்கு விரிந்து சென்றது. இருளில் ஒன்றும் தெரியவில்லை. லாரிக்காரன் ‘இதற்குத் தான் இந்த பாதையில் நின்று கொண்டு வராதீர்கள்’ என்கிறோம் என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் கிழவரின் முடிவு என்னவாயிருக்கும் என்று எல்லோருக்கும் ஒரு வகையாய் புரிந்தது. லாரியில் மீண்டும் ஏறியவர்கள் நிற்கப் பயந்தவர்களாய் ஓரத்துக் கம்பிகளை இறுகப்பிடித்துக் கொண்டு அமர்ந்தனர். அவன் தன் மனைவியைப்பார்த்தான். இதையெல்லாம் அறியாதவளாய் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள்.

கதையை முடிக்கும் அத்தைமார்களும், பாட்டிமார்களும், பூஜையறையை சுட்டிக்காட்டி அந்தா அந்த கல்கத்தா காளி படமிருக்கில்லா அது பக்கதில்ல இருக்கிற மஞ்சத்துணியில தான் அந்த ஆள் விட்டெறிஞ்ச காசு முடிஞ்சு வச்சிருக்கு என்பார்கள். காதை இங்கே வைத்துக்கொண்டு, கண்ணை வேறெங்கோ சுழட்டிக் கொண்டிருக்கும் சம்பந்தப்பட்ட மாமாவின் முகத்தில் அப்போது மட்டும் ஒரு கருமை வந்து செல்லும்.

பிறன்பொருளால் பெட்டொழுகும் பேதமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல

(குறள்: 141, அதிகாரம்: 15, பிறனில் விழையாமை)

பொருள்: முறைதவறி பெண்களிடம் விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும், பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.

(குறிப்பு: பிறன் பொருளால் என்பதற்கு பல்வேறு உரையாசிரியர்களும், பிறனுடைய உரிமை பொருளாகிய பெண்ணை/மனைவியை என்று பொருள் கொள்கின்றனர். தற்காலத்துக்கு இது பொருந்தாதென்பதால் முறைதவறி என்று மட்டும் பொருள் கொள்கிறேன்.)

பட்டன் கதை

‘அண்ணேஏ… அண்ணேஏ…’ என்று யாரோ கத்திக்கொண்டு ஒடி வருவது போல் தோன்றியது. முத்துப்பட்டன் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். கருநிலவு நாள். ஊரில் ஆங்காங்கு ஒரு சில விளக்குகளை தவிர்த்துப் பார்த்தால் இருள் எனும் போர்வைக்குள் ஊரே உறங்கிக் கொண்டிருந்தது. தாலட்டு பாடுவது போலச் சீவடுகளின் சத்தம் மட்டும் ரிங்காரித்து கொண்டிருந்தது. திம்மக்கா உள்ளிருந்து ‘என்னவாம் மாமோய் இன்னேரத்துல…’ என்று கேட்டது பட்டன் காதில் விழுந்தாலும், பதில் சொல்லாது படலை திறந்து கொண்டு வெளியே வந்தான். கொட்டிலிலிருந்து மேடேறி ஊருக்குள் நுழையும் பாதையில் சிறுவன் ஒருவன் சுளுந்தோடு ஓடி வருவது தெரிந்தது. யாரது என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே, ஆண்டிப்பகடையின் மகன் அருகில் வந்துவிட்டான். ‘அண்ணே, அய்யாவெ வெட்டிப் போட்டுட்டு ஒரு கூட்டம் பசு மந்தைய தாட்டிக்கிட்டு இருக்கினேஏ… பாத்தா, மறவைங்க மாதிரி இருக்கு… சீக்கிரம் வாங்கண்ணே…’ என்றான். பட்டனுக்கு ஒரு நொடியில் எல்லாம் விளங்கி விட்டது. சட்டென்று வீட்டினுல் பாய்ந்தவன் வலையத்தையும், ஈட்டியையும் எடுத்துக்கொண்டான். எட்டிப்பார்த்த பொம்மக்காவிடம், ‘கதவைச் சாத்திட்டு இருங்க, இந்தா வந்திடறேன்…’ என்று வெளியில் பாய்ந்தான். அதற்குள் சிறுவனைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. பட்டன், அவர்களில் கந்தப்பகடையை பார்த்து, ‘நீ வெரசா மேக்க போயி வழிக்காவலுக்கு நிக்கற ஆளுகள்ல ஒரு பத்து பேர கூட்டிக்கிட்டு காட்டு பாதை பக்கமா வா. பெரிய மந்தைய ஓட்டிக்கிட்டு ஆரியநாட்டு பாதையில் போவ மாட்டனுவ. அனேகமா கச்சை கட்டிக்குப் பொறத்தாண்டயா மலை எறங்கி தெக்க போவனுகனு நெனைக்கேன். சீக்கிரம் போ. மலையெறங்கறதுக்குள்ளாற பிடிச்சி போடனும்’ என்று விட்டுக் கோலப்பனையும், அவனோடு இருந்து இன்னும் ரெண்டு இளைஞர்கலையும் கூட்டிக்கொண்டு கொட்டில் பக்கம் நடந்தான்.

மாமனார் வாலப்பகடைக்கு பின் பட்டன் வழிக்காவலை ஏற்றுக்கொண்ட பின், இந்த ஒரு வருடத்திற்குள் பொதியமலை பாதையா, நம்பி போலாமே என்று வணிகர்கள் சொல்லுமளவுக்கு பட்டன் வழிக்காவலை பலப்படுத்தியிருந்தான். இதனால், ஆரியங்காவில்லிருந்து, கொட்டாரக்கரை வரையுமே பாதுகாப்பான பகுதி என்று மக்களுக்கு நம்பிக்கை வந்திருந்தது. அப்படியிருக்கும் நிலையி யார் வேலையாய இருக்கும்? சட்டென நீலகண்ட தொட்டியாரை இரண்டு நாட்களுக்கு முன் பட்டன் பார்த்தபோது, அவர் சொன்னது நியாபகத்துக்கு வந்தது.

‘பட்டா, சாக்கிரதாயாய் இரப்பா… வன்னியக்கரந்தை தேவர்கள், உக்கிரம்பட்டி பாளையத்தில் இறங்கியிருக்கிறார்கள். பாளையத்தானுக்கும், தேவர்களுக்கும் ஏதோ பேச்சு நடப்பதாய, பங்கு பிரிப்பதாய், அரசல் புரசலாய் பேசிக்கொள்கிறார்கள்.’

ஆகா, ஆம். இது பாளையத்தானின் வேலையாய் தான் இருக்க வேண்டும். சமீப்பத்திய வழிக்கூலி தகராறுக்கு பாளையத்தான் நேரம் பாத்து காத்துக்கொண்டிருந்திருக்கிறன். மதுரை பிரதானியே சொல்லிவிட்ட பிறகு பாளையத்தானால் நேரடியாய் எதுவும் அப்போது பண்ண முடியவில்லை. இப்போது நேரடியாய் மோதமுடியாமல் பஞ்சத்தில் தவித்து வந்தவர்களை இங்கனுப்பி கழுத்தறுக்க பார்க்கின்றான் படுபாவி. வாலப்பகடை இருக்கும் போதே மாரி மழை பொய்த்து, காட்டுத்தீ அவ்வப்போது வந்து பயமுறுத்தினாலும், வணிகம் கொஞ்சமேனும் நடந்து கொண்டிருந்தது. மதுரையில் இருந்தும், நெல்வேலியில் இருந்தும், இன்னும் தூத்துக்குடி, விருதுநகரில் இருந்தெல்லாம் சரக்குகள் மலையாள நாட்டுக்குப் போய்க் கொன்டு தானிருந்தது. ஆனால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டு மழை வர மறுத்துவிட, வையையிலேயே ஆட்கள் நடந்து மறுகரைக்கு போய்க் கொண்டிருப்பதாய் சொன்னார்கள். இந்தப் பக்கம் சாரலேனும் வீசிச் சற்று பச்சை படிய வைத்திருக்கிறது. இன்னும் கீழே இறங்கினால் வெறும் செம்மண் புழுதி தான். ஆரிய நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு அப்பாலும் இந்தப் பஞ்சம் பலரை கொன்றிருக்கின்றது. மதுரை நாயக்க அரசர், படை மானியங்களையெல்லாம், பஞ்சம் பாட்டுக்குச் செலவழிக்கிறார் என்று மந்திரி பிரதானிகளுக்குள்ளேயே சிறு சலசலப்பும் ஓடிக்கொண்டிருக்கின்றது. கோட்டைகாவலை தவிர்த்து, பாளையகாவல்காரர்களை அந்ததந்த பாளையங்களே பார்த்துகொள்ள வேண்டும் என்று அரசர் உத்தரவிட்டுவிட்டார். அத்துனை பேரும் வெறும் கையோடு அவரவர் பாளையங்களுக்கு திரும்பியிருக்கிறார்கள். பாளையங்களில், மலையோர பாளையங்கள் மட்டும் காட்டுக்குள் இறங்கி கொஞ்சம் சமாளிக்கின்றன. மதுரையிலிருந்து தென்கிழக்கில் எல்லாம், மக்கள் சாரி சாரியாய் பஞ்சம் பிழைக்க மேற்கே திருவிதாங்கூருக்கும், வடக்கில் மைசூருக்கும் போய்க்கொண்டு இருப்பதாய் பட்டன் கேள்விப்பட்டிருந்தான். காடும் மலையுமாய் கிடக்கும் கச்சை கட்டி பாதையிலே இப்போது ஜனநடமாட்டம் அதிமாகியுள்ளது.

முன்பெல்லாம், தூத்துக்குடிப்பக்கமிருந்து உப்பைச் சுமந்து கொண்டு வரும் ஒரு சில மாடுகளும், மதுரை பக்கமிருந்து வரும் ஜவுளி வியாபாரிகளுமே இந்தப் பாதை வழியாய மலையைக்கடந்து கொட்டாரகரைக்கும், பின்னே அங்கிருந்து மலையாள நாட்டுக்கும் செல்வர். சமீபமாய் நடமாட்டம் அதிகரித்தபோது கந்தப்பகடை, அப்போ இந்த மழைக்கு முன்னயே வருச காணிய எடுத்தரலாம் போலயே என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால், பின்னர் தான் தெரிந்தது அத்தனையும் ஒரு வேளை சோற்றுக்கும் நாதியற்று பஞ்சம் பிழைக்கப் போகும் சனம் என. பாதையில் ஏறியவுடன் வழிக்கூலி கேட்டால் திகைத்து விழிக்கும் கண்கள்.

‘ஐயா சாமி, அந்தக் காசிருந்த நாங்க ஏனய்யா குஞ்சு குளுவானோட மலையேறிச் சாவறோம். கொஞ்சம் மனசெறங்குங்க சாமி’. கூப்பும் கரங்கள். பட்டன், மலைக்காவலுக்கு பொறுப்பான நீலகண்டன் தொட்டியாரோடு பேசினான். ‘சோத்துக்கு வழியில்லாதங்கிட்ட இனி வாங்க உசிரு மட்டும் தானய்யா இருக்கு’ என்று பட்டன் சொன்னபோது, ‘நீ உன் விருப்பப்படி செய்துகொள்ளடா முத்து. மதுரை தளவாயிடம் நான் பேசிக்கொள்கிறேன்’ என்றுவிட்டார். அன்றிலிருந்து, வழிக்கூலி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பகடை கூட்டம், பொதிகைமலை வழி செல்வோருக்கு காவலுக்கு சென்றது.

ஆனால், இது தான் உக்கிரங்கோட்டை பாளையத்தானுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. வழிக்கூலியில் பத்தில் ஒரு பங்கு என்பது பாளையம் பிரித்த நாளில் இருந்தே உண்டான முறை. அதற்குப் பதிலாய் நெல்லும், கம்பும் மலையேறி வந்து கொண்டிருந்தது. பட்டன் வழிக்கூலி வசூலிக்கவில்லை என்றானதும், பாளையம் தானியங்கள் அனுப்புவதை நிறுத்தியது. பின்னர் அது நடுவத்தவனின் ஆலோசனை என்று பட்டனுக்கு தெரிந்தது. பட்டனின் பெரிய அண்ணன் மதுரைக்கு போய்விட, நடுஅண்ணன் உக்கிரங்கோட்டைக்காரனிடம் கணக்கு வழக்கு பார்த்து வந்தான். அது ஒரு பெரிய கதை. பட்டன் பெரிதாய் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான்.

பட்டனுக்கு வாலப்பகடையை சந்தித்த நாள் நினைவிலோடியது. அன்று அண்ணன்மாரோடு கொட்டாரக்கரையிலிருந்து முத்துப்பட்டன் திரும்பி வந்துகொண்டிருந்தான். வருடம் பல ஆகிவிட்டது அவன் ஆரியநாட்டிலிருக்கும் அவன் வீட்டிலிருந்து கிளம்பி. அங்கே இங்கே எனத்திரிந்து கடைசியாய் கொட்டாரக்கரை மன்னர் ராமராஜனிடம் வந்து சேர்ந்திருந்தான். படித்தவன், சூது வாது இல்லாத நியாஸ்தன் என்று கண்டு கொண்டபின் பட்டனின்றி மன்னன் ஒரு முடிவெடுத்துவிட மாட்டான் என்று ஆயிற்று. எப்படியோ கேள்விப்பட்டு அண்ணன்மார் கொட்டாரக்கரை வந்து விட்டனர். பட்டன் வர முடியாது என அவர்களிடம் மறுத்த போதும், மன்னனை பார்த்து, ‘தந்தை படுக்கையில் கிடக்கிறார். அவனுக்காய் பெண் ஒருத்தி காத்திருக்கிறாள். வரச்சொல்லுங்கள் ஐயா…’ என்று காலில் விழுந்துவிட்டனர். மன்னனுக்கும் விருப்பமில்லை என்ற போதும் சென்று வா, பட்டா என்று உரிமையாய் சொன்னதாலேயே பட்டன் கிளம்பினான். அரசறடித்துறை வந்து, களைத்துப்போய் சத்திரத்தில் ஒன்றில் அண்ணன்கள் படுத்துவிட்டனர். பட்டன் தாகத்தில் தண்ணீர் தேடி வந்தபோது தான், கொன்றை மலர்களையெடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக்கொண்டிருந்த திம்மக்காவையும் பொம்மக்கவையும் பார்த்தான். பக்கத்தில் இருந்த குளத்தில் சூரிய வெளிச்சம் பட்டு அவர்களின் மாந்தளிர் நிற சருமம் ஒளிர்ந்தது கொண்டிருந்தது.

யாரோ ஒருவன், தங்களை பார்பதை பார்த்த பெண்களுக்கு வெக்கம் வந்துவிட்டது. சட்டெனத் தங்களின் மூங்கில் கூடைகளை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு விரைவாய் நடக்கத்தொடங்கினர். பட்டன் இருகையை விரித்துகொண்டு அவர்கள் முன் சிரித்தபடி போய் நின்றான்.

‘ஐய்யோ சாமி, இது என்ன கூத்து’ என்றாள் அவனைப்பார்த்த திம்மக்கா.

அம்மா, வழிப்போக்கன் நான். வழியே போகையில், குயில் சத்தமோ என்று உங்கள் குரல் கேட்டு வந்தேன். ஆனால், குளத்தில் கிடக்கும் அல்லியை விட அழகான இரு பெண்கள் எனக்கொண்டேன். உங்களையே கலியாணம் கட்ட எண்ணம் கொண்டேன் எனச் சொல்லிப் பட்டன் சிரித்தான்.

பெண்கள் இருவருக்கும் கன்னம் சிவந்துவிட்டது. பொம்மக்கா, திம்மக்காவின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டாள். தலை குனிந்திருந்த போதும் அவர்களின் சிரிப்பு பட்டனுக்கு தெரிந்து உற்சாகம் தொற்றிக்கொண்டது. திம்மக்கா, சற்றே தலை சாய்த்து பட்டனைப்பார்த்தாள். பின், ‘சாமி, நீயோ சாம்பசிவம் போல இருக்க. சக்கிலிச்சி எங்கள கட்ட உங்க குலம் தான் உடுமா, எல்ல எங்க குலம் தான் சம்மதிக்குமா. வழி விடு சாமி’ என்றாள்.

‘இல்லையம்மா, ஐயர் குல கொமறிகள்ல இருந்து, அரசர் குல கொமறிக வரப் பாத்து வந்தவியன் நான். உங்கள பாத்தே, தலை ஊமத்தையாச்சி எனக்கு.’ என்றவாறு அவள் கையைப் பிடிக்கப் போனான். சட்டென ஒரு உதறு உதறி, இருவரும் ஒரே நேரத்தில் காட்டுக்குள் ஓடத்தொடங்கினர். பட்டனும், தன் வேட்டியை சுருட்டிக்கொண்டு பின்னால் துரத்தினான்.

பெண்கள் நேரே போய் அவர்களின் தகப்பன் வாலப்பகடையிடம் சொல்லிவிட்டனர். பெண்களின் கண்களைக் கவனிக்கவில்லை பகடை. எவனடா அவன் என் பிள்ளைகளைத் தொடத்துணிந்தவன் எனக் கருக்கறிவாளை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டான். பெண்களின் பின்னால் வந்த பட்டனோ காட்டுக்குள் வழிதவறி விட்டான். அங்குமிங்கும் அலைந்தவன், பெண்களைக் கண்டு தூரம் போயிருந்த பசியும் தாகமும் ஒன்று சேர்ந்து வந்து பிடிக்க, சற்றே கண்கள் இருண்டு வரப் பாதையில் படுத்து விட்டான். வாலப்பகடை முதலில் பார்த்தபோது ஏதும் அடிபட்டு இறந்துவிட்டானா என்று தான் நினைத்தார். ஒரு சிறிய கல்லை எடுத்துப் பட்டன் மேல் வீசி, ‘எலேய், எந்திரியப்பா… யாராது இங்கே வந்து கிடப்பது?’ என்றார்.

பட்டன் மெல்ல தனக்குள் சிரித்துக் கொண்டான். பகடையோடு ஊருக்குள் வந்த பட்டனை பார்க்க ஊர் சனமே கூடிவிட்டது. திம்மக்காவும், பொம்மக்காவும் ஏதோ ஒரு வீட்டினுள் பதுங்கிக் கொண்டனர். பட்டன், சுவரசியமாய் அங்குமிங்கும் பார்த்தவாரு மன்றுக்கு வந்தான். ஊர் கூடி விசாரித்தபோது பட்டன், வாலப்பகடை மகள்களை மணம்புரிய வந்ததாகவும், ஊர் பார்த்து, பெற்ற வாலப்பகடை பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டான். சிவந்த தோலில், வெண்ணிற பூணூல் அணிந்து நெற்றியில் பட்டையிட்டு சிவனே கச்சை கட்டி வந்தது போல் நின்றிருந்த பட்டனை ஊரே வேடிக்கை பார்த்தது. வாலப்பகடை பெண்கொடுக்க தயங்கியபோது, பட்டன், ஐயா காட்டுனா உம்ம மவளுகள தான்னு முடிவு பண்ணீட்டேன்.அதுக்கு நானென்ன செய்யோனும்னு மட்டுஞ்சொல்லுங்க என்றுவிட்டன். பகடையோ, சாமி, உன் பூணூல அறுத்துட்டு, குடுமிய மழிச்செறிஞ்சி, எங்கொலத்தில ஒருத்தனா நாப்பது நாள் மாடறுத்து தோலெட்டுக்க முடியுமா உன்னால? அப்படி மட்டும் இருந்திட்டேனா, நான் முன்ன நின்னு நடத்தி வைக்கிறேன் உன் கல்யாணத்த என்றார். பட்டன், ‘ஹா, அதுக்கென்ன ஐயா’ என்று விட்டான். விசயம் தெரிந்தபோது, பெரியவனைக் காட்டிலும் நடுவத்தவன் தான் ரொம்ப குதித்தான். கல்லெடுத்து மண்டையில் போட்டுக் கொல்கிறேனடா உன்னை என்றான். மானம் போச்சே, குடும்பத்துக்கான மரியாதை போச்சே எல்லாத்துக்கும் நீத்தாண்டா சக்கிலி பயலே காரணம் என்று பகடையை அடிக்கப்போனான். பட்டன் இடையில் வந்து தடுத்தான். அன்று வாலப்பகடை கண்காட்டியிருந்தால் இருவரையும் துண்டு துண்டாய் வெட்டிப்போட்டிருப்பார்கள் பகடை படையினர். ஆனால் அவர் அமைதியாய் இருந்துவிட்டார்.

அதன் பின்னும் ஒருநாள் அவன் வந்து பேசினான். ‘மாடு திங்கறவங்கூட உனக்கென்னடே சகவாசம்’ என்றபோது, ‘அண்ணே, மாடு பாலேல்லாம் நாம் குடிச்சி, பாலில்லையென்னு ஆன பின்னே தான் அவெங்ககிட்ட போவுது. அப்புறம் அவெங்க மாடு தின்னாம எப்பெடியண்ணெ உசிர் வாழறது’ என்றான். ‘ச்சீ ‘என்றவன், ‘ஏன்டா வயலுலே எலி, நத்தையும் நாம தரமா தாம் புடிச்சி திங்கறானுவள இவனுக’ என்றான். சிரித்தபடி பட்டன், ‘ஆமாணா, வயலுல விளைஞ்சதெல்லாம் நாம கொண்டு போறதால தான் வழியில்லாம இத தின்ன வேண்டி இருக்கு’ என்றான். அதன் பின்னும், சில மாதங்களுக்குக் கெஞ்சலும், மிரட்டலுமாய் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால், ஆரியநாட்டில் பட்டனின் கல்யாணத்தை முன்னிட்டு பட்டன் குடும்பத்தை ஊர் தள்ளி வைத்துவிட்டபின், குடும்பம் பிரிந்து தந்தை சேதுபதியிடம் செல்ல, அண்ணன் மதுரைக்கும், இவன் இங்கும் வந்து சேர்ந்தபோது கொல்லப்பட வேண்டியவன் இவன் என்று குடும்பம் முடிவுக்கு வந்திருந்தது.

இரண்டு வருடம் கழித்து, வாலப்பகடை, வழிக்காவலுக்கு சென்றவர், ஏதோ வண்டு கடி என்று படுத்து, நாலே நாளில் இறந்து போனார். ஆனால் அதற்குள் அவருக்கடுத்து பட்டன் தான் என்ற நிலைக்கு முத்துப்பட்டன் வந்திருந்தான். பொதியமலையின் மலைக்காவல் நீலகண்ட தொட்டியானிடம் இருந்தது. அவர் பட்டனை வரச்சொல்லி பேசினார். அரசறடித்துறையிலிருந்து கொட்டாரகரை வரை உள்ள மலைப்பாதைக்கு பட்டன் காவலிருப்பான் எனவும், பகடை இருந்தபோதிருந்தது போலவே உப்பு கொண்டு செல்வோரிடம் இரண்டு கழஞ்சும் பிறரிடம் நாலு கழஞ்சும் வழிக்கூலியாய் பெறும் உரிமையைப் பட்டனுக்கு தருவதென்றும் முடிவாகி, நீலகண்டன் மதுரை தளவானிக்கு சேதி சொல்லி ஓலை அனுப்பினார். அங்கிருந்து அனுமதி வந்து, ஒரே வருடத்தில் பொதியை மலை வழி கொள்ளை பயமில்லாதது என்று ஆனபோது பட்டனும், பட்டவராயனாயிருந்தான். ஒரு சில இடைஞ்சல்கள் என்றாலும் அதைத் தாண்டி உக்கிரங்கோட்டையிலிருந்து நடுவத்தவனால் ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. தானியத்தை நிறுத்தியபோது, கேள்விப்பட்ட மதுரை வணிகர்கள், பட்டன் சார்பாக நாயக்க மன்னனிடம் முறையிட்டார்கள். பஞ்சகாலமுழுவதும் உக்கிரங்கோட்டையிலிருந்து தானியங்கள் மலைக்குச் செல்ல வேண்டுமென ஆணை வந்தது.

ஆனால், பஞ்சமும், பட்டனின் தாரளமும் நடுவத்தவனுக்கும், பாளையத்தானுக்கும் சேர்த்து ஒரு வாய்ப்பைக் கொண்டு வந்தது. பாண்டியர் படையில் இருந்த தேவர்கள், மதுரையில் நாயக்கர் ஆட்சி வந்தபின் பெரிதும் உதாசீனப்படுத்தப்பட்டார்கள். வயலில், ஊர் காவலுக்கு என்றெல்லாம் அங்கங்கு சிதற, பஞ்சம் அதற்கும் வழி இல்லாமல் செய்துவிட்டிருக்கின்றது. வன்னியக்கரந்தையிலிருந்து தேவர்கள் இருபது பேர் உக்கிரங்கோட்டைக்கு வந்தபோது பாளையத்தானுக்கு கொஞ்சம் யோசனையாய் தான் இருந்தது. ஆனால் நடுவத்தவன் தான் இவர்களைப் பொதியை மலை பக்கம் இறங்கச்சொல்லலாம். களவுக்கு களவும் ஆச்சி. பட்டனை மூக்கறுப்பதாயும் ஆச்சி என்றான். கிடைப்பதில் பாதி பாளையத்தானுக்கு என்று முடிவாகி மறவர்கள் மலையேறினர். ஆனால், பகடை படை நேர்த்தியானதாய் இருந்தது. வழியில் இடைக்கு இடை காவல், பகலிரவெல்லாம் இருந்தது. நாலு நாளுக்குப் பின்னர், மறவர்க்கூட்டம், வழிக்கொள்ளையை விட ஊருக்குள் சென்று கொள்ளையடிப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்தது.

இத்தனை கதையையும் யோசித்த போதும் கால்கள், குதிரையென வேகமாய் நடந்து கொண்டே இருந்தது. உடன் வந்தவர்கள் எப்போதோ பின்னுக்கு போயிருந்தனர். பட்டன் மீண்டு ஒரு பெரு மூச்சு விட்டவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான். காத்திருக்க பொழுதில்லை. வலயத்தையும், ஈட்டியையும் கை மாற்றிப் பிடித்தவன், காட்டுப் பாதையில் நுழைந்தான். தூரத்தில் மந்தை செல்வது தெரிந்தது. பட்டன் ஓடிய வேகத்திலேயே வலயத்தை வீசி இருவரை வீழ்த்தினான். மறவர்களுக்கு இருட்டில் பட்டன் பேயுருவாய் தெரிந்தான். கண்ணிமைக்கும் பொழுதில் நால்வர், ஐவர் என வெட்டுப்பட்டதை பார்த்து, முன்னால் இருந்த கும்பல் பசுக்களை அப்படியே விட்டுவிட்டு ஓடத்தொடங்கியது. ஆண்டிப்பகடை மகன் பின்னால் ஓடி வந்தவன், மாடுகளைப் போவ், போவ் என்று திரட்டி ஊர்பக்கம் திருப்பத்தொடங்கினான். ஒருவரும் இல்லை என்ற பின் மந்தையின் பின்னால் சென்ற பட்டன், ‘லேய் மாடுகள அடை நா இந்தா இந்த ரத்தத்தியெல்லாம் கழுவிட்டு வாரேன்’ என்று குளத்துப்பக்கம் திரும்பி வந்தான்.

‘சதக்’ என்று தன் முதுகில் கத்தி இறங்கும் சத்தம் தெளிவாக முத்துப்பட்டனுக்கு கேட்டது. முதலில் காய்ச்சிய இரும்பால் முதுகை தீண்டியது போன்றதொரு எரிச்சல். பின் சூடான இரத்தம் வழிந்து உண்டாகும் மெல்லிய வெதுவெதுப்பு. பட்டன் முழங்காலை ஊன்றி முகத்தைத் திருப்பாமல் தன்னை குத்தியவனை நோக்கித் தன் வாளை வீசினான். சரியாகக் கழுத்திலேயே பட்டிருக்க வேண்டும். ‘ஹக்’ என்ற ஒலியோடு உடல் சேற்றில் விழும் சப்தம் கேட்டது.

முத்துப்பட்டன் வாளை மண்ணில் அழுத்தி ஊன்றி எழுந்தான். இரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. திரும்பித் தன்னை குத்தியவனைப் பார்த்தான். குட்டையான உருவம். மெலிந்த உடல். பாதி துண்டான கழுத்திலிருந்து இரத்தம் பீச்சியடித்து கொண்டிருந்தது. கால்களும் கைகளும் இழுத்துக்கொள்ள, துடித்துக்கொண்டிருந்தான். மறவர் கூட்டத்தோடு வந்த வன்னியனாய் இருக்க வேண்டும். சண்டையின்போது தப்பித்து ஒளிந்து கொண்டு, இப்போது மாட்டு கொட்டிலிலிருந்து பின் தொடர்ந்து வந்திருக்க வேண்டும். தூரத்தில் காட்சியும், பூச்சியும் பாய்ந்து வருவது தெரிந்தது. முத்துப்பட்டனுக்கு வெறும் இருட்டாகத் தெரிந்தது. தள்ளாடியபடி கீழே சாய்ந்தான்.

வலியில் நெளிந்த பட்டனுக்கு சட்டென மிதப்பது போலிருந்தது. மெல்லிய காட்டுமல்லி வாசம் வந்தது. ஆ… பொம்மாக்காவா அது. பட்டன் சிரமப்பட்டு கணகளை திறந்தான். காலடியில் திம்மக்கா கிடந்து அழுவதும், தன் தலை பொம்மக்காவின் மடியில் இருப்பதும் பட்டனுக்கு தெரிந்தது. ‘இந்தக் காட்டுக்குள்ள கிடந்தவளுகள, தேடி வந்தியே ஐய்யா… நல்லசாதிவிட்டு, இந்தச் சிறுக்கிமவளுகளுக்காவ வந்து இப்பிடி கெடக்கியே ஐய்யா’ என்று திம்மக்கா கதறுவது பட்டனுக்கு மெலிதாய் கேட்டது. அவன் கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டின் ஆளத்தில் இறங்கிக்கொண்டிருந்தான். ஆரிய நாட்டின் வயல்வெளிகள் அவன் காலுக்குக் கீழே காற்றில் அசைந்தது குறுகுறுப்பாய் இருந்தது. கொட்டாரக்கரை லட்சுமி குளத்து தண்ணீரை தும்பிகையில் எடுத்து இவன் முகத்தில் பீச்சினாள். ‘எலேய், எந்திரியப்பா… யாராது இங்கே வந்து கிடப்பது?’ வாலப்பகடையின் குரலா அது? பட்டனுக்கு உதட்டில் மெல்லிய புன்னகை அரும்பியது. வாலப்பகடை! எழுந்து நின்றான் பட்டன். எங்கும் பச்சை பொங்கும் காடு. தூரத்தில் ஒற்றை கொன்றைமரம் மட்டும் பூத்துக்குலுங்கி கொண்டிருந்தது. எங்கிருந்தோ இரண்டு பெண்கள் பாடும் குரல் கேட்டது. பட்டன் அப்படியே முற்றிலும் இருளினுள் மூழ்கினான்.

குறிப்பு:

நா. வானமாமலை பதிப்பித்த முத்துப்பட்டன் கதை நாட்டுபுற பாடல் புத்தகத்தின் அடிப்படையில் அமைந்தது கதை இது.

Best of 2018

Here’s my list of best’s in 2018

Best photo of the year:

Credits: National Geography Indian Street Photography Page – Instagram

Best professional photo of the year:

 Martin Stranka, Czech Republic National Award. PC: borepanda.com

Best research article of the year:

Public relations and artificial intelligence: It’s not (just) about robots by ChrisGalloway and LukaszSwiatek

This paper outlines several key roles that AI may play in future, based on trends in other industries, and considers the implications for public relations practitioners, their clients and employers. It therefore launches a dialogue about the diversity and extent of AI’s uses in public relations practice. The paper argues that, to date, commentators have placed too much emphasis on AI’s potential for task automation; AI’s broader technological, economic and societal implications for public relations warrant greater critical attention. This does not imply that practitioners need become expert technologists; rather, they should develop a sufficient understanding of AI’s present and potential uses to be able to offer informed counsel.

https://doi.org/10.1016/j.pubrev.2018.10.008

Best article of the year:

Nehru Knew Something You Don’t, Mr Modi

Instead of embracing Nehru’s ideas of pluralism and civilised discussion, Modi’s rhetoric fears and abhors them.

https://thewire.in/politics/nehru-knew-something-you-dont-mr-modi

Best print media of the year: The wire

Best science magazine: Quanta Magazine

Best tamil weekly: Andhimazhai

Best tamil newsmedia: Tamil Hindu

Best meme of the year:

Best cartoon of the year:

Social media of the year: Twitter

Best sports moment of the year: Pujara’s hundreds in Australia

https://www.youtube.com/watch?v=bdDL03W1q0o

Star of the year: Harman Preet

Best book of the year: Brief answers to big questions by Stephen Hawking (Buy in Amazon.in)

Best fiction of the year: Krishnanin aayiram naamangal by Pogan Shankar (Buy in Amazon.in)

Best short story of the year: Puthuvellam by Jeyamohan

Best tamil movie of the year: 96

Best south indian movie: Koode

https://youtu.be/y4FvRr8ABh4

Best hollywood movie: Firstman

Best bollywood movie: Karwaan

Best movie of the year: October

Best youtube channel: Nakkalites

Best video of the year:

Best web series (tamil): Vellairaja

Best web series (general): Mirzapur

Best song of the year: Inkem Inkem

Game of the year: Ludo King

Productivity App of the year: Pomodoro – Minimalistic Material Timer

Travel app of the year: Ola

Best eReader: Kindle Lite

Best Tools app: Google Lens

Best payment app: Google pay

Best Photo editor: Snapseed

Best messenger: Telegram

Best Fitness app: Nike training club

Best multimedia app: VLC

Best smart phone (flagship): Oneplus 3T (NDTV Review)

Best smart phone (Budget) : Poco F1 (NDTV Review)

Best laptop of the year: HP Envy 13t (Review)

Processor of the year: AMD Ryzon 5 2600X (Review)

Best Smart TV: MI TV

Best OS of the year: Ubuntu 18.04 LTS

என்னோற்றாள்…

சித்ராவுக்கு எங்கோ கோவில் மணி ஒலிப்பது போல கேட்டது. அம்மன் கோவில் கொடையிலா இருக்கிறாள்? வியாபாரிகளின் சத்தமும், குழந்தைகளின் கூச்சலுமாக திடலே புழுதி பறந்து கொண்டிருக்குமே, ஏன் இத்தனை அமைதி? மஞ்சள் சேலை அணிந்த பெண்கள் தீர்த்தக்குடம் தூக்கிக்கொண்டிருந்தனர். அவளுக்கு மஞ்சள், சிவப்பு போன்றவையே பிடிப்பதில்லை. ஆனால் எப்போதும் கொடைக்கு கிடைப்பதென்னவோ மஞ்சள் சிகப்பு பாவடை சட்டை, வளர்ந்ததும் அதே வண்ண சுடிதாரோ, பாவடை தாவணியோ என்றானது. அவளுக்கு பிடித்த கொடைக்கு அவளுக்கு பிடித்த பச்சை பாவடை அணிய வேண்டுமென்பது அவள் கனவு. அவளுக்கு அப்பா நியாபகத்துக்கு வந்தார். அவள் கேட்டதை ஒரு போதும் வாங்கி தந்திடாத, அவள் ஆசைகளை ஒரு போதும் நிறைவேற்றிவிடாத அப்பா. அவள் அப்பாவிடம் கேட்ட, அவர் ஒருபோதும் வாங்கித்தந்திடாத பச்சை பாவடை சட்டையின் நியாபகமும் வந்தது. மழை நீர் பட்டு பொன் என மின்னும் சோளத்தின் மரகதப்பச்சை. ஏன் அப்பா என் ஆசைகளை ஒரு போதும் புரிந்துகொள்ளவில்லை என நினைத்தாள். அதிருக்கட்டும், நீ என்ன புரிஞ்சுக்கிட்டியா என்ற கண்மணியின் குரல் தூரத்தில் எங்கிருந்தோ கேட்டது.

சித்ரா திடுக் என விழித்துக்கொண்டாள். செல்போனில் அலாரம் ஐந்து மணி ஆகிவிட்டது என்பதை அடித்துச்சொல்லிக்கொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்து, கூந்தலை முடிந்து கொண்டே பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த கண்மணியை பார்த்தாள். உறக்கத்திலும் ஒடுபவள் போல முகம் தீவிரமாய் இருந்தது. பிடிவாதக்காரி. நம்மை விடவா என்று நினைத்துக்கொண்டாள். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பரவியது. அதை தவிர்க்க விரும்புபவள் போல ‘ஹீம்’ என்று சேலையை உதறியபடி, கட்டிலை விட்டு கீழே இறங்கி, அறையில் இருந்து வெளியே வந்தாள். கூடத்தில் படுத்திருந்த அம்மாவும் அலாரா சத்தத்துக்கு எழுந்து விட்டிருந்தாள். மெளனமாக சித்ராவை பார்த்துவிட்டு, படுக்கையை சுருட்டிக்கொண்டு இருந்தாள். ஒரு போதும் பேசதவள். சித்ரா கணவனை உதறி வீட்டுக்கு வந்த நாளிலும் இதே பார்வையைத்தான் வீசினாள். பெரியம்மா தான் பொறுக்கமாட்டாமல் ஊமக்கோட்டனே நீயாவது சொல்லித்தொலையேண்டி என்று கத்தி கொண்டிருந்தாள். அதற்கும் அம்மா ஒன்றும் பேசவில்லை. அப்போது பேசி இருந்தாலும் ஒன்றும் நடந்திருக்கப்போவதில்லை. பேசுவதற்கு அவளுக்கு வாய்த்த தருணங்களில் ஒரு வேளை பேசி இருந்தால் இப்போது சித்ராவின் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும்.

சித்ரா, பால் பீச்சுவதற்காக பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். தூரத்தில் தொழுவத்தில் கட்டியிருந்த செவலை அந்த இருட்டிலும் இவளை அடையாளம் கண்டுகொண்டு மெலிதாக ‘ம்மே’ என்றது. பாத்திரத்தை வெளி சுவரில் வைத்துவிட்டு, அருகில் கிடந்த சீவமாரையும், சாணிக்கூடையையும் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். செவலையின் குட்டி வெறித்த கண்களுடன், இவளையே பார்த்தது. அதனை கட்டியிருந்த கயிறு பல வாறாக அதன் கால்களிளேயே சுற்றி இருப்பது தெரிந்தது. அதன் கண்களை பார்த்தவளுக்கு கண்மணியின் நியாபகம் தான் வந்தது. பதினோரு வயதுதான் ஆகின்றது. எதைப்பற்றியும் பயமில்லை. எதைப்பற்றியும் கவலை இல்லை. தான் இந்த வயதில் எப்படி இருந்தோம் என வியந்தாள். கிழிந்த பாவாடையும் சட்டையுமாக காய்ந்து போன சோளக்காட்டுக்குள் ஆடு மேய்க்க வரும் பையன்களுடன் ஓடி ஜெயித்தது தான் நினைவில் இருந்தது. கண்மணிக்கு ஓட்டமெல்லாம் பிடிப்பதில்லை. ஏன் வெயிலிலேயே அவள் செல்வதில்லை. அவள் தகப்பனை உரித்து பிறந்திருக்கிறாள். இவளைப்போலன்றி கணக்கென்றால் உயிர் அவளுக்கு. வகுப்பில் முதலிரண்டு இடங்களுக்குள் வந்து விடுகிறாள். ‘செம ப்ரிலியண்டுங்க உங்க பொண்ணு. நல்லா படிக்க வைக்கங்க’ என்ற கார்த்திகா டீச்சரின் குரல் நியாபகத்துக்கு வந்தது. ஆம். அது மட்டுமே அவளால் முடிந்தது. அவள் அடையாத உயரங்களை அவள் மகள் அடையவேண்டும். அவமானமே அன்றாடமாகிப்போன இந்த வாழ்வில், அவள் வாழ்வதன் ஒரே அர்த்தம் கண்மணி தான்.

கண்மணியைத் தூக்கி கொண்டு சித்ரா பிறந்த வீட்டுக்கு வந்த போது அவளுக்கு மூன்று வயது. தனிமை இறுகும் தருணங்களில் கண்களில் தானாக கண்ணீர் வழியும். ‘ம்மா, அழாதமா… நான் உனக்கு சாக்கி வாங்கி தரட்டா’ என்று மழலையில் கொஞ்சும் கண்மணி தான் அவளை எல்லாவற்றில் இருந்தும் மீட்டாள். ஆனால், அவள் வளர, வளர, இருவருக்கும் இடையே ஒரு மெளன சுவர் மெலிதாய் எழும்பத்தொடங்கி விட்டது. இருவருக்குமான பிணைப்பு சண்டை, அவளின் பிடிவாதம், இவளின் தவிப்பு, பின் மகளுக்காக என இறங்கி சமாதானமடைகையில் மீண்டும் சண்டை எனத்தொடர்ந்து ஊசலாடிக் கொண்டு இருந்தது. இப்படித்தான் கடந்த ஒரு வாரமாக பிறந்தநாள் கொண்டாட வேண்டுமென சிணுங்கல். தெற்காளூர் ரவியின் பையனுக்கு போன வாரம் பிறந்தநாள். வகுப்பில் கூடப்படித்த எல்லோரையும் கூப்பிட்டிருந்தான். இவள்தான் சாயங்காலம் சொசைட்டிக்கு பால் ஊற்றச்செல்லும் முன் சைக்கிளில் கொண்டுபோய் அவன் வீட்டில் இறக்கிவிட்டு வந்தாள். திரும்ப கூட்டிவரும் போதே கோரிக்கைகள் ஆரம்பமாகின. அம்மா, எனக்கு அடுத்த மாசம் பிறந்தநாள் வருதுள்ள, நானும் என் ப்ரெண்ட்ஸ கூப்பிடட்டா என்றாள் கண்மணி. இவள் ஒன்றும் சொல்லவில்லை. மறுநாள் காலையில், அம்மாயி எனக்கு அடுத்த மாசம் பிறந்தநாள் வருதுள்ள அப்ப என் எல்லா ப்ரெண்ட்ஸயும் வீட்டு கூப்பிட போறேனே என இவள் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருப்பது கேட்டது. இவள் உள்ளே நுழையவும் கண்மணி தலையை குனிந்து கொண்டாள். அம்மா வழக்கம் போல வெறுமையாய் இவளைப்பார்த்துவிட்டு அடுப்பில் வெந்துகொண்டிருந்த தோசையை திருப்பிப்போட்டாள்.

கறந்த பாலை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த போது கண்மணி எழுந்து விட்டிருந்தாள். இவளைப்பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டாள். சமையல்கட்டில் இருந்த அம்மாவிடம் பாலை கொடுத்துவிட்டு வெளியே வந்து, கண்மணியை பார்த்து டீ குடிக்கறியாடி என்றாள். அவள் ஏதும் சொல்லாது, புத்தகப்பையை நோண்டிக்கொண்டிருந்தாள். கோபமாக இருந்தது. என்ன பெண் இவள்? ஒரு தற்காலிக பி.டி. ஆசிரியைக்கு என்ன சம்பளம் இருந்து விட போகிறது. மாதம் 7500 வருகின்றது. சொசைட்டியில் இருந்து ஒரு 3000 வரும். அதும் பேங்கில் தான் போடுவார்கள். அதை எடுக்க கூட யாராவது தயவு வேண்டும். ஆண்கள் தான் நகருக்கு செல்பவர்களாய் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் பேசினாலோ அவர்களின் மனைவிமார்களின் சாடைப்பேச்சிற்கு ஆளாக வேண்டும். கணவனை பிரிந்திருப்பவள் என்றாலே எல்லோருக்கும் ஒரு இளக்காரம் வந்து விடுகின்றது. ஆண்களுக்கோ இவளே வந்து மடியில் விழுவாள் என்ற எண்ணம். பெண்களுக்கோ தங்கள் வீட்டு ஆணை மயக்கி கூட்டிச்செல்வதே இவள் நோக்கம் என சந்தேகம். ஊருக்குள் இவளைப்பற்றிய பேச்சுகள் தெரியாததல்ல. சொசைட்டி ஆறுமுகத்தை இவள் வைத்திருப்பதாய் ஒரு பேச்சை இவளே கேட்டு இருக்கிறாள். கேட்டபோது இவளுக்கு முதலில் தோன்றியது அது மட்டும் உண்மையாய் இருந்தால் அவ்வளவு சிரமப்பட்டு சைக்கிளில் பால் கேனை ஏற்ற வேண்டி இருக்காது என்பதே. ஒவ்வொரு நாளும் கேனை ஏற்றி கட்டி, சைக்கிள் மிதித்து, மீண்டும் இறக்கி ஊற்றி எடுத்து வருவதன் வேதனை அவளுக்குத்தான் தெரியும். ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்ற எண்ணம் வரும் தோறும் தன் தந்தையை நினைத்துக்கொள்வாள். அவரைப்போன்று இருக்க கூடாது. என் மகளை நான் சிறப்பாய் வளர்ப்பேன் என்றெண்ணிக்கொள்வாள்.

கண்மணியின் அடம் தொடங்கியது எப்போது என சரியாக நியாபகம் இல்லை. சில நேரங்களில் தன் தகுதிக்கு மீறி அந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்தது தான் தவறோ என்று தோன்றும். அவ்வாறான ஒரு நாளில் தான் பணத்தை கண்மணியிடம் கொடுத்தே எண்ணச்சொல்ல ஆரம்பித்தாள். அதுல 7500 இருக்கா பாப்பா? ஒரு 2500, உன்னோட நகை சீட்டுக்கு, 2000 உன் பேருல இருக்கற சேவிங்ஸ் அக்கெளண்டுக்கு, 2000 பீசுக்கு, 4000த்த அம்மாயிட்ட இந்த மாச செலவுக்கு கொடுத்திடு என்பாள். இவள் இருபதை எட்டுமுன் ஒரு 10 பவுனாவது சேர்த்துவிட வேண்டும். ஒருவேளை ஏதாவது நல்ல காலேஜிக்கு போனாலோ, அல்லது கல்யாண செலவுக்கென்றோ ஒரு ரெண்டு மூணு இலட்சத்தையாவது சேர்த்து விட வேண்டும். இது தான் சித்ராவின் இப்போதைய இலக்கு. ஆனால் இதையெல்லாம் புரிந்துகொள்ளும் வயது இல்லையே. டிசைன் செருப்பு, புது புத்தகப்பை, வாட்ச் என இப்போது இந்த பர்த்டே கொண்டாட்டத்தில் வந்து நிற்கின்றது. இரண்டு நாளாக எப்போதும் பணம் எடுத்து வந்து தரும் மாரிப்பண்ணனை காணவில்லை என்று நேற்று சித்ராவே வேடசந்தூருக்கு பணம் எடுக்க போனாள். திரும்பி வருகையில் ஒரு பேக்கரியில் கேக் விலைகளை விசாரித்துக்கொண்டாள். கேக், புது ட்ரெஸ், யாரவது வந்தால் அவர்களுக்கு திண்பண்டம் என எப்படியும் ஒரு இரண்டாயிரம் செலவாகிவிடும் போலிருக்கின்றது. எங்கு எதை குறைக்கலாம் என பேருந்தில் யோசித்தபடியே வந்தாள். எதுவுமே தோன்றவில்லை. கடன் கேட்கலாம். கிடைக்கவும் வாய்ப்புண்டு. அதை எப்போது திருப்பி தருவது?

அம்மா வைத்த டீயை குடித்து முடித்தவள், எழுந்து குளிக்கப்போனாள். நாளை வேறு திண்டுக்கல்லுக்கு செல்ல வேண்டும். ஸ்போர்ட்ஸ் மீட். ஒரு காலத்தில் சித்ராவுக்கு ஸ்போர்ட்ஸ் மீட் என்றால் ஒரு மாதத்துக்கு முன்பே உற்சாகம் தொடங்கிவிடும். குறுகுறுப்பான பையன்களின் கண்கள், அதட்டும் பி.டி. சார்கள், எல்லாவற்றையும் விட, வெல்லும் போது கிடைக்கும் கைத்தட்டு என அது வேறு ஒரு உலகம். இப்போதெல்லாம், மாணவர்களை அழைத்துச்செல்லும் பதட்டம் மட்டுமே. மேலும் இவ்வாறு சென்றால் எப்படியும் திரும்பி வர இரவாகிவிடும். பால் எடுத்துச்செல்ல முடியாது. யாரையாவது அதற்கு கெஞ்ச வேண்டும். முதல் முறை ஹெச்.எம். இவளை பழனிக்கு ஒரு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து சென்று வர சொன்னபோதே தயங்கினாள். மேல் ஸ்டாப் யாரையும் அனுப்பலாமே சார் என்றாள் தணிவான குரலில். யம்மா யார அனுப்பனும் அனுப்பக்கூடதுனெல்லாம் நான் தான் முடிவு பண்ணணும் நீ எனக்கு அட்வைஸ் பண்றியா என அந்த கிழவர் சீறினார். இதே ஆள் இரண்டு வாரங்களுக்கு முன் அனுப்பியிருந்த குறுஞ்செய்திகள் நியாபகத்துக்கு வந்தன. சித்ரா பேசாமல் வெளியே வந்துவிட்டாள். இப்போது எல்லாம் பழகிவிட்டது. மதிய உணவு வேளைகளில் இவள் தனியாக அமர்ந்து சாப்பிடும் போது, ஓரக்கண்ணால் இவளைப் பார்த்துக்கொண்டே இவளைப் பற்றி பேசப்படும் கிசுகிசுப்புகள் அலுத்துவிட்டன.

கண்மணியை பஸ் ஏற்றிவிட்டு, சித்ரா பள்ளிக்குள் நுழைந்த போது மணியடிக்க இன்னமும் நேரம் இருந்தது. நேராக அலுவலகத்திற்குள் நுழைந்தவள், சரவணன் சார் சீட்டுக்கு போனாள். அவர் ஒரு வகையில் இவளுக்கு சிற்றப்பா முறை ஆகின்றது. கொஞ்சம் கனிவானவர். அவசரத்திற்க்கு கை மாற்று வாங்குவதெல்லாம் அவரிடம் தான். இவளை பார்த்ததும் என்ன என்பது போல பார்த்தார். ‘சார், ஒரு ரெண்டாயிரம் வேணும். ஒண்ணாம் தேதிக்கு மேல தந்திடறேன்’ என்றாள். ‘ரெண்டாயிரமா? என்னம்மா மாசக்கடசி அதுவுமா? எதும் பிரச்சனையா?’ என்றார். ‘இல்ல சார். பாப்பாக்கு பொறந்தநாள் வருது. புது ட்ரெஸ் வேணும்னு ஒரே அடம் அதான்’ என்றாள். ‘இந்த காலத்து பிள்ளைகளே இப்படித்தான்’ என்று சலித்துக்கொண்டவர், உள் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாய் தாள்களை எடுத்தார்.

மாலை வீட்டுக்குள் நுழைந்த போது நிம்மதியாய் இருந்தது. பீரோவை திறந்து காசை வைத்தவள், புடவையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள். கண்மணி பஸ்சில் இருந்து இறங்கி வருவது தெரிந்தது. அவள் உள்ளே வந்ததும், ‘கிளம்பி ரெடியா இருடி. போய் உன் ப்ர்த்டேக்கு ட்ரெஸ் எடுத்திட்டு கேக் ஆர்டர் கொடுத்திட்டு வரலாம்’ என்றாள். கண்மணி முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் தலையை குனிந்து கொண்டே உள்ளே போனால். சித்ராவிற்கு கண்கள் சிவந்தன. பால் கேனை வேகமாக தூக்கி சைக்கிளில் வைத்து கயிறை இறுக்கினாள். சொசைட்டியில் இருந்து திரும்பிய போது, அம்மாவும் கண்மணியும் வாசலில் உட்கார்ந்து இருப்பது தெரிந்தது. கண்மணி அவளுக்கு பிடித்த ஆரஞ்சு வண்ண பிராக்கை அணிந்திருந்தாள். இவள் முகம் கழுவி பொட்டிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டு, ‘உம் வா போலாம்’ என்றாள். கண்மணி அப்போதும் ஒன்றும் பேசமால் எழுந்து கொண்டாள். இருவரையும் அம்மா பார்த்துக்கொண்டிருந்தாள். சென்னை சில்க்ஸில் கூட்டமாய் இருந்தது. சித்ராவிற்கு பிடித்த எதுவும் கண்மணிக்கு பிடிக்கவில்லை. கண்மணிக்கு பிடித்தது எதுவும் சித்ராவின் விலையில் இல்லை. ஒரு வழியாய், ஆயிரம் ரூபாயில் ஒரு மஞ்சள் சொக்காயை இறுதியாக கண்மணி எடுத்துக்கொண்டாள். வெளியே வந்த போது சித்ராவிற்கு விலை சற்று அதிகம்தான் என்று தோன்றியது. அன்று பார்த்த பேக்கரியில் கேக் ஆர்டர் கொடுத்துவிட்டு இருவரும் வீட்டு வந்த போது மணி 9ஐ நெருங்கியிருந்தது. மேற்குத்தெருவில் சாப்பிட்டுவிட்டு திண்ணையில் படுத்திருந்தவர்களெல்லாம், ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தி இவளையும், கண்மணியையும் பார்த்தார்கள். யாரும் எதும் கேட்கவில்லை. சித்ரா, கண்மணியின் கையை பிடித்துக்கொண்டு வேகமாய் வீட்டை நோக்கி நடந்தாள்.

கண்மணியின் பிறந்தநாளுக்கு ஒரு ஏழெட்டு பேர் வந்திருந்தனர். அவள் நண்பர்கள் எல்லோரையும் கூப்பிட வேண்டும் என்றதை சித்ரா முடியாது என்றுவிட்டாள். குழந்தை எந்த உற்சாகமும் இன்றி கேக்கை வெட்டி விட்டு, சம்பிரதாயமாக எல்லோருக்கும் ஒரு துண்டு கொடுத்தாள். சித்ராவின் அம்மா, சேலையில் முடிந்து வைத்திருந்த ஐம்பது ரூபாயை பேத்தியின் நெற்றியை வழித்து கையில் திணித்தாள். சற்று நேரத்திற்கெல்லாம், கண்மணி உள்ளே சென்று படுத்துக்கொண்டால். சாலையூர் பெரியப்பா கிளம்பியவுடன் உள்ளே வந்து விளக்கை போட்ட சித்ரா, ‘இந்தாடி, ஏன் இந்நேரத்திலேயே படுத்து கிடக்க. எந்திரி சாப்புட்டு படுப்பியாம்’ என்றாள். கண்மணி ஒன்றும் பேசவில்லை. முதுகு மட்டும் குலுங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. திருப்பியவள், கண்மணியின் கண்ணீரைப்பார்த்து அதிர்ந்தாள். ‘என்னடி என்னாச்சு?’ என்றபடியே கழுத்தை தொட்டுப்பார்த்தாள். ‘விடு என்ன… போ இங்கிருந்து’ என்று திமிறினாள் கண்மணி. ‘என்னடி’ என்று அதிர்ச்சியாய் பார்த்தாள் சித்ரா. ‘என்ன ஏன் இப்படி அவமானப்படுத்தற… உன்ட நான் இப்படியே பர்த்டே வேணும்னு கேட்டேனா. சிவாலாம் சாக்லேட் கேக் கட் பண்ணான் தெரியுமா… உன்ன யாரு வெணிலா வாங்க சொன்னது. நாளைக்கு ஸ்கூல் போன என் ப்ரெண்ட்ஸெல்லாம் சிரிப்பாங்க’ என்றபடி கேவினாள். சித்ராவிற்கு யாரோ செவுளில் அரைந்தது போலிருந்தது. ‘என்னால இவ்வோளோ தான்டி முடியும் இதுக்கே என்ன பாடு படறேனு எனக்குத்தான் தெரியும்’ என்றாள் சித்ரா. ‘எங்கப்பா இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா, உன்ன யாரு எங்கப்பா விட்டு வர சொன்னா’ என்று கத்தினாள் கண்மணி. சித்ராவுக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது. பட் பட்டென்று குழந்தையை அடித்து தீர்த்துவிட்டாள். ‘அய்யோ கொல்றாளே… நான் எங்கப்பாட்ட போறேன் என்ன விடு விடு’ என்று கத்தினாள் கண்மணி.

காலையில் எழுந்த போது, கண்மணி எழுந்து உட்கார்ந்திருப்பது தெரிந்தது. நேற்றிரவு நடந்ததெல்லாம் நியாபகத்துக்கு வந்தது. வாஞ்சையாய் குழந்தையை கட்டிக்கொண்டாள். ‘விடு நான் அப்பாட்ட போகனும்’ என்று முனகினாள் கண்மணி. ‘போயேன் யார் வேண்டாம்னா’ என்றபடி வெடுக்கென்று எழுந்தாள். பால் பீச்சி வந்தபோது வாசலில் கண்மணி கையில் செல்போனுடன் நிற்பது தெரிந்தது. ‘அப்பாவுக்கு போன் பண்ணிக்கொடு’ என்றாள் இவளைப்பார்த்தவுடன். இவள் ஒன்றும் பேசாமல் உள்ளே போனாள். கண்மணி பின்னாலே போன் பண்ணிக்கொடு என்றபடியே வந்தாள். சித்ராவுக்கு ஆத்திரமாய் வந்தது. போனை பிடுங்கி சங்கரின் நம்பரை டயல் செய்து கண்மணியிடம் நீட்டினாள். வாங்கிக்கொண்டு அவள் ‘அப்பா’ என்று கத்தியபடி வெளியே ஓடினாள். அன்று பள்ளியில் ஒரு வேளையும் ஓடவில்லை. இத்தனை கஷ்டப்பட்டது அத்தனையும் வீணா எனத்தோன்றியது. எல்லோரும் சொல்வது போல கணவனுடன் வாழத்தெரியவில்லை. இப்போது பெற்ற பிள்ளையையும் வளர்க்க தெரியவில்லை. எதற்கு தான் பிறந்தோம் என ஆச்சரியமாயிருந்தது அவளுக்கு. மாலை வீட்டுக்கு வந்த போது சாலையூர் பெரியப்பா வந்திருந்தார். ‘சங்கர் போன் பண்ணாம்மா, கண்மணிய பாக்கனுமாம்’ என்றார். ‘வந்து பாத்திட்டு போகச்சொல்லுங்க பெரியப்பா நான வேண்டாகிறேன்’ என்றாள் கோபமாக. ‘அதில்லமா அவன் வர முடியாதாம். பாப்பாவ கூட்டிட்டு வர சொன்னான். அதும் குழந்தை ஆசப்பட்டதால தானாம்’ என்றார். கண்மணி முன்பே கிளம்பி ரெடியாய் இருப்பது தெரிந்தது. சித்ரா கண்ணீருடன் உள்ளே சென்று படுத்துக்கொண்டாள். இரவு ஓரிரு முறை அம்மா சாப்பிடக்கூப்பிட்டது மட்டும் லேசாய் கேட்டது. விழிப்பு வந்த போது, கண்மணி அருகில் படுத்திருப்பது தெரிந்தது. கண்ணில் கண்ணீர் பொங்க மகளை அணைத்துக்கொண்டாள். எப்போது வந்தாள், எப்படி வந்தாள்? மெலிதாய் அவள் நெற்றியை வருடியபடி நீண்ட நேரம் படுத்திருந்தாள். அலாரம் அடித்த போது அம்மா அறைக்குள் எட்டிப்பார்த்தாள். இவள் விழித்திருப்பதை பார்த்ததும், ‘அங்க போய் கொஞ்ச நேரத்துலையே அம்மாட்ட போகனும்னு ஒரே அழுகையாம். பதனோரு மணி போல உம்மாமனாரு கொண்டு வந்து விட்டுட்டு போனாரு’ என்றாள். எழுந்து வெளியே வந்த சித்ராவுக்கு, இன்னும் ஒரு மாதத்தில் அம்மன் கோவில் கொடை வருகிறது என்று நியாபகம் வந்தது. கண்மணிக்கு மரகதப்பச்சையில் ஒரு பாவாடை சட்டை எடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். கண்மணிக்கு பச்சை பிடிக்காது என்பதும் ஏனோ நினைவுக்கு வந்தது. சித்ரா இன்னொரு நாளுக்கு தயாரானாள்.

மோடி அரசு குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்…

எனக்கு அரசியல்மாற்றங்கள் வழியாக நிகழும் சமூகவளர்ச்சிமேல் பெரிய நம்பிக்கை ஏதுமில்லை. ஒரு குறிப்பிட்ட பொருளியலமைப்புக்குள் ஆட்சி மாற்றம் என்பது மேலோட்டமானதுதான். கேரளத்தை காங்கிரஸ் ஆட்சி செய்வதும் பினராயி விஜயன் ஆட்சிசெய்வதும் குறைந்த அளவிலான வேறுபாட்டையே உருவாக்குகிறது. பொருளியலை, சமூகமாற்றத்தை உருவாக்கும் விசைகளே வேறு. ஆகவே எப்போதுமே அரசியல்களத்தில் சொல்லாடுவதில்லை. அரசியல் சார்ந்து மிகைநம்பிக்கை கொள்வதுமில்லை

ஆகவேதான் நரேந்திரமோடி ஆட்சியை நெருங்கிக்கொண்டிருந்த உச்சகட்டப் பிரச்சார காலத்திலும் சரி, அவர் ஆட்சியைப்பிடித்தபோதும் சரி, நான் ஒரு சொல்கூட பேசவில்லை. அவருடைய ஆட்சி அமைந்தபோது எளியமுறையில் வாழ்த்தோ நம்பிக்கையோ தெரிவித்துகூட எதுவும் எழுதவில்லை. உண்மையில் அவருடைய அரசு அமைந்த அத்தேர்தல்முடிவுகள் வெளிவந்தபோது ஊட்டி காவியஅரங்கு நடந்துகொண்டிருந்தது. தேர்தலின்பொருட்டு அதை ஒத்திவைக்கக்கூட நான் ஒப்பவில்லை. அந்த அளவுக்கு தேர்தலரசியல்மேல் நம்பிக்கை கொண்டவர்கள் வரவேண்டாம் என்பதே என் நிலைபாடாக இருந்தது – கணிசமானவர்கள் வரவில்லை. அதை நான் பொருட்படுத்தவுமில்லை.

அவ்வரசு அமைந்த அன்று ஊட்டியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்னேன், பாரதிய ஜனதா கட்சி இருபதாயிரம் கோடிரூபாய் பிரச்சாரத்திற்குச் செலவிட்டு பதவியைப்பிடித்துள்ளது என்கிறார்கள். ஆகவே இரண்டுலட்சம் கோடியையாவது அதை அளித்தவர்களுக்கு திரும்ப அளிப்பதே அதன் ஆட்சியின் முதல் கடமையாக இருக்கும். ஆகவே அதைப்பற்றி எனக்கு எந்தக் கற்பனாவாத மயக்கமும் இல்லை என்று.

பின்னர் பாரதிய ஜனதாக் கட்சியின் இரண்டு நடவடிக்கைகளை நான் ஆதரித்தேன். ஒன்று, டெல்லியில் அதிகாரங்களாக உறைந்துவிட்டிருந்த சில கலாச்சார மையங்களைப் பெயர்க்கும் அதன் முயற்சியை. ஆனால் மிக விரைவிலேயே அந்த மையங்கள் அனைத்திடமும் பாரதிய ஜனதா சமரசம் செய்துகொண்டது. எந்த ஆட்சி வந்தாலும் அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்களே இன்றும் உடனிருக்கிறார்கள். அவர்கள் சென்ற ஆட்சிக்காலத்தில் அதிதீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்கள், இன்று ஆதரவாளர்கள்.

பாரதிய ஜனதாவின் இந்த ஆட்சிக்காலத்தில் கலாச்சாரத் தளத்தில் அதன் செயல்பாடுகள் அருவருக்கத்தக்கவை. அவர்கள் இடதுசாரிகளை ஆதரிக்கவேண்டுமென்பதில்லை , அவர்களின் தரப்பிலேயே பொறுப்புடன் பேசும் உண்மையான அறிஞர்களை, அவர்களுக்காகவேகூட இத்தனை ஆண்டுகளாக பணியாற்றியவர்களை, பொறுப்புகளுக்குக் கொண்டுவந்திருக்கலாம். மாறாக பெரும்பாலான பதவிகள் கவனிப்பாரற்று காலியாகவே விடப்பட்டன. நிரப்பப் பட்டவற்றில் சென்ற காலத்துத் துதிபாடிகளோ இன்றைய ஆட்சியாளர்களின் அடிப்பொடிகளான வெற்றுமனிதர்களோதான் நியமிக்கப்பட்டார்கள். கலாச்சார அமைப்புகள் இருப்பதையே டெல்லியை ஆளும் மிகச்சிறிய அதிகாரக்குழு அறிந்திருக்கவில்லை. அவர்களின் உலகில் அப்படி ஒரு விஷயமே இல்லை. அவர்களின் அறிவுத்தரமும் பண்பாட்டுத்தரமும் இங்கே ஒரு அடகுக்கடை நடத்தும் மார்வாடியின் அளவுக்கு சற்றும் மிகுந்ததாக இருக்கவில்லை.

இரண்டாவதாக, பணமதிப்புநீக்கத்தை நான் ஆதரித்தேன். அதை ஆதரிப்பதற்கான காரணங்கள் மேல் இன்றும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியத் தொழில் – வணிகத்துறையை அறிந்தவர்கள் இங்குள்ளது வரிகட்டுவோருக்கும் கட்டாதவர்களுக்கும் இடையேயான போட்டி என்று அறிந்திருப்பார்கள். இந்தியாவின் தொழில்வணிகத்தை பெரும்பாலும் கையில் வைத்திருக்கும் குஜராத்தி – மார்வாடி குழுக்கள் முற்றிலும் வரிகட்டுவதில்லை. வரி ஏய்ப்பை ஆயுதமாகக்க் கொண்டு வரி கட்டுவோரை வீழ்த்தி சந்தையில் ஆதிக்கம் கொள்வதே அவர்களின் வழிமுறை. அவர்களின் ஆதரவால் பதவிக்கு வந்தவர் மோடி. பணமதிப்பு நீக்கம் நேரடியாகவே அவர்களுக்கு எதிரான நடவடிக்கை. அவர்களின் அடித்தளத்தை நொறுக்குவது. அதை அவர் எடுத்ததே அவர்மீதான நம்பிக்கையை உருவாக்கியது. இந்தியாவின் வரிவசூலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைக்கான முதற்படி அது என தோன்றியது. அத்துடன் இந்தியப்பொருளியலின் பெரும் நோய்க்கூறான கள்ளநோட்டுப் புழக்கத்தை பத்தாண்டுகளுக்காவது அது கட்டுப்படுத்தக்கூடும் என நம்பினேன்.

சாதாரணமாக எந்த ஆட்சியாளரும் அத்தகைய ஒரு நடவடிக்கையைச் செய்யத் துணியமாட்டார்கள்.ஏனென்றால் அது உடனடியாக கடுமையான மக்கள் எதிர்ப்பையே உருவாக்கும். நீண்டகால அளவில்தான் அதன் பொருளியல் லாபங்கள் அறியப்படலாகும், அதற்குப்பின்னரே தேர்தல்கள லாபங்களை எதிர்பார்க்க முடியும். அதற்கு ஓர் ஆட்சியாளர் துணிவதென்பது அவருடைய நல்ல நோக்கத்தையே காட்டுகிறது என்று எண்ணினேன். வரலாற்றில் இடம்பெறுதல், மீண்டும் பதவிக்கு வருதல் போன்ற பல காரணங்களுக்காக ஆட்சியாளர்கள் மெய்யான நடவடிக்கைகளை எடுப்பதுண்டு. இருக்கும் அமைப்பின் எல்லைக்குள் சில முன்னடிவைப்புகளை அவர்கள் உருவாக்கக் கூடும். நரசிம்மராவ் போல நல்விளைவுகளை உருவாக்கவும் வாய்ப்புண்டு. அன்று என் எதிர்பார்ப்பு அதுவே.

அந்நடவடிக்கை தொடங்கியதுமே அதன்மேல் உருவான எதிர்ப்பு ஏமாற்றத்தை அளித்தது. அதன் எதிரிகள் இன்று சொல்வதுபோல அது ஒரு மோசடி என்பதனாலோ அதனால் நன்மை நிகழாதென்பதனாலோ அவர்கள் அதை எதிர்க்கவில்லை. அந்த அளவுக்கு மேதைகளல்ல அவர்கள். அரசியல் எதிரி எதைச்செய்தாலும் எதிர்க்கும் எதிர்க்கட்சி மனநிலை மட்டுமே அவர்களிடமிருந்த்து. அதனால் உருவான மக்கள் எதிர்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர். உண்மையிலேயே மோடி அரசியல் ஆதாயம்பெற்றுவிடக்கூடும் என அஞ்சினர். அந்த அவசரம் எனக்கு கசப்பளித்தது. அதையே நான் கண்டித்தேன்.

பணமதிப்புநீக்கம் தோல்வியடைவதை கண்கூடாகவே பார்த்துக்கொண்டிருந்தேன். சில தனியார் வங்கிகள் அதை உடைத்து பெரும்லாபம் ஈட்டின. கணக்காளர்களும் வங்கியாளர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கைகோர்த்துக்கொண்டு அதை அழித்தார்கள். நான் அறிந்தது உண்மை என்றால் கெடு முடிந்து எட்டுமாதங்கள் கடந்தும்கூட பழையநோட்டுக்களை மாற்றிக்கொண்டிருந்தார்கள். முதலில் தயாரிப்பின்மை, அரசுநிர்வாகத்தின்மேல் ஆள்வோருக்கு கட்டுப்பாடு இல்லாமை ஆகியவையே அதற்குக்காரணம் என நம்பினேன். ஆனால் அத்தனை நோட்டுகளும் திரும்பி வந்துவிட்டன என்றால் அதன்பொருள் ஒன்றே, இதில் பாரதியஜனதா கட்சியும், இந்த அரசும் ரகசிய லாபமீட்டாமல் இவ்வாறு நிகழாது. அவர்கள் உடனிருக்காமல் இத்தனை முழுமையான மோசடி நிகழவே முடியாது. அவர்கள் அதற்குப்பொறுப்பேற்றே ஆகவேண்டும். அதன் விளைவான அனைத்து அழிவுகளுக்கும்.

கடுமையான அரசியல் நிலைபாடு கொண்டவர்கள், மதக்காழ்ப்புகளை அரசியலாக வெளிக்காட்டுபவர்கள் தவிர இந்தியாவின் எளிய குடிமக்கள் பெரும்பாலானவர்கள் அந்நடவடிக்கை வந்தபோது நான் கொண்டிருந்த நம்பிக்கையையே கொண்டிருந்தார்கள். அதை அம்மக்களுடன் எளிய முறையில் உரையாடிய எவரும் உணர்ந்திருக்கலாம். இன்று அவர்களில் பலரும் நான் உணரும் ஏமாற்றத்தையும் கசப்பையும் தாங்களும் அடைந்திருப்பார்கள். ஒரு குடிமகனாக தனிப்பட்ட முறையில் அவமதிக்கப்பட்டவனாக, சுரண்டப்பட்டவனாக உணர்கிறேன். நரேந்திரமோடியின் ’மனதோடு பேசும்’ நிகழ்ச்சியில் உள்ள அசட்டு நாடகத்தனம், செயற்கையான பாவனைகள், புனிதர்களுக்குரிய நல்லுபதேச மொழிகளை கூச்சமே இல்லாமல் சொல்லும் தோல்தடிமன் உச்சகட்ட வெறுப்பையே உருவாக்குகிறது.

ஆயினும் நடுநிலையில் நின்றபடித்தான் பார்க்கவேண்டும் என எனக்கே சொல்லிக்கொண்டேன். இந்த ஆட்சியின் செயல்பாடுகளை என் தனிச்சூழலிலும் நான் செய்யும் பயணங்களிலும் கூடுமானவரை உளப்பாகுபாடின்றியே நோக்குகிறேன். கருத்துக்கேட்கும்போது அரசியல்திரிபுகள் அற்றவர்கள், சொல்லப்போனால் ஆதரவுநிலையுடன் இவ்வரசை நோக்கியவர்களிடமிருந்தே கேட்டறிகிறேன். விளைவாக உருவான என் எண்ணம் சுதந்திரத்திற்குப்பின்னர் இந்தியாவில் உருவான அரசுகளில் முழுத்தோல்வியடைந்த இரண்டு அரசுகளில் ஒன்று இது என்பதே. இன்னொன்று 1971- 77 ல் இந்திராகாந்தி அமைத்த அரசு.

இரு அரசுகளையும் பலவகையிலும் ஒப்பிட முடியும், பொதுவான மூன்று அம்சங்களைச் சொல்லலாம்.

ஒன்று, ஒற்றைமனிதரை முன்னிறுத்தும் நபர்வழிபாட்டு அரசியல். அனைத்து இடங்களிலும் ஒரு மனிதரை அரசே முன்வைப்பது. அரசு ஊடகம் அனைத்து ஆற்றல்களையும் கொண்டு, கோடானுகோடி ரூபாய்ச் செலவில் அவரை விளம்பரப்படுத்துவது. அவரை ஒரு தீர்க்கதரிசி, அவதாரம், ரட்சகர் நிலைவரை கொண்டுசென்று வைப்பது. எழுபதுகளில் இந்தியாவே இந்திரா என்னும் கோஷத்திற்கும் இன்று நரேந்திர மோடிமேல் அரசு குவித்துப்பெருக்கும் துதிக்கும் வேறுபாடில்லை. ஒருவரை நம் அரசு வரிப்பணத்தால் மிகைவிளம்பரம் அளித்து பூதாகரமாக்கி நிறுத்தி அவர்களுக்கு எதிராக பிறர் அரசியல்செய்வேண்டும் என்னும் நிலையை உருவாக்குவது ஜனநாயகத்தை அழிப்பது.

இரண்டு, சமையற்கட்டுச்சபையின் நிர்வாகம். தனிமனிதனை மையமாக்கிய அரசு அமையும்போது இயல்பாக உருவாவது இது. அவருக்கு அணுக்கமான ஒரு சிறுகுழுவுடம் அனைத்து அதிகாரங்களும் சென்று சேர்கின்றன. வெவ்வேறு துறைநிபுணர்கள், அனுபவம் மிக்கநிர்வாகிகள், களத்தொடர்புடைய அரசியலாளர்கள் ஆகியோர் கூடி செயல்படுவதாகவே இந்தியா போன்ற ஒரு மாபெரும் நாட்டின் நிர்வாகம் இருக்கமுடியும். இங்கே ஒவ்வொன்றையும் பலதரப்புகளைக் கலந்தாலோசித்து சிறிய அளவில் செய்து பார்த்து , தொடர்ச்சியாக விமர்சனங்களை கவனித்து பிழைகளைக் களைந்தே நிறைவேற்றவேண்டும். ஏனென்றால் இதன் சமூகப்,பொருளியல் அமைப்பு எந்த மேதையாலும் புரிந்துகொள்ளமுடியாதபடிச் சிக்கலானது. சமையற்கட்டுச்சபையில் வெறும்துதிபாடிகளும் சதிகாரர்களுமே அமர முடியும். அங்கே என்ன நிகழ்கிறதென்றே எவருக்கும் தெரியாது – அமைச்சரவையில் இருப்பவர்களுக்கும் கூட. இந்த அரசு அத்தகைய சிறு குழு ஒன்றால் நடத்தப்படுகிறது. அவர்களைச்சுற்றி தன்னலமிகளான வணிகர்களின் ஒரு வட்டம். கட்சியோ அரசின் பிற அமைப்புகளோ எந்த அதிகாரமும் இல்லாத வெற்றுப்பார்வையாளர்களாக மாறிவிட்டிருக்கின்றனர். எழுபதுகளின் இந்திரா அரசும் இத்தகையதாகவே இருந்தது

மூன்றாவதாக இது ஓர் அதிகாரியாதிக்க அரசு என்பது. இத்தகைய தனிமனிதமைய, சமையற்கட்டு நிர்வாக அரசு அது நடைமுறையில் செயல்பட அதிகாரிகளின்திரளையே நம்பியிருக்கும். ஆகவே வேறுவழியில்லாமல் அதிகாரியாதிக்க அரசு [ bureaucratic government] ஒன்று உருவாகிறது. அதிகாரியாதிக்க அரசின் இயல்புகளில் முக்கியமானது அது எவ்வகையிலும் முன்னகர விரும்பாது என்பதுதான். வழக்கமானவற்றை மட்டுமே செய்தபடி தன் வட்டத்தில் சுற்றிவருவதே அதற்கு உகந்தது. ஆகவே அனைத்து மாற்றங்களையும் அது காகித அளவில் மட்டுமே செய்யும். கத்தைகத்தையாக அறிக்கைகளை மட்டுமே தயாரித்து மேலே அனுப்பும். அரசதிகாரிகள் அளிக்கும் அத்தனை அறிக்கைகளும் பெரும்பாலும் பொய்யே. தகவல்களை முடைந்து பொய்யான அறிக்கைகளை உருவாக்குவதில் பயிற்சியே அரசூழியர் முதலில் அடைவது. அந்த அறிக்கைகளையே ஆட்சியாளர்கள் மக்களை நோக்கித் துப்பிக்கொண்டிருப்பார்கள்.

இந்திய அதிகாரிவர்க்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்தே ஊழல் வழியாக உருவாகி ஊழலினூடாக நிலைநிறுத்தப்படுவது. ஊழலுக்கான நடைமுறைகள் அனைத்தும் இருநூறாண்டுக்காலச் சடங்குகளாக மாறிவிட்டிருக்கின்றன. அதிகாரிகளின் கட்டமைப்பு ஆளும் அரசின் ஏவற்கருவியாக ஆகவேண்டும் என்றால் அரசு அதன் ஊழலுக்கு தடையற்ற முழு வாய்ப்பு அளித்தாகவேண்டும். அரசின் அனைத்து திட்டங்களையும் அவர்கள் முழுமையாகவே உண்டு செரிப்பார்கள். வான் உடைந்து பெய்தாலும் ஒரு துளிகூட தரைக்கு வராது. இன்றைய அரசு மிதமிஞ்சிய வரிகளை உருவாக்கி அதை அதிகாரிகளை அதை வசூல்செய்யும் வேட்டைவிலங்குகளாக்கி அவர்கள் ஊழலில் திளைக்க வழிவகுத்துள்ளது. இன்றும் வரிகட்டாத பழம்பெருமை கொண்டவர்கள் அதே வீச்சில் தொடர்கிறார்கள்.

இம்மூன்று அம்சங்களால்தான் முற்றிலும் செயல்படாத, ஆனால் இடைவிடாது வெற்றுச்சொற்களை வீசிக்கொண்டே இருக்கும் அரசு உருவாகிறது. ஒரு கட்டத்தில் அரசே அதிகாரிகாள் அளிக்கும் அறிக்கைகளை நம்ப ஆரம்பிக்கிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் வேலையின்மையும் வறுமையும் உச்சத்திலிருந்த, இந்தியாவின் வளர்ச்சி மாபெரும் தேக்கத்தை அடைந்த காலகட்டம் இந்திராவின் ஆட்சிக்காலம். நம்மைச்சூழ்ந்திருந்த நாடுகளெல்லாம் நம்மைக் கடந்து நெடுந்தொலைவு சென்றது அப்போதுதான். ஆனால் வறுமையை விரட்டுவோம் [கரீபி கடாவோ] போன்ற கோஷங்களால் அதை நாம் இன்று நினைவுகூர்கிறோம். இன்றைய அரசும் மிகப்பெரிய பொருளியல்குளறுபடிகளை, தேக்கத்தை உருவாக்கிவிட்டு கவற்சியான சொற்களை உமிழ்ந்துகொண்டிருக்கிறது

நரேந்திர மோடிக்கும் இந்திராகாந்திக்கும் இடையேயான ஒற்றுமைகள் வியக்கவைப்பவை. இருவரும் ஆழ்ந்த பாதுகாப்பின்மை உணர்வு கொண்டவர்கள். ஆகவே செயற்கையாக ஓர் இரும்புத்தோற்றத்தை நடிக்கிறார்கள். சர்வாதிகாரம் மூலம் ஆற்றல்கொண்டவர்களாக ஆக முயல்கிறார்கள். அதற்காக நம்பிக்கைக்குரியவர்களின் சிறுகுழுவை உருவாக்கி அதை சார்ந்திருக்கிறார்கள். தனிமனிதப்பிம்பம், மிகையுணர்ச்சிப்பிரச்சாரம் வழியாக அரசியலை கையாளமுடியும் என நினைக்கிறார்கள். தேசப்பாதுகாப்பு குறித்த அச்சத்தை மக்களிடையே உருவாக்கி தங்களை ரட்சகர் எனக்காட்டி அதிகாரத்தைக் கையாள்கிறார்கள்‘என்னைக்கொல்லச் சதி’ என இந்திரா காந்தி கூச்சலிடாத நாளே இல்லை. இவர்கள் இந்தியாவை ஆள்வதற்கான அறிவாற்றலோ நிர்வாக அமைப்போ இல்லாத நிலையில் முற்றிலும் செயல்படாத ஒரு கருங்கல்லை அரசு என மக்கள்மேல் சுமத்துகிறார்கள்.

சென்ற ஐந்தாண்டுகளில் பொருளற்ற காகிதத் திட்டங்களை அறிவித்து அதிகாரிகள் அளிக்கும் அறிக்கைகளை அதன் விளைவுகளாக முன்வைக்கும் செயலை மட்டுமே மோடி அரசு செய்திருக்கிறது. அறிவிக்கப்பட்ட எந்தத் திட்டமும் எவ்வகையிலும் நடைமுறைக்கு வரவில்லை. இவர்கள் சாதனைகளாகச் சொல்லும் அனைத்துமே பழைய திட்டங்களைப் பெயர்மாற்றம் செய்து முன்வைப்பவை. இயல்பான வளர்ச்சித்தகவல்களை தாங்களே செய்ததாக சொல்லிக்கொள்பவை. எவ்வகையிலும் சரிபார்க்கமுடியாத வெற்றுப்புள்ளிவிவரங்கள். நரசிம்மராவ் ஆட்சியில் ராவின் நிதானமான திட்டமிடலால், நிபுணர்களின் ஒத்துழைப்பால் உருவான இந்தியப்பொருளியல் மலர்ச்சி பின்னர் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களால் பின்னிழுக்கப்பட்டது. அது முழுமையாகவே படுத்து மீண்டும் எழுபதுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது இன்றைய இந்தியா

காகிதத்திட்டங்களின் பொருளின்மையை பல நிலைகளில் நாம் காணலாம். பலமுறை முன்னரும் எழுதியிருக்கிறேன். முதல் உதாரணம், ஸ்வச் பாரத். இந்தியா குப்பையில் மூழ்கிக்கிடக்கிறது. நான் சென்ற நாடுகளில் குப்பைக்குள்ள்ளேயே கிடக்கும் ஒரே நாடு இந்தியாதான். நம்மைவிட பொருளியலில் பிற்பட்ட ஆப்ரிக்க நாடுகளோ கம்போடியாவோகூட நம்மைவிட மேலான சூழல்தூய்மைகொண்டவை. ஏனென்றால் இங்கே குப்பையை அள்ளுவதற்கான அமைப்பு என எதுவும் சென்ற ஐம்பதாண்டுகளில் உருவாக்கப்படவில்லை. வெள்ளையர் ஆட்சியில் உருவான அதே குப்பை அள்ளும் முறைதான். அதையும்கூட நிதிப்பற்றாக்குறை என்று சொல்லி தனியாருக்கு குத்தகைக்கு அளித்துச் செயலிழக்க வைத்துள்ளனர். குப்பையை ஒழிப்பதாகச் சொல்லி கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து உருவாக்கப்பட்ட திட்டம் ஸ்வச் பாரத். அதனூடாகச் செய்யப்பட்ட ஒரே ஏற்பாடு குப்பைகள் கிடந்தால் அதை அரசிடம் தெரிவிக்க ஒரு செயலி உருவாக்கப்பட்டது மட்டுமே.

சிலமுறை அதில் என்ன நிகழ்கிறது என சோதித்துப் பார்த்திருக்கிறேன். புகார்செய்ததுமே குறுஞ்செய்திகள் வரத் தொடங்கும். ‘உடனே செய்யப்படும்’ என்று. ‘செய்துமுடித்துவிட்டோம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்று. நாலைந்து நாளைக்கு செய்திகள் வரும். நாம் செய்த புகாரை தொடர்ந்துசென்று பார்க்காதவர் என்றால் மனநிறைவு அடைந்துவிடுவோம். அரசு செயல்படுகிறது என நினைப்போம். ஆனால் குப்பை பெரும்பாலும் அங்கேதான் கிடக்கும். அல்லது சற்று இடமாற்றம் செய்யப்படும். ஏனென்றால் இந்தியாவெங்கும் எந்நகரத்திலும் எந்தக்கிராமத்திலும் குப்பையை அள்ளுவதற்கான அமைப்புகள் இல்லை. குப்பை அள்ள வண்டிகள் இல்லை, ஊழியர்கள் இல்லை, அள்ளப்பட்ட குப்பையை எரிக்கவோ அழிக்கவோ எந்த வசதியும் இல்லை. செயலி இருந்து என்ன பயன்?

இதேதான் ரயிலிலும். சென்ற ஐந்தாண்டுகளில் ரயில்பயணம் தாளமுடியாத அளவுக்கு சீரழிந்துள்ளது.பயணம் பலமடங்கு பெருகுகிறது, ஆனால் ரயில்துறை தேங்கிக்கிடக்கிறது. தத்கால், அர்ஜெண்ட் தத்கால் என பல திட்டங்களால் மறைமுகமாக கட்டணம் கூட்டப்படுகிறது. கழிப்பறைகள் கழுவப்படுவதில்லை. பெட்டிகள் தூய்மைசெய்யப்படுவதில்லை. ஆனால் புகார் கொடுப்பதற்குச் செயலிகள் உண்டு. புகார் கொடுத்தால் ஐந்தே நிமிடத்தில் மறுமொழிகள் வரத்தொடங்கும். உடனே ஓர் அதிகாரி வந்து உடனே செய்கிறோம் என்பார். நான் புகார்கொடுத்தபோதெல்லாம் உடனே வந்து கழிப்பறையை நீரூற்றி ஃபினாயில் ஊற்றிவிட்டுச் சென்றனர். ஆனால் பின்னரும் ரயில் கிளம்பும் இடத்திலேயே நாறித்தான் கழிப்பறைகள் காணப்பட்டன.

சமீபத்தில் நாகர்கோயில் – கோவை எக்ஸ்பிரஸில் நாறிக்கிடந்த கழிப்பறை பற்றி புகார் செய்தேன். நெல்லையில் வந்து தூய்மை செய்தனர். ஆனால் ஒர் அதிகாரி குமுறித்தள்ளிவிட்டார். ஏனென்றால் தூய்மைசெய்யும் ஊழியர்களே இல்லை. மொத்தப்பணியும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. குத்தகை எடுப்பவர் பலவகையான ’கழித்தல்’களுக்குப்பின் பெறுவது ஏலத்தில் கால்பங்கு. அந்த மிகக்குறைந்த தொகைக்கு அவர் நாலைந்து பிகாரி பையன்களை வேலைக்கு வைக்கிறார். நாகர்கோயிலிலேயே பிகாரிகள்தான் அப்பணி செய்கிறார்கள் .ஒருநாளைக்கு இருநூறு ரூபாய் ஊதியம். ஒரு ரயில்நிலையத்தின் அனைத்து பெட்டிகளையும் தூய்மை செய்ய ஊதியமாக அளிக்கப்படுவது ஒருநாளைக்கு மொத்தமாகவே ஆயிரம் ரூபாய்கூட இல்லை. அந்த பிகாரிகள் காலையில் வந்து சாயங்காலம் சென்றுவிடுவார்கள். அந்திக்குமேல் கிளம்பும் ரயில்களை தூய்மை செய்ய ஆளிருப்பதில்லை. கோவை ரயில் காலை நாகர்கோயில் வந்ததும் உடனே இன்னொரு எண் பெற்று கொல்லம் சென்று திரும்புவது. பல்லாயிரம்பேர் பயணம் செய்தது. கழிப்பறை நாறாமல் என்ன செய்யும்?

நாற்பது பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலின் நூற்று அறுபது கழிப்பறைகளை ஓர் ஊழியர் ஒருமணிநேரத்தில் தூய்மை செய்தால் எந்த அளவுக்குத் தூய்மை செய்யமுடியுமோ அதுவே சாத்தியம். ரயில் கிளம்பியபின் அந்த ஒப்பந்த ஊழியர்களான பிகாரிகள் பயணிகளின் கருத்தைக்கோரும் ஒரு படிவத்துடன் பரிதாபமாக வந்து நிற்பார்கள். இந்தி அல்லாது ஒரு சொல் தெரியாது. என்னதான் செய்வது? பரிதாபப்பட்டு கையெழுத்துபோட்டு அளிப்பார்கள் பயணிகள். பலசமயம் நான் ஐம்பது ரூபாய் அளித்து என் பெட்டியின் கழிப்பறைகளை மட்டும் தூய்மைசெய்யச்சொல்வேன்.

சாதாரண ‘ஸ்லீப்பர் கோச்’களின் நிலைமை சென்ற சில ஆண்டுகளில் நம்பமுடியாத அளவுக்கு கீழிறங்கிவிட்டது வடகிழக்கு நோக்கிச் செல்லும் ரயில்களில் அனைத்துப்பெட்டிகளிலும் முன்பதிவுசெய்தாலும் அமரக்கூட இடம்கிடைப்பதில்லை. நான்குநாட்களுக்கு முன் என் மகனும் கடலூர் சீனுவும் படுக்கை முன்பதிவு செய்திருந்தும் ஒரிசாவிலிருந்து ஓர் இருக்கையில் எட்டுபேர் என அமர்ந்தபடி திரும்பி வந்தனர். பெட்டிக்குள் இருநூறுபேருக்குமேல்.ஏனென்றால் செலவுசுருக்க நடவடிக்கைகளால் டிக்கெட் பரிசோதகர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இன்று பதினைந்து பெட்டிகளுக்கு ஒருவர் தான் கண்காணிக்கிறார். அவரால் இந்தப்பெரும்கூட்டத்தை என்ன செய்ய முடியும்? ரயில்வே காவலர்களின் எண்ணிக்கையும் சென்ற ஆண்டுகளில் தொடர்ந்து குறைக்கப்படுகிறது. இந்திய ரயில்பெட்டிகள் இன்று எந்தப்பாதுகாப்பும் இல்லாத ஒரு பெரும் அராஜகவெளி. ஆனால் புகார் செய்ய செயலிகள் உண்டு. மென்மையான பதில்கள் உடனே கிடைக்கும். அதிகாரிகளின் அரசின் காகிதத்தோற்றம் என்றால் இதுதான்

இந்த அரசு அளிக்கும் அத்தனை செயல் அறிக்கைகளும் பொய்யானவை. இந்தியா முழுக்க இருபதாண்டுகளுக்கு முன் போடப்பட்ட நாற்கர நெடுஞ்சாலைகள் புதுப்பிக்கப்படாமல் பழுதடைந்து கிடக்கின்றன. ஆனால் அவற்றில் செல்ல பல்லாயிரம் ரூபாய் கட்டணம் கட்டவேண்டியிருக்கிறது. வட இந்தியாவில் சில இடங்களில் தேசியநெடுஞ்சாலைகள் கிராமச்சாலைகளைவிட மோசமாக உள்ளன. நாகர்கோயில்- மதுரை நெடுஞ்சாலையே துண்டுதுண்டாக பள்ளமும் உடைசலுமாகக் கிடக்கிறது.விமானநிலைய விரிவாக்கங்கள் அனைத்தும் தேங்கிக்கிடக்கின்றன. கல்வித்துறைக்கு நிதி இல்லை. மருத்துவத்துறையில் பெருந்தேக்கம். எங்கும் எந்தவிதமான செயல்பாடும் இல்லை. வளர்ச்சி போகட்டும், பராமரிப்பே நிகழவில்லை.

ஆனால் இந்தியவரலாற்றிலேயே அதிகமாக இன்று தனிமனிதன் வரிகட்டிக்கொண்டிருக்கிறான். சில துறைகளில் ஜிஎஸ்டி,வருமானவரி,சேவைவரி உட்பட ஒரே தொழிலுக்கு மூன்று வரி. வருமானத்தில் 40 சதவீதத்தை நேரடி வரியாக கட்டவேண்டியிருக்கிறது. வாங்கும்பொருட்களின் மறைமுக வரியையும் சேர்த்தால் ஈட்டுவதில் 70 சதவீதம் வரியாகப்போகும். அதற்கு மாற்றாக குடிமகன் பெறுவதென்ன? கட்டணம்கொடுத்தாலும் நல்லசாலைகள் இல்லை. கல்வி, மருத்துவம் என அனைத்துக்குமே பெரும்பணம் அளிக்கவேண்டும். நல்வாழ்வுத்திட்டங்கள் என ஒன்றுமே கிடையாது. இத்தகைய அதிக வரிவிதிக்கும் நாடுகள் முழுக்குடிமகனின் வாழ்க்கைக்கும் பொறுப்பேற்கும் நலம்நாடும் அரசுகள். இங்கே இந்த வரி வெவ்வேறு பொய்முதலீடுகள் வழியாக தனியார் கைகளுக்குச் செல்கிறது. வரி என்பதே அரசைப்பயன்படுத்தி சிலர் அடிக்கும் நேரடியான கொள்ளை என்றாகிவிட்டிருக்கிறது .

இந்த அரசு ஊழலற்றதா? இன்றுவரை பெரிய ஊழல்களை அவைக்குக் கொண்டுவர எதிர்க்கட்சிகளால் இயலவில்லை என்பது உண்மை. ஆனால் இத்தகைய பெருங்கொள்ளை நிகழ்கையில் அதை ஊழல் என்று அல்லாமல் எப்படி மதிப்பிட முடியும்? எங்கே செல்கிறது இந்த மாபெரும் வரிவசூல் செல்வம்? வரிகட்டும் எனக்கு அதிலிருந்து ஒரு பைசாகூடத் தரப்படாது என்றால் அதைப் பெற்றுக்கொள்பவர் எவர்? ஊழலைச் சட்டபூர்வமாகச் செய்யும் வழிகள் கண்டடையப்பட்டுள்ளன, அவ்வளவுதான்.

இந்திரா காந்தியாவது சில நலத்திட்டங்களைச் செய்ய முயன்றார். ஆனால் மோடி அரசு பசப்புச் சொற்கள், பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது. எளிய அளவில்கூட ஒரு நலம்நாடும் திட்டம் கிடையாது. வளர்ச்சித்திட்டங்கள் எவையுமில்லை, எளிய கவற்சித்திட்டங்கள் கூட இல்லை. சொல்லப்போனால் இங்கே மக்கள் என ஒரு திரள் இருப்பதையே இவர்கள் அறியவில்லை எனத் தோன்றுகிறது. இந்த நம்பிக்கை மிக ஆபத்தானது. மேலும் மேலும் கொள்ளையிடுவதற்கான அனுமதியை இந்தியச் சமூகம் அளிப்பதாகவே இவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதன்பொருட்டேனும் இவர்கள் அகன்றாகவேண்டும் .வேறு வழியே இல்லை. இதுவே என் அரசியல்

இந்த அரசை இந்துமதம் அழியவேண்டும் என நினைப்பவர்கள் எதிர்க்கிறார்கள், இந்தியாவைத் துண்டாடவேண்டும் என நினைப்பவர்கள் வெறுக்கிறார்கள், ஆகவே இதை ஆதரிக்கிறோம் என்பதே பலருடைய நிலைபாடாக இருக்கிறது. இந்திய எதிர்ப்பாளர்களின் உக்கிரமான கசப்புப்பிரச்சாரமே உண்மையில் மோடியை ஆதரிக்குமிடத்திற்கு பலரைத் தள்ளுகிறது. ஆனால் எதன்பொருட்டென்றாலும் குடிமக்கள் என சிலர் இருக்கிறார்கள், அவர்களிடமிருந்து வரி பெறுகிறோம், பதிலுக்கு அவர்களுக்கு சில பருக்கைகளையாவது அள்ளிவீசவேண்டும் என்றுகூட எண்ணாத ஓர் மூடுண்ட அரசை ஆதரிப்பது அறிவின்மை. நம் வாழ்க்கையை நாமே அழித்துக்கொள்வது அது. ஒருவர் இந்து என தன்னை உணர்கிறார் என்பதனால், இந்து என்னும் பெயரை இவர்கள் சொல்கிறார்கள் என்பதனால் இவர்களை ஆதரிப்பார் என்றால் அதைப்போல ஒரு வீழ்ச்சி பிறிதில்லை.

இன்று இருபக்கமும் உச்சகட்ட வெறுப்பரசியல் நிகழ்கிறது. அரசியல் என்பது மதத்துடன் இணைக்கப்பட்டிருக்கையில் வளர்ச்சி, மக்கள்நலம் எதுவும் எவருக்கும் ஒரு பொருட்டல்ல. இந்த அரசை நீக்கும் வெறிகொண்டிருக்கின்றனர் எதிர்தரப்பினர் , அரசைக் காக்கும் வெறி மறுபக்கம். ஆகவே உச்சகட்ட அரசியல்பிரச்சாரமும் எதிர்ப்பிரச்சாரமும் நிகழ்கிறது. இந்த கூச்சல்விவாதங்களில் இடம்பெற நான் விரும்பவில்லை. சமூகவலைத்தளங்களில் கட்சிகட்டி தகவல்திரிபுகள், சதிவேலைக்கண்டுபிடிப்புகள், சாதிமதக்காழ்ப்புகள், போலிப்புள்ளிவிவரங்கள் என கூச்சலிடும் எவருடனும் இதைப்பற்றி விவாதிக்கவும் தயாராக இல்லை. நான் இக்கருத்துக்களைச் சொல்வது நான் முன்னர் பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்தேன் என்பதனால், அந்த மாபெரும் பிழையால், இவ்வரசை ஆதரிக்கிறேன் எனும் எண்ணம் எழுந்திருக்கக்கூடும் என்பதனால் மட்டுமே

மேற்கொண்டு எதையும் பேசப்போவதில்லை. இது என் அரசியல் நிலைபாடு. எளிய குடிமகனின் அரசியல் இது. கட்சி சார்பு அரசியல் அல்ல. என் நண்பர்களில் பலர் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள், பலர் எதிர்ப்பார்கள். எங்கள் நட்புக்குழுமம் முழுக்க இருசாராரும் கொம்புமுட்டி பூசலிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இருசாராரிடமும் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. என் தளத்தை அவ்விவாதத்தின் களமாக ஆக்கவும் விரும்பவில்லை. எனவே எவரும் எனக்கு இதுகுறித்து எழுதவேண்டியதில்லை. இதுகுறித்து மேலும் நான் எதுவும் சொல்லப்போவதுமில்லை. இதுகுறித்து எக்கடிதம் வந்தாலும் அதை எழுதியவரை என் மின்னஞ்சல்பட்டியலில் இருந்து விலக்க எண்ணுகிறேன். எனக்கு வேலைகள் நிறைய உள்ளன.

பதிவின் இணைப்பு: https://www.jeyamohan.in/112865

உப்புவேலி – ஒரு அறிமுகம்

புத்தகம் படிப்பவர்கள் எல்லோரிடமும் ஒரு ‘இந்த புத்தகத்தை தேடுகிறேன்’ பட்டியல் இருக்கும். அது போல் என் பட்டியலில் இருந்த ஒரு நூல் Roy Maxhamன் The Great Hedge of India. ஆங்கில புத்தகம் ஏறத்தாழ ரூ.3000க்கு விற்க, அப்புத்தகத்தை வாங்குவதை தள்ளி போட்டபடியே இருந்தேன். தற்செயலாக எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர் சிறில் அலெக்ஸ் அதை தமிழில் உப்புவேலி என்ற பெயரில் மொழிப்பெயர்த்து இருப்பது தெரிந்தது. அமேஸானில் தேடப்போக, ரூ.100க்கே கிண்டில் பதிப்பு கிடைத்தது. ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். இதன் ஆங்கில பதிப்பு குறித்து தமிழ் சூழலில் பல்வேறு குறிப்புகள் காணக்கிடைகின்றன. தமிழின் முக்கிய எழுத்தாளர்களான் எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோர், இந்த நூல் குறித்தும் இந்தியாவில் இருந்த உப்புவேலி குறித்தும் விரிவாகவே எழுதி இருக்கின்றனர். இது வரை அந்த குறிப்புகளை படிக்காதவர்களுக்காக இந்த சிறிய அறிமுகம்.

இன்று உப்பு ஒரு சாதரண பொருளாக உணவின் சுவை கூட்டியாக நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் உடலின் ஆரோக்கியத்திற்க்கு அது இன்றியமையாத ஒன்று. அதீத உப்பு குறைபாடு மரணம் வரை கொண்டு செல்லக்கூடும். மேலும், குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்படாத காலங்களில் உப்பு முக்கியமாக உணவை பதப்படுத்த உபயோகப்பட்டது. விளைச்சல் இல்லாத குளிர் காலங்களில் பதப்படுத்தபட்ட உணவே முக்கிய உயிர்சக்தியாக அந்நாட்களில் விளங்கியது. எனவே உலகம் முழுவதுமே உப்பு ஒரு முக்கிய வணிகப்பொருளாகவும், சீனா போன்ற நாடுகளில் 1700கள் வரை கூட பணத்திற்க்கு மாற்றாகவும் இருந்தது. இதன் தொடர்ச்சியாக முதலாம் நூற்றாண்டு முதலே உப்புக்கு வரி விதிப்பது உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் இந்த பல லட்சம் பேரை கொல்லக்கூடிய கொடூர வரியாக கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிகாலத்தில் உப்புவரி இந்தியாவிற்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பரந்த மத்திய இந்தியாவில், உப்புக்கான மூலங்கள் குறைவு. அது பெரும்பாலும் தென்னக கடல் கரைகளில் இருந்தோ, மேற்கு குஜராத் பகுதிகளில் இருந்தோ அல்லது, பஞ்சாபின் இயற்க்கையான உப்புமலைகளில் இருந்தோ பெறப்பட்டு வந்தது. இந்தியா முழுவதும் பரந்திருந்த வணிக பாதைகளின் வழியே இவை தங்கு தடை இன்றி இந்திய துணைக்கண்டம் முழுவதும் கிடைத்து வந்தது. இந்தியா முழுமையும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு வந்த பொழுது, அவர்களுக்கு உப்பு வரி பெரும் வாய்ப்பாகத்தோன்றியது. ஏனெனில் மத்திய இந்தியாவுக்கும், வங்கத்துக்கும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தே உப்பு இறக்குமதி செய்யப்பட்டது. எனவே ஒரிசா முதல் பஞ்சாப் வரை மத்திய இந்தியாவின் குறுக்கே பல்வேறு இடங்களில் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு, உப்பு வணிகம் கண்காணிக்கப்பட்டது. மேலும் 20 முதல் 30 சதவீதம் வரை உப்புக்கான வரி விதிக்கப்பட்டது. இது இயல்பாக உப்பு கடத்தலுக்கு இட்டுச்சென்றது. கடத்தலை தவிர்க்க 1850களில் இந்தியாவின் குறுக்கே ஒரு வேலி அமைப்பதென முடிவு செய்யப்பட்டு காய்ந்த முள் கொடிகள், மரத்தடுப்புகளால் வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனால், நெருப்பு, கரையான் போன்றவற்றால் இவற்றின் பராமரிப்பு பெரும் செலவுடையதாக இருந்தது. எனவே 1860களில் உயிர் வேலிகள் அமைப்பதென முடிவுசெய்யப்பட்டு, அதற்க்கான பணிகள் தொடங்கப்பட்டன. இவை ஏறத்தாழ 14 அடி அகலமும், 8 முதல் 10 அடி வரை உயரமும் கொண்ட முள் புதர்களால் அமைக்கப்பட்டன. சீனாவின் பெருஞ்சுவரை விட நீளமாக இருந்த இந்த வேலியின் இடையே காவல் கோபுரங்களும் சுங்கசாவடிகளும் அமைக்கப்பெற்றிருந்தன. அதன் முக்கிய காலகட்டமான 1870களில் ஏறத்தாழ 14,000 முழுநேரப்பணியாளர்கள் இந்த வேலியில் பணியாற்றினர்.

இதனால் இந்தியாவின் உப்பு வணிகம் முழுமையும் ஆங்கிலேயரின் கைக்குள் வந்தது. மேலும், அதீத உப்பு வரி மத்திய இந்தியாவிலும் வங்க பகுதிகளிலும் உப்பின் நுகர்வை பெருமளவு குறைத்தது. அன்றைய நாட்களில் ஒரு சராசரி இந்தியன் தன்னுடைய இரண்டு மாத சம்பளத்தை ஒரு வருட உப்பிற்க்கு செலவு செய்ய வேண்டிய நிலையில் இருந்தான். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது, ஏழைகளும் வெயிலில் உழைக்கும் விவசாயிகளும் தான். குறைவான உப்பு நுகர்ச்சி அவர்களை மந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்க கூடும். மேலும் 1860களின் கடும் இந்திய பஞ்சத்தின் போது கூட உப்பின் மீதான வரி குறைக்கப்படவில்லை. எனவே மக்கள், விதைப்பிற்க்கு வைத்திருந்த தானியங்களைக்கூட உப்பிற்காக செலவு செய்ய நேர்ந்தது. 1850க்கும் 1875க்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியாவில் ஏறத்தாழ 40 லட்சம் பேர் உப்பு குறைவு தொடர்பான நோய்களால் இறந்திருக்ககூடும் என சமீபத்திய ஆய்வுகள் சுட்டி காட்டுகின்றன. இறுதியாக 1879ல் இந்த வேலிகள் கைவிடப்பட்டன. ரயிலின் அறிமுகமும், இங்கிலாந்தில் இருந்து உப்பின் இறக்குமதியும் பெரும் பராமரிப்பு தேவைப்பட்ட இந்த வேலிகளை கைவிடுவதற்க்கு முக்கிய காரணமாக அமைந்தன. இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தும் கூட உப்புவேலி குறித்து எந்த வரலாற்று குறிப்புகளும் இல்லாமல் போனது ஆச்சரியமே.

1995ல் லண்டனில் நூலக காப்பாளராக இருந்த ராய் மேக்சிம் ஒரு பழைய புத்தக கடையில் கிழக்கிந்திய அதிகாரி ஒருவரின் நாள் குறிப்பை வாங்குகிறார். அதில் உப்புவேலியில் பணி புரிந்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டு இருப்பது, இந்தியாவியல் அறிஞரான ராயை குழப்புகின்றது. ஆக்ஸ்போர்டின் இந்திய சரித்திரம் நூலில் இருந்து, இந்திய வரலாறு தொடர்பான பல நூல்களை ராய் பார்த்தபோதும் எதிலும் உப்புவேலி குறித்த பதிவுகள் இல்லாதது கண்டு குழம்புகிறார். பின்னர் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் பிரிட்ஷார் இங்கிலாந்துக்கு அனுப்பிய அலுவலக குறிப்புகளுக்கான காப்பகத்தில் இந்த வேலி இருந்தது குறித்து உறுதி செய்துகொள்கிறார். ஆனால் துல்லியமான தகவல்களை அவரால் பெற முடியவில்லை. 1996, 1997 மற்றும் 1998ல் மூன்று வெவ்வேறு பயணங்களில் உத்திரபிரதேசத்தின் பல இடங்களில் அந்த வேலியின் மிச்சம் ஏதாவது இருக்கின்றதா, அப்பகுதி மக்களுக்கு ஏதாவது தெரிகின்றதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இறுதியில், ஜான்சிக்கு அருகே ஒரு வேலியில் சிறு மிச்சத்தை கண்டுகொள்கிறார். அவரின் பயணம் குறித்தும், உப்புவேலி குறித்தான தகவல்களையும் The Great Hedge of India நூலில் விவரிக்கின்றார்.

மின் புத்தகம் சரியாக வடிமைக்கபடாத போதும், மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றது. ஏறத்தாழ ஒரு மர்ம நாவலை படிக்கும் விறுவிறுப்புடன் ராயின் பயணங்கள் விவரிக்கப்பட்டிருகின்றன. மேலும் உப்பு வரி குறித்தான விரிவான பார்வை, அதன் தாக்கம், பாதிப்பு போன்றவை இந்த துறையில் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக சொல்லப்பட்டிருகின்றன. அனைவரும் படிக்கவேண்டிய முக்கியமான நூல்.

கிண்டிலில் வாங்க: https://amzn.to/2NpADsp
புத்தகமாக வாங்க: https://bit.ly/2NiY6ep

தமிழ் இந்துவில் உப்பு வேலி குறித்து சிறில் அலெக்ஸின் கட்டுரை: https://bit.ly/2MQQNew

Myths and Truths About Acquiring Patent Rights For Academic Institutions

Recently I had a chance to attend a course on intellectual property rights (IPR) conducted by IPR cell of the Bharathidasan University (BDU), Tiruchirappalli. Even though it’s not a new of its kind in academic world, the IPR cell of BDU has setup only very recently and the event is one of its preliminary step. Like every IPR meeting, we have been offered with a length of lectures on importance of IPR, different kind of IPRs like copyrights, patents, license etc., and specific ways to acquire a patent. Of course the lectures are fruitful, but I really wondered why it is important for an academician to file a patent. Because like Wernher von Braun quoted, for most our academic institutions “Research is what are they doing when they don’t know what they’re doing”. Most of our research are very fundamental in nature and mostly follows as the tail end of what foreign institutions have alreay achieved. In such a scenorio, worrying about IPR is a kind of joke for me. Because most of our universities don’t have any industrial collaboration and it means most of their research work doesn’t have any industrial significance. Mostly Ph.D’s are done as an extended course of higher education and the research students are expected to learn the research methods rather than to develop a specific product. And at the end of their course, most of them opt for teaching rather than industial positions. I can bet none of the current academic setup in most of the Indian institution is not to the scale of industry level and our research supervisiors are minimal exposure to the industry environment. So, in such a scenorio why institutions are worrying about patents? Becasue the National Assessment and Accreditation Council (NAAC) as well as the recent National Institutional Ranking Framework (NIRF) stretching the instituions for patents with some marks to every successful patent. And the institutions as a ritual seting up IPR cells and some wealthy institutions are even funding the researchers for patent fee and assisting the patent process. But it is to be noted that the number of events on IPR or number of patents by an institution cannot be a scale for the social impact of a research work. A separte research is required to understand what is the social impact of patents filled by our institutions. For betterment of scientific community this problem has to be solved from its very basic level. First, our funding agencies should find specific goals for their research fund allotment. If you see the prestigious European Union’s Marie-Curie Fellowship the applicant should answer the questions like what’s its social impact, how the research can be brought to the industry level and so on. So, even at the seeding stage, the reasearchers aware of the impact of their research work. But this is not case for our institutions and they mostly engaged with basic level scientific problems. Basic research is not a bad thing. But for the indigenous development of the country, industry oriented inventions are also necessary. So the Government and funding agencies should find the ways to encourage industry relevant research work in the instutions. They also should ensure the tie-up between local industries and the institution in research projects. The second thing is, proper measurement scale has to be set to measure the impact of any research concentrating towards industrial applications. It shouldn’t be measured as the number patents acquired by institution, rather, it should measure the revenue created by the institution by it intellectual properties. Finally, research students should be motivated towards industrial positions and proper schemes and ads has to be spread out to them in this regard. Summing up, instead of approching IPR as a ritual, institutions and funding agencies should take this as a serious issue and find the way to develop potential research with a greater social impact.

உண்மை, மெய்மை மற்றும் அறிவியலின் பங்கு குறித்து – மிச்செல்லா மாசிமி நேர்காணால்

நேர்காணால்: பிலிப் பால்

பல்அண்டம் போன்ற நிறுவ இயலாத கொள்கைகள் ஆட்டம் கண்டிருக்கும் தற்போதைய சூழலில், மெய்மை அறிவியலின் ஒரு பகுதி என வாதிடுகிறார் மிச்செல்லா மாசிமி.

அறிவியலில் தத்துவத்தின் பங்கு என்ன என்பது ஒரு சுவாரசியமான கேள்வியாகும். ஒருபுறம், இழைக்கொள்கை, பல்அண்டம் போன்ற துறைகளைச்சார்ந்த விஞ்ஞானிகள், இக்கொள்கைகளை நிறுவ இயலாத போதும் தத்துவரீதியாக இவற்றுக்கு அறிவியல் முக்கியத்துவம் உண்டு என்கின்றனர். இன்னொருபுறம், ரிச்சர்ட் பெய்ன்மான், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற மேதைகளோ அறிவியலில் தத்துவம் என்ற பிரிவே தேவை இல்லை என்கின்றனர்.

Professor of the philosophy of science Michela Massimi is based at (and pictured in) the University of Edinburgh, UK, on Thursday 17 May 2018.

சமீபத்தில் ஐக்கிய ராஜ்ஜியங்களின் (U.K.) ராயல் அகடெமி வழங்கும் வில்கின்ஸ்பெர்னல்மெடவர் பதக்கத்தினை பெற்ற மாசிமியோ, தன்னுடைய விருது ஏற்பு உரையின் போது, தத்துவம் அறிவியலின் தவிர்க்க இயலாத ஒரு அங்கம் என குறிப்பிட்டார். மேலும் பயன் அடிப்படையில் தத்துவம் அனுகப்படக்கூடாது என்றும், சமூக, தனிமனித முன்னேற்றத்தில் தத்துவத்தின் பங்கு ஆராயப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அறிவியலில் தத்துவத்தின் பங்கை குறித்து ஆராயும் அதே வேளையில், யதார்த்த போலி யதார்த்த சித்தாந்தங்களில் இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் மாசிமி ஆராய்ந்து வருகிறார். அவருடைய ஆய்வானது அறிவியல் ஒருபடித்தான உண்மையை நோக்கி நகர்கிறதா அல்லது வெறுமனே நிகழ்வுகளை குறித்த தரவுகளை மட்டும் சேகரிக்கின்றதா என்கிற முக்கியமான கேள்வியயை முன் வைக்கின்றது. மாசிமி, இத்தாலியில் பிறந்தவர். தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைகழகத்தில் உண்மையில் குறித்தான ஆய்வுகளை மேற்க்கொண்டு வருகிறார். இவருடைய முன்னோக்கிய யதார்த்தவாதம்என்ற கூற்று, சமூக மற்றும் வரலாற்று காரணிகளை உள்ளடக்கிய அறிவியல் முன்னேற்றத்தை குறித்து விவரிக்கின்றது. இது, சமீபகாலத்தில் தத்துவத்துறையில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும். இது அவர் குவாண்ட மேகசினுகாக வழங்கிய பேட்டியின் சுருக்கப்பட்ட வடிவமாகும்.

பறவைகளுக்கு பறவையியல் எவ்வளவு உபயோகப்படுமோ அந்த அளவே தத்துவம், அறிவியல் விஞ்ஞானிகளுக்கு உபயோகப்படும் என்று ரிச்சர்ட் பெய்ன்மான் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். இது பற்றி உங்களின் கருத்து என்ன?

புகழ் பெற்ற விஞ்ஞானிகளின் ஒரு கூற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அவை குறித்து விவாதிப்பது, தேவைஇல்லாத, வீண் சச்சரவுகளையே உண்டாக்கும். இவை, ஒன்று தத்துவம் அறிவியலின் தவிர்க்க முடியாத கூறு என்றோ அல்லது தத்துவம் அறிவியலுக்கு தேவையே இல்லை என்றோ ஓர் ஒற்றை அனுமானத்தில் தான் முடியும்.

ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு பயன் உண்டு என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ரோமானிய வரலாறு ரோமானியர்களுக்கு எவ்வளவு பயன்படும் என்ற கேள்விக்குள் ரோமானிய வரலாற்றை சுருக்கிக்கொண்டுவிட முடியாது. இது தொல்லியல் மற்றும் மானுடவியல் துறைகளுக்கும் பொருந்தும். அவ்வாறு சுருக்குதல் பொருளற்றது என்றால், தத்துவ அறிவியல் மட்டும் ஏன் அந்த வரையரைக்குள் புகுத்தப்பட வேண்டும்?

பின், அறிவியலில் தத்துவ அறிவியலின் பங்கு தான் என்ன? பெரும்போக்காக பார்க்கும் போது, தத்துவம் ஒட்டுமொத்த மனித இனத்துக்குமானது என்பேன். எங்களைப்போன்ற தத்துவவாதிகள் அறிவியலை வார்த்தைகளில் விளக்குகின்றோம். நாங்கள் அறிவியல் முறைமைகளையும், மாதிரிகளையும் ஆராய்கின்றோம். நாங்கள், அறிவியலின் கோட்பாட்டு அடித்தளங்களோடும், கருத்துரு நுணுக்கங்களோடும் தொடர்புகொண்டுள்ளோம். இந்த அறிவுசார் ஆராய்ச்சிக்காக மனிதகுலம் எங்களுக்கு கடமைப்பட்டிருக்கின்றது. அண்டவியலில் பேய்சியன் புள்ளியல் முறையில் ஆய்வு செய்பவரோ அல்லது அதிஆற்றல் இயற்பியலில் எளிமைப்படுத்தப்பட்ட மாதிரிகளையோ உருவாக்கும் தத்துவ அறிவியலாலரின் பங்கு, மனிதகுலத்திற்க்கு ஒரு தொல்லியல் அறிஞரோ, வரலாற்று அறிஞரோ அல்லது மானுடவியல் அறிஞரோ அளிக்கும் பங்குக்கு சற்றும் குறைவானது இல்லை.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல விஞ்ஞானிகள், குறிப்பாக, ஐன்ஸ்டைன், போர், மேஃக் மற்றும் போர்ன் போன்றோர் தத்துவவியலில் அதிக ஆர்வம் காட்டினர். அம்மாதிரியான ஆர்வம் தற்போது குறைந்துள்ளது என கருதுகிறீர்களா?

ஆம். நாம் அறிவியல் குறித்தான தனித்துவமான எண்ணங்களை கைவிட்டுவிட்டோம். அறிவியல் மறுமலர்ச்சியின் போது உண்டான இது போன்ற யோசனைகளை இழந்துவிட்டோம். தத்துவவியல் நமது கலச்சார அறிவியலில் ஒரு முக்கியமான பங்கு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சார்பியல் மற்றும் குவாண்டம் கொள்கைகளின் பிதாமகர்கள், தத்துவத்தின் முக்கியத்துவதை அறிந்திருந்தனர். அப்போதைய இயற்பியல் விவாதங்களில் தத்துவம் ஒரு முக்கியமான இடத்தைக்கொண்டுருந்தது. ஐன்ஸ்டீனும் ஃபோரும் குவாண்டம் இயற்பியலின் முழுமையை குறித்து விவாதிக்கையில், அதில் பொருண்மையின் உண்மைஎன்பதன் விளக்கம் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். குவாண்டம் இயற்பியல் அனுமதிக்காவிட்டாலும், எலக்ட்ரானின் உண்மையானஇடத்தையோ அல்லது உண்மையானவேகத்தையோ கணக்கிடமுடியுமா? என்ற கேள்வி ஒரு தத்துவவாத கேள்வி.

இது போன்ற விவாதங்களை பல காரணங்களுக்காக இப்போது நம்மால் காண முடிவதில்லை. இயற்பியல் விஞ்ஞானிகள் இப்போதெல்லாம் பல்கலைகழகங்களில் படிக்கும் போது வேறு துறை பாடங்களையோ அல்லது பள்ளி வகுப்புகளில் விரிவான பாட முறைகளையோ பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அதிக அளவில் இணைந்து மேற்க்கொள்ளப்படும் ஆய்வுகளில் குறைந்த அளவே அறிவியல் அறிவு தேவைப்படுகிறது. விரிவாக சொல்ல வேண்டுமானால், அறிவியல் ஆய்வுகளின் பண்பாடு வெளிப்படும், நிறுவன பயிற்ச்சிகள், ஆய்வு குறித்த மதிப்பீடு, ஆய்வுகான வசதிகள், ஆய்வுக்கான நிதி போன்றவை பெருமளவில் மாறியுள்ளன. இன்று அறிவியல் ஆய்வு என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுக்கு உபயோகப்படும்படியோ, அல்லது முற்றிலும் உபயோகம் இன்றியோ தான் உள்ளது.

எனவே, தத்துவ அறிவியல் (மற்றும் மானுடவியல்) போன்ற அடிப்படை ஆராய்ச்சிகள் அவசியமாகின்றது. இவை நமது கலாச்சார பெருமையிலும், அறிவியல் வரலாற்றிலும் இன்றிமையாத ஒரு பகுதி என்பதை நாம் உணரவேண்டும்.

அறிவியலின் வேகத்துக்கு தத்துவத்தால் ஈடுகொடுக்கமுடியவில்லை என்று ஒரு குற்றசாட்டு உண்டு. அறிவியல் தத்துவவியலில் புதிய கேள்விகளை தோற்றுவித்துள்ளது என நீங்கள் கருதுகிறீர்களா?

நான் மீண்டும் வலியுருத்திக்கூறுவது என்னவென்றால், அறிவியலுக்கான அதே அளவீட்டை தத்துவத்துக்கு பொருத்தக்கூடாது என்பதே. எடுத்துக்காட்டாக, அறிவியலின் முன்னேற்றம் எவ்வாறு அளவிடப்படுகிறது? அது இறுதி விடையை நோக்கி எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கின்றது என்பதைக்கொண்டா? அல்லது கேள்விகளைத்தீர்க்கும் வேகத்தைக்கொண்டா? அல்லது, தொழில்நுட்ப வளர்ச்சியைக்கொண்டா? இன்னும் சொல்ல போனால் மேற்ச்சொன்ன கேள்விகளே தத்துவமுக்கியத்துவம் உடையது.

1960கள் வரை அறிவியலின் முன்னேற்றம் என்பது, புதிய கொள்கைகளை உருவாக்குவதிலும், அவற்றை நிரூபிப்பதிலுமாக இருந்தது. விஞ்ஞானிகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு கொள்கையை நோக்கி பயனிப்பதாக எண்ணினர். ஆனால் 60களுக்கு பின், தாமஸ் குஃன் போன்றோர், இதற்க்கு மாற்றாக எவ்வளவு வேகமாக பிரச்சனைகளை தீர்க்கின்றோம் என்பதைக்கொண்டு அறிவியல் ஆய்வின் வெற்றியை அளவிடத்தொடங்கினர். அறிவியலின் அதிகபட்ச எல்லை என்ன என்பது குறித்தான கவலை இல்லாமல் போனது.

தத்துவ அறிவியல் தற்போது இம்மாதிரியான விவாதங்களை ஆராய்ந்து வருகின்றது. எனவே இன்று நமக்கு ஆய்வுப்பூர்வமான, அதே சமயம் வரலாற்று ரீதியிலான பிரக்ஞை ஏற்ப்பட்டுள்ளது.

அதே சமயம் நீங்கள் கூறியது போல, அறிவியலின் வளர்ச்சி புதிய கேள்விகளை தத்துவஇயலுக்கு நிச்சயமாக வழங்கியுள்ளது. குறிப்பாக, உயிரிமருத்துவம், பொறியியல், புவியியல் மற்றும் இயற்பியலில் போன்றவற்றில் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக உண்டாக்கப்பட்ட மாதிரிகளின் முக்கியத்துவம் மற்றும் அம்மாதிரிகளுக்கும் பரிசோதனைகளுக்குமான தொடர்பு போன்றவை தத்துவ அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே போல பேஃயன்ஸ் புள்ளியல், பேஃயன்ஸ் மாதிரி குறித்தான ஆய்வுகளை முடுக்கியுள்ளது. கடைசியாக, மூளைநரம்பியல் ஆய்வுகள் மனித மூளை எவ்வாறு செயல்படுகிறது என்ற தத்துவரீதியான முயற்ச்சிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பல்வேறுவிதமான முயற்ச்சிகளின் ஊடாக, தத்துவமும், அறிவியலும் ஒன்றோடு ஒன்று இணைந்து வளர்ந்து வருகின்றன என்றே கூறவேண்டும்.

அறிவியலில் யதார்த்த மற்றும் போலி யதார்த்தங்களுக்கு இடையே விவாதம் நடைபெருவதாக கூறியுள்ளீர்கள். அது பற்றி விளக்க முடியுமா?

ஆம். அந்த விவாதங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. மேலும் அது அடிப்படையில் அறிவியலின் தத்தவ நோக்கு குறித்தானது. அறிவியலின் அடிப்படையான கேள்வியென்ன? அறிவியலின் நோக்கம் இயற்க்கை குறித்த உண்மைகளை ஆராய்வதா? அல்லது காணப்பட்ட நிகழ்வுகளின் தரவுகளை மட்டும் சேகரிப்பதா?

இந்த வேறுபாடுகளை வான்வியலில் துல்லியமாக உணர்ந்துகொள்ளலாம். தாலமியின் வானவியல் பல நூறாண்டுகளுக்கு நிகழ்வுகளின் தரவுகளைசேமிப்பதாக மட்டுமே இருந்து வந்தது. கோள்களின் நீள்வட்ட பாதை குறித்த எந்த முன்னறிவிப்புகளையும் அது செய்யவில்லை. கோப்பர்நிக்கஸின் மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது கோப்பர்நிக்கஸுக்கும் ரோமன் திருசபைகளுக்கும் இடையே சச்சரவுகளை உண்டாக்கியது. ஏனெனில் கோப்பநிக்கஸின் வானியல் கோள்களின் தரவுகளை சேமிப்பதற்க்கு பதிலாக அவற்றின் இயக்கங்கள் பற்றிய உண்மையை ஆராய்ந்தது.

இதை நாம் அப்படியே தற்கால அறிவியலுக்கு பொருத்திப்பார்க்கலாம். வண்ண குவார்க்குகள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அல்லது குவாண்டம் வண்ணைஇயக்கவியலின் வலிமயான தொடர்புகள் அவ்வாறு தோற்றமளிக்கின்றனவா? ஹிக்ஸ் போஸான் உண்மையான துகளா? அதே போல கரும்பொருள்? இவ்வாறாக எல்லையின்றி விரிவடைய முடியும்.

நீங்கள் முன்னோக்கிய யதார்த்தவாதம் என்ற கருதுகோளை முன்வைக்கின்றீர்கள். என்ன அது?

நான் முன்னோக்கிய யதார்த்தவாதத்தை யதார்த்தவாதத்தின் ஒரு பகுதியாக பார்க்கின்றேன். அது உண்மைஎன்பது அறிவியலுக்கு முக்கியமான ஒன்று (குறைந்தபட்சம் என்னளவில்) என்று வலியுருத்துகின்றது. கிடைக்கும் சாட்சிகளின் அடிப்படையிலும், திரட்டப்படும் தரவுகளின் அடிப்படையிலும் சிறந்த மாதிரிகள் தயாரிக்கப்படலாம். ஆனால் நமக்கு இயற்க்கையை பற்றி கடவுளின் கண் இல்லை என்பதையும் நாம் ஒத்துக்கொள்ளவேண்டும். நமது கருத்துருவாக்கங்கள், கோட்பாடுகள், முறைமைகள் மற்றும் தொழில்நுட்ப கூறுகள் வரலாறு மற்றும் கலச்சாரத்தின் அடிப்படையில் அமைந்தவை. இதற்க்கு அர்த்தம், நாம் இயற்க்கையை குறித்த உண்மையை அறியமுடியாது என்பதா? நிச்சயமாக இல்லை. இதற்க்காக அறிவியலின் முன்னேற்றத்தை தடை செய்ய வேண்டுமா? கண்டிப்பாக இல்லை.

நீங்கள் விஞ்ஞானத்தில் ஆதாரத்தின் பங்கு பற்றி எழுதியுள்ளீர்கள். இது சூடான விவாதங்களை கிளப்பி உள்ளது. ஏனெனில், இயற்பியலின் சில பகுதிகள் போதுமான ஆதராங்கள் இன்றி உள்ளன. இந்த கோட்பாடுகளை சோதிக்க மாதிரிகளும் இல்லை. இம்மாதிரியான நிலையில், நீங்கள் பரிணாமவாதம் இல்லாதபோதும் உண்மையான அறிவியல் ஆய்வு (இந்த கட்டத்தில்) செய்யப்படலாம் என்று நினைக்கின்றீர்களா?

நான் குறிப்பிட்டது போல இது ஒரு முக்கியமான கேள்வி. நம் அறிவில் முன்னோக்குத் தன்மை இருந்தாலும், அது யதார்த்தமாக இருக்கின்றதா என்று சோதிக்கவேண்டும் என்பதே கேள்விக்கான பதில். மேலும், இது நாம் எவ்வாறு கற்பனாவாத கூறுகளை சேகரித்து, பகுபாய்வு செய்து, ஆதரங்களை புரிந்து கொள்கிறோம் என்பதிலும் இருகின்றது (இது உண்மையானதாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்). அண்டவியல் அல்லது துகள் இயற்பியல் போன்ற பகுதிகளில் ஆதாரங்கள் சேகரிப்பது மட்டும் கடினமான வேலை இல்லை, சான்றுகளை விளக்குவதற்கு நாம் கொண்டுள்ள கருவிகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. அப்படியானால், அந்த கருவிகளை உண்மையைக் கண்டுபிடிப்பதற்கானவேலையில், காட்டாக அதிசமச்சீர் துகள்கள் அல்லது கரும் ஆற்றல் போன்ற துறைகளில், எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று சொல்வது மிக முக்கியமானது.

எடுத்துக்காட்டுக்கு, அதிசமச்சீர் துகள்களை பற்றிய ஆய்வையே எடுத்துக்கொள்வோம். இங்கே ஒரு விஞ்ஞானி முதலில் கற்பனாவாத கோட்பாட்டை உருவாக்குகிறார், பின் அதிலிருந்து, அனுபவ ரீதியான விளைவுகள் எடுக்கப்படுகின்றன. பிறகு சோதனைச்சாலையில் விளைவுகள் சரியா, தவறா என்று சரி பார்க்கப்படுகின்றன. இன்றைய நிலையில் இது ஒரு பழமையான் வழிமுறையாகும். விளைவுகளை சோதிக்கும் விஞ்ஞானிகளுக்கு இது அதிகமான நேர விரையத்தை உண்டு பண்ணக்கூடியது. மேலும், அனைத்து துகள் கோட்பாடுகளையும் சரி பார்ப்பதோ, அல்லது அனைத்து அதிசமச்சீர் துகள் மோதல்கலன் தரவுகளையும் உபயோகப்படுத்துவதோ சாத்தியமற்றது.

மாற்றாக, துகள் இயற்பியல் ஆய்வாளர்கள் மேம்பட்ட முறையினை கைகொள்கின்றனர். இங்கு இலட்சிய மாதிரிக்குஅப்பாற்பட்ட புதிய, ஆதாரங்கள் இதுவரை கண்டறியப்படாத, ஆற்றல் மண்டலங்களை ஒதுக்கிவிடுகின்றனர். எது நம்மால் சாத்தியமாகூடியதோ அங்கு மட்டும் புதிய வாய்ப்புகளுக்காக ஆய்வு மேற்க்கொள்கின்றனர். இம்முறையில், புதிய துகள்கள் எதுவும் கண்டுபிடிக்கபடாவிட்டாலும் துறை முன்னேறியதாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

தத்துவரீதியாக பார்க்கையில் மாற்றம் என்பது பழைய யோசனைகளும், கோட்பாடுசோதனை இடையேயான ஒருங்கினைவு மட்டுமல்ல. மாறாக, அறிவியல் முன்னேற்றமும் உண்மையை நோக்கிய பயணமுமே ஆகும். அதே சமயத்தில், என்னைப்போன்ற யாதர்தவாதிகளின் பங்களிப்பு முக்கியமானதாகும். யதார்தவாதியின் பங்களிப்பானது, இயற்க்கையில் எது சாத்தியம் என்பதை பற்றியே இருக்கும். இதிலிருந்து உண்மையான சில படிகளை அடைவதே வெற்றியாகும். முன்னோக்கிய யாதார்த்தவாதம் இதனை நோக்கியே பயணப்படுகிறது.

இது குறித்தெல்லாம் எப்போது சிந்திக்க தொடங்கினீற்கள்?

1996ல் ரோம் பல்கலைகழகத்தில் உள்ள இயற்பியல் நூலகத்தில் பிசிகல் ரிவ்யூவின் பழைய இதழ்களை புரட்டிக்கொண்டிருந்த போது! தற்செயலாக 1935ல் வெளிவந்த ஐன்ஸ்டைன்பொடொஸ்கிரோசனின் குவாண்டம் இழையில் குறித்த கட்டுரையை கண்டேன். அதன் முதல் பக்கத்தில் இருந்த இயற்பியலின் உண்மைத்தன்மைஎன்ற சொல்லால் மிகவும் கவரப்பட்டேன். ஏன் ஒரு இயற்பியல் கட்டுரையில் உண்மைத்தன்மைகுறித்து கவலைப்படுகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. மேலும், அந்த கட்டுரைக்கு நீல்ஸ் போஃரின் பதிலையும் நான் கண்டேன். அதுவே உண்மைத்தன்மைகுறித்த என் ஆய்வின் முதல் படி.

அறிவியலின் மதிப்பை பரப்பியதற்காக ராயல் அகடெமியின் இந்த பரிசு உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது நடைபெறும் அறிவியல் விவாதங்களில் தத்துவத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்?

நிறைய! நிச்சயமாய் ஒரு தத்துவவாதியின் வேலை அறிவியல் ஆய்வுசெய்வதோ அல்லது ஒரு கோட்பாட்டைவிட இன்னொன்று சிறந்தது என்று சொல்வதோ அல்ல! சில மோசமான தத்துவவாதிகள் இதனை செய்கின்றார்கள் என்று அறிவேன். ஆனால், என்னைப்பொருத்தமட்டில், ஒரு தத்துவவாதியின் வேலையானது, கோட்பாட்டு அறிவியல் ஆய்வில் ஆதாரங்களின் பங்கையும், அதன் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை சோதிப்பதே ஆகும். முக்கியமாக ஆய்வு முறைமைகள் எந்த அளவு பயனுள்ளதாக இருக்கின்றன என்று ஒரு தத்துவவாதி சோதிக்க வேண்டும்.

இந்த வகையில் தத்துவ அறிவியலின் பங்கு சமூகத்தில் இன்றியமையாதது என்று நினைக்கின்றேன். தத்துவவாதிகள் அறிவியலின் முக்கியத்துவத்தை சாமானியர்களுக்கும் கொண்டு சேர்ப்பார்கள். அறிவியலுக்காக குரல் கொடுப்பதிலும், பொதுவான அறிவியல் குறித்த தவறான கருத்துகளை விளக்குவதிலும், அறிவியல் சார்ந்த அரசியல் பிரச்சனைகளிலும், அறிவியல் திட்டங்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பார்கள். இதனால் தான் நான் எப்போதும், அறிவியலின் பயனை பற்றி மக்களுடன் விவாதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி குவாண்டா மேகசின்

காதல் கடிதம்!

சமீபத்தில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றை படித்த போது, எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றி சுவரசியமான விஷயம் ஒன்று தட்டுப்பட்டது. பிரபஞ்சனின் இளவயதில் தன் கண்ணில் தட்டுப்படும் இளம் பெண்கள் அனைவருக்கும் காதல் கடிதம் தந்து விடுவாராம். தந்த கடிதங்கள் பலனலித்ததா என்று தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் காதல் கடிதம் என்ற செய்தி என்னை நிரம்பவே கவலைக்குள்ளாக்கியது! பின்னே ஒருவருக்கு கூட காதல் கடிதம் எழுதாத ஒருவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா? இனி இந்த வயதான காலத்தில் யாருக்கு எழுதுவது? அப்படியே எழுதினாலும் இந்த காலத்துப்பெண்கள் கடுதாசியையெல்லாம் மதிப்பார்களா என்று தெரியவில்லை. அதிலும் முக்கியமானது முன் பின் தெரியாத பெண்ணுக்கு என்னவென்று கடிதம் எழுதுவது? பிரபஞ்சன் எழுதும் கடிதங்கள் சுமாராக பதினைந்து பக்கங்கள் வருமாம். ஆனால் பதினைந்து பக்கத்துக்கு என்ன எழுதினார் என்று தெரியவில்லை. கவிதைகள் எழுதலாம், ஆனால் பொய் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. செயற்க்கை அறிவை பற்றியோ, சிசிலியன் டிபன்ஸ் பற்றியோ எழுதலாம் ஆனால் செருப்படி வாங்கும் உத்தேசமும் இல்லை.

கல்லூரி காலத்தில் காதல் கடிதம் போன்ற ஒன்று எழுத வாய்ப்பு கிடைத்தது. நண்பன் ஒருவன் வகுப்பு பெண் ஒருவருடன் நல்ல நட்பில் இருந்தான். அவன் அப்பெண்ணை காதலிக்கிறான் என நண்பர்கள் நாங்கள் கிண்டல் செய்வோம். அவனோ, ஒரு வெட்கத்துடன் சும்மா இருங்கடா என்று ஓடி விடுவான். அவன் ‘உம்’ என்றால் அந்த பெண்ணிடம் போய் பேச நாங்கள் தயாராய் இருந்தோம். ஆனால் ‘உம்ஹும்’ தான் வந்துகொண்டிருந்தது. ஒரு முறை லேப்பில் ஏதோ பரிசோதனை செய்யும் போது ஒயரை சீவுகிறேன் என்று கையை சீவிக்கொண்டேன். வந்த ரத்தத்தை ஏன் வீணாக்குவானேன் என்று ஒரு தாளில் ‘ஐ லவ் யூ’ என்று எழுதி வைத்துக்கொண்டேன். அந்த நண்பனிடம், ரத்ததில் எழுதிய தாளை அந்த பெண்ணிடம் நீ தான் எழுதியதாக கொடுத்துவிடுவோம் என்று மிரட்டி வைத்து இருந்தோம். அவனும் பயந்து கொண்டு டீ, வடை என்று ஸ்பான்ஸர் செய்து கொண்டிருந்தான். அடுத்த கட்டமாக திரைப்படம் ஒன்றுக்கு அழைத்துப்போக சொல்ல இம்முறை கொடுக்கறதுனா கொடுத்துக்க என்றுவிட்டான். மனம் தளராத நண்பன் ஒருத்தன் என்னிடம் ‘நீ அந்த பேப்பரக்கொடு, நான் கொண்டுபோய் கொடுக்கறேன்’ என்றான். பர்ஸில் இருந்து பேப்பரை எடுத்து விரித்தால், எழுதிய எழுத்துக்களை காணோம். அன்று கற்று கொண்ட பாடம் ரத்தத்தில் எழுதிய கடிதம் எவிடன்ஸ் ஆகாது!