புத்தாயிரத்து புதல்விக்கு தந்தை

பாரதிதாசனின் தலைவாரி பூச்சூடி எனக்கு பிடித்த வரிகளுள் ஒன்று. சமீபமாக இந்த வரிகள் அடிக்கடி நினைவில் வந்தன, ஆனால் அதற்கு பிறகு என்ன என்பது தெரியவில்லை. விளையாடப்போவென்றாள் அன்னை பின் சேர்த்த போது சுவரசியமாய் இருந்தது. பிறகு இணையத்தில் மீதி பாடலை பார்த்து என்னுடைய தனி பதிப்பாக இதை எழுதியாயிற்று! பாரதிதாசன் மன்னிப்பாராக!

தலைவாரி பூச்சூடி விளையாட போவென்றாள் அன்னை
நீயோ சிலைபோல ஏனங்கு நின்றாய்?
நீ இல்லாத வலிகளை ஏன் வந்ததென்றாய்
இலை போட்டால் வந்து விழுமாவுடல்
நலம்?
வீதி தோறும் சுற்றி வருதல் கொண்டு
சேர்க்குமுள நலம்.
தீங்கனிச்சாறள்ளவோ ஆட்டம் - நீ வயிராற பருகுவாய் போ
என் புதல்வி!
இளையாத பெண்ணாய் இருந்தால் கேலி பண்ணுவார் ஊரார்
ஆதவன் மறையும் முன்‌ ஆடி வந்துவிடு
என் கண்ணல்ல
அண்டை வீட்டு பெண்களோடு
களைப்பாய்‌ இருக்கும் இப்போது - விளையாடித்தீர்க்க மனம் பொங்குமப்போது.
முக்கடல் கொண்ட தமிழ்நாடு
அலைபோலே நீ விளையாடு!

Dil Bechara: Broken people breaking hearts!

Personally I am against remaking films. I don’t even prefer dubbed movies (The only dubbed movie I watched and enjoyed was Harry Potter!). The reason is human feelings are universal. When we remake the things, in the name of nativity and localisation people deteriorating the soul of original movie.

But Dil Bechara is something different and I loved it. May be its due to the reason that its Sushant’s last film. Yes, his performance is awesome. We really lost an great actor. But there is something more in the film.

I am not sure whether its Sanajana’s eyes or smile, or may be her mother’s care for her dying daughter, or may be that friendly father (usually only lead males are lucky enough to get such a dads, but here it is slightly twisted). Or may be the positivity and love filled vibarant Jamshedpur! When the last time you saw Bengali foods and heard Tamil words in a Hindi film?

Somehow the film resembles Manirathnam’s Ithayathai Thirudathe and even though its not upto that level, I prefer this version rather than the original Fault In Our Stars movie. May be this opinion could be different if Sushant was alive but since the last suppers are always special this one is so memorable.

பாரம்பரிய மருத்துவத்தில் என்ன தான் பிரச்சினை?

ஏன் அலோபதி மட்டும் தான் மருத்துவமுறையா? மாற்று மருத்துவமே கிடையாதா? இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் எப்படி மருத்துவம் செய்து கொண்டோம் என்ற குரல்களில் இருந்து, கபாசுரகுடிநீரை உலகெங்கும் பரப்பி கொரோனாவை ஒழித்து நம் முன்னோர் புகழ் பரப்ப வேண்டும் என்பது வரை குரல்கள் சமீபமாக ஒலித்து வருகின்றன. அவர்களுக்காக இந்த கட்டுரை.

முதலில் மாற்று மருத்துவம் என்கிற பதத்தையே நான் நிராகரிக்கிறேன். உங்கள் வண்டிக்கு அப்போலோ டயர் போட்டு இருக்கின்றீர்கள், சரியில்லை என எம்.ஆர்.எப்க்கு சென்றால் அது மாற்று. மரடயர் மாட்டி ஓட்டுவேன் என்பது வெறும் பிதற்றல். அதெப்படி ரப்பரில் ஓடும் வண்டி மர டயர் இட்டால் ஓடாதா என்றால் ஓடும். ஒன்று அது ரப்பர் டயர் அளவு ஆப்டிமைஸ் செய்யப்பட வேண்டும் அல்லது அப்படி ஓட்டுவதால் வரும் விளைவுகளை சந்திக்க வேண்டும். ஏறத்தாழ இதே நிலை தான் பாரம்பரிய மருத்துவத்திற்க்கும்.

இன்னோரு எடுத்துக்காட்டை பார்ப்போம். உங்களுக்கு நெஞ்சு வலிக்கிறது. ஒரு மாத்திரை போட எண்ணுகிறீர்கள். ஒருவர் வந்து, அந்த மாத்திரையை நூறாக உடைத்து அதில் ஒரு துண்டை எடுத்து நூறு லிட்டர் நீரில் கலக்குகிறார். பின் அதில் இருந்து ஒரு மில்லி எடுத்து மறுபடி ஒரு நூறு லிட்டர் நீரில் கலக்குகிறார். இப்படியே முன்னூறு முறை செய்த பிறகு கடைசி ஒரு மில்லியை உங்களிடம் தந்து இந்தா இது அந்த மாத்திரையை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது ஆனால் பக்க விளைவுகள் இல்லாதது என்கிறார். குறைந்தபட்ச அறிவோ அல்லது பன்னிரென்டாவது வேதியலோ படித்தவர்கள் சிரித்துவிடுவார்கள் இதற்கு. ஆனால் ஹோமியோபதி மருந்துகள் இப்படித்தான் தயார் ஆகின்றன. இதைக்கொண்டு தான் கொரோனாவை குணப்படுத்த வேண்டும் என்கிறார்கள். வெளிநாடுகளில் ஹோமியோ மருந்துக்களில் placebo என்று முத்திரை குத்தப்பட்டு வர, நம் நாட்டில் தான் அதற்கொரு மினிஸ்ட்ரியை உருவாக்கி அவர்கள் வாட்ஸப் பார்வர்டுகளை விட மோசமாக அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அதே போல நிச்சயமாய் இயற்கையாய் கிடைக்கும் பொருட்களுக்கு மருத்துவதன்மை உண்டு தான். ஆனால் அதை எந்த அளவுக்கு உபயோகிப்பது என்பது தான் கேள்வி. பாலில் மிளகுத்தூள், மஞ்சள் போட்டு குடித்தால் இருமல் குறையும். ஆனால் டிபி’க்கு இதை மட்டுமே மருந்தாக பரிந்துரைக்கலாமா? மேலும் சித்த/ஆயுர்வேத மருத்துவம் குடும்ப தொழிலாக அவர்களுக்குள் மட்டும் புழங்கி கொள்கிற ரகசிய மொழியாகவே இருந்து வந்துள்ளது. காலவோட்டத்தில் இவை சிதைந்த பின் இது தான் சித்த மருத்துவம் என்று ஏமாற்றும் கும்பலே இப்போது அதிகம்.

இன்னொன்று சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் பல சித்தர் பாடல்களில் இருந்து வருகிறது. அவை பெரும்பாலும் தத்துவ புலம்பல்கள். இருபொருள் கொள்ளத்தக்க வரிகளே அதில் அதிகம் (சித்தர் பாட்கள் என்று வழங்கும் 18, 19ம் நூற்றாண்டு பாடல்கள் பெரும்பாலும் இட்டுகட்டியதே. மொழியியல், ஏன் சித்த அறிஞ்சர்களே அவற்றை பொருட்படுத்துவதில்லை). அவற்றின் உண்மையான பொருள் அறிந்தாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாவரங்களை நாம் அறியோம். வெகுபரவலாக படிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு வரும் சங்க இலக்கியத்தில் வரும் தாவரங்களையே நாம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் பண்பாட்டு கலாச்சர மாற்றதிற்கு ஏற்ப தாவரங்களின் பெயர்களுக் மாறி வந்துள்ளன. கர்னாடக இசை தான் தமிழிசை. ஆனால் அதில் உள்ள ஒரு ராகத்தை சங்க பண்ணோடு நம்மால் இணைக்கமுடியுமா? நிலைமை இப்படி இருக்க குத்துமதிப்பாக புரிந்து கொள்ளப்பட்டு குத்துமதிப்பாக தான் செயல்பட்டு வருகிறது சித்த ஆயுர்வேத மருத்துவம்.

இதில் முக்கியமானதொன்று, சித்த மருத்துவத்தில் பதப்படுத்தி மருந்து வழங்கிய செயல்கள், என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, குறைவு தான். பெரும்பாலும் வைத்தியர் வீடுகளுக்கு அன்றன்று சென்று மருந்தரைத்து பெற்றுவருவது நடந்திருக்கும் அல்லது வழங்கப்பட்ட குறிப்புகளை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று வழங்கப்படும் சித்த/ஆயுர்வேத மருந்துகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன? பெரும்பாலான சித்த மருந்துகளில் உலோகங்களோ, செயற்கை வேதிப்பொருட்களோ கலக்கப்பட்டு ஸ்டபளைஸ் பண்ணப்படுகிறது. இதில் உலோக கலப்பு மிகப்பெரிய பாதிப்பை உண்டு பண்ணக்கூடியது. உத்திரவாதமாய் கிட்னி சட்னியாகிவிடும்.

ஏன் அலோபதியில் பின் விளைவுகள் இல்லையா? நிச்சயமாய் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி பலனளிக்க கூடியது. 30 – 40 சராசரி வாழ்நாளாக இருந்தது இன்று 68 ஆகியிருப்பது அலோபதியால் தான். கண்டிப்பாக இதில் நிறுவனங்களின் பேராசை இருக்கிறது, மக்களை கொள்ளையடிக்கிறார்கள் இன்னும் பல குறைகள் இருக்கிறது ஆனாலும் மாற்று மருத்துவத்தை விட சிறந்தது. நாம் மாற்றம் கொண்டுவர வேண்டியது இங்குதானே ஒழிய ஒட்டு மொத்தமாய் மரப்பக்கு திரும்புகிறேன் என்பதல்ல. அப்படியானால் சித்தா, ஆயுர்வேதம் இருக்கக்கூடாதா? இருக்கலாம். அவற்றின் விதிகள் யுனிவர்சலாக இருப்பின். இந்த நோய்க்கு இந்த மருந்து எடுத்தால், அது இப்படி செயல்பட்டு இவ்வாறு நோய் நீக்கும் என்று சொல்ல முடிந்தால் அவற்றை முயற்சிக்கலாம். அதைவிட்டு கபசுரநீர் அருந்தினால் எதிர்ப்பு சக்தி பெருகும் என்று ஜல்லி அடிப்பது சரிப்பட்டு வராது. ஏனெனில் வழைப்பழமும் எதிர்ப்புசக்தி தரும், எழுமிச்சையும் தரும், இஞ்சியும் தரும். இவற்றின் எதிர்ப்புசக்தி அளவென்ன, இவற்றை விட கபசுரநீர் எப்படி சிறந்தது. அது எப்படி செயல்படுகிறது என்பதை விளக்காத வரை இது அரைகுறை ஆர்வக்கோளாறாகவே பார்க்கப்படும்.

இறுதியாக அரசே இம்மாதிரி பரிந்துரைப்பதை உண்மையிலேயே திசை திருப்பும் வேலையாகத்தான் நான் பார்க்கிறேன். பொது மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது என எத்தனையோ விஷயங்கள் செய்வதற்கு இருக்க, கபசுர குடிநீர வழங்கிவிட்டோம் இனி ஒன்றும் பிரச்சனை இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதே மிகப்பெரிய ஏமாற்று வேலைதான். மக்களுக்கு எல்லாவற்றிலும் புது டெக்னாலஜி வேண்டும். ஆனால் ஏன் மருத்துவத்தில் மட்டும் இந்த பிற்போக்குத்தனம்? பசுமை புரட்சி இல்லையென்றால் லட்சகணக்கானோர் பசி பட்டினியில் இறந்திருப்பார்கள். வெண்புரட்சி இல்லையேல் பலநூறு சவளை குழந்தைகள் பத்து வயதிற்க்கு முன்பே இறந்திருக்கும். நவீன மருத்துவம் இல்லையேல் அம்மை, வைசூரி, காலரா என்று மனித இனமே அழிந்திருக்கும்.

இது ஒரு மாபெரும் மானுட சங்கிலி. பல்லாயிரம் பேரின் உழைப்பும் தியாகமும் நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. இதை விமர்சிப்பது எளிது. ஆனால் கைவிட்டு மாற்றை உண்டாக்குவது சாத்தியமே இல்லாத ஒன்று. எத்தனை வேண்டுமானாலும் தூற்றலாம், எதனை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் இறுதியில் உயிர் போய்விடுமோ என்கிறபோது அலோபதிக்குத்தான் ஓடி வரவேண்டும். அதிகரித்து வரும் பாரம்பரிய மருத்துவம் குறித்த கூச்சல்களை நான் வியாபார சதியாகவே பார்க்கிறேன். ஒரு சிலரின் வணிக நோக்குக்காக திட்டமிட்டு முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல வகையறா கருத்துகள் பரப்பப்பட்டு அவற்றை படித்த சிலருமே திரும்ப சொல்லும் நிலைமைக்கு வந்திருக்கிறோம். மேற்ச்சொன்னவற்றில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். ஆனால், எந்த ஒரு அலோபதி மருந்தை அல்லது பெரும்பாலனவற்றில் ஒன்றை எடுத்துக்கொண்ட்டாலும் அதன் வேதியியல் குறியீட்டில் இருந்து அது செயல்படும் முறை, பின்விளைவுகள் என இன்று உட்கார்ந்த இடத்திலேயே நீங்கள் தெரிந்து கொள்ளமுடியும். அந்த நிலைக்கு மாற்று மருத்துவ முறைகளும் வரும் வரை அவற்றை போலி என்றே சொல்லுவேன். ஒரு போதும் அவை விவாதிக்கும் இடத்திற்கு மாற்று மருந்துக்கள் வராது என்றும் அடித்து சொல்லுவேன். அப்படி ஒரு நிலை வருமாயின் மேற்கொண்டு விவாதிக்கலாம். அதுவரை மேற்சொல்ல எனக்கொன்றுமில்லை.

திராவிட போர்வாட்கள்!

நேற்று ஜெயமோகன் ராஜன்குறையை விமர்சித்து, நாடக காதல் என்ற பதத்தை உருவாக்கியது அவரும் அவர் சார்ந்த இயக்கமும் தான். அவை ஆய்வுக்கட்டுரைகளாக வெளியிடப்பட்டு, அனைவருக்கும் தெரிந்த உண்மையாகவும் வைக்கப்பட்டு, ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே இராமதாஸ் அந்த பதத்தை வந்தடைந்தார் என்று குறிப்பிட்டுருந்தார்.

இன்று அந்த ஆய்வுக்கட்டுரையினை முழுமையாக படிக்க நேர்ந்தது. அதன் உரலி இதோ (https://www.jstor.org/stable/4412773?seq=1). தலித் ஆண்கள், தங்கள் ஆண்மை திமிரின் காரணமாகவும், கட்டுபாடற்ற தன்மையினாலும் ஒரு வேலையில் நிரந்திரமாக இருக்கமுடிவதில்லை. மேலும் சாகசத்திற்க்காக உயர்சாதி பெண்களை துரத்தி காதலிக்கின்றனர் என்றெல்லாம் ஆய்வுகட்டுரை போகிறது. உயர்சாதியினர் இதனாலேயே தங்கள் பெண்பிள்ளைகளை இளம்வயதிலேயே மணமுடித்து தந்துவிடுகிறார்கள் என்றும் பதிவு செய்கிறது கட்டுரை. இம்மாதிரியான ஒரு விஷயத்தை ஜெயமோகனோ, அல்லது வலதுசாரி இயக்கதினரோ வெளியிட்டு இருந்திருந்தால் இன்னேரம் என்ன நடந்திருக்கும்? ஏன் திராவிட போர்வாட்களுக்கு மட்டுமிந்த விதிவிலக்கு?

இதில் இன்னும் ஒரு சுவரசியமான விஷயம், அந்த ஆய்வு கட்டுரை எழுதியவர்களில் ஒருவர் இன்று பொருளாதார மேதை என்று அறியப்படும் ஜெயரஞ்சன் அவர்கள். ராஜன் குறை களாஆய்வு நடத்தி சேகரித்த தகவல்களை எம்.எஸ்.எஸ். பாண்டியனின் மனைவியும், ஜெயரஞ்சனும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். எம்.எஸ்.எஸ் பாண்டியனை தெரியாதவர்களுக்கு – திராவிடப் பேரறிஞர் என்று கொள்ளவும்.

பொதுவாக திராவிட இயக்கங்களை பாப்புலிஸ்ட் பார்ட்டீஸ் எனலாம். அந்தந்த காலத்தில் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை எதிரொலிப்பது இந்த கட்சிகளின் தன்மை எனலாம். ஆனால் அவர்கள் கொள்கை என்று வைப்பது என்னவென்று பார்த்தோமெனில் இம்மாதிரியான ஆய்வுகளை தான். இதை ஜெயமோகன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில்,

“இதைப்போன்ற உள்நோக்கம் கொண்ட, தன்னலம்மிக்க, ஆய்வாளர்கள் பேரழிவுகளை உருவாக்கிவிடுவார்கள். எல்லா சூழலிலும் பிற்பாடு அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் அழிவுக்கருத்துக்கள் முதலில் இவர்களால்தான் உருவாக்கப்படும். ஓர் உதாரணம் சொல்கிறேன். இன்று கன்னடச்சூழலில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக பெருகி பேரழிவை உருவாக்கிய காழ்ப்பை ஓர் அரசியல் கருத்தாக முன்வைத்தவர் சிதானந்தமூர்த்தி என்ற பேராசிரியர். அவர் ஆய்வுச்சூழலில்தான் அந்தக் கருத்தை உருவாக்கினார். அது வாட்டாள் நாகராஜ் வழியாக தெருவுக்கு வந்து தலைகள் உருள காரணமாக ஆகியது. இந்தியா முழுக்க இத்தகைய தன்னலமே நோக்கமாகக் கொண்ட, பேராசிரியர்கள் ஆய்வுச்சூழலில் உருவாக்கி வெளியே விடும் கருத்துக்கள் பேரழிவை விளைவித்திருக்கின்றன. அத்தகைய ஒருவர் ராஜன் குறை.”

பொதுவாக திராவிட இயக்கத்தினரின் மேல் வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாடுகளில் ஒன்று அவர்கள் பெரும்பான்மையினரான நடுநிலை சாதியினரையே தங்கள் வாக்கு வங்கியாக கொண்டு அவர்களை வைத்தே அரசியல் செய்கிறார்கள் என்பது. அதனால் தான் பிராமணர்கள் மிக குறைவாகவோ அல்லது முற்றிலுமே அல்லாத கிராமங்களில் தான் சாதியம் உக்கிரமாக பாவிக்கப்படுகிறது என்பதை வசதியாக மறந்துவிட்டு தலித்துகளின் அத்தனை இடர்களுக்கும் காரணம் பிராமணர்களே என்று முன்வைக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் 90களில் இந்த திராவிட அறிஞர்களால் உருவாக்கப்பட்ட நாடக காதல் பதம் இன்று வெற்றிகரமாக நிறுவப்பட்ட ஒரு உண்மையாகவே தமிழ் சமூகத்தில் புழங்குகிறது. இந்நிலையில் திராவிட இயக்கம் மெய்யகவே சமூகநீதி பற்றியெல்லாம் கவலைப்படுகிறதா என்பதே என்னுடைய சந்தேகம்!

வந்து சூழும் இருள்

மத்திய அரசு மார்ச்சில் முழு ஊரடங்குக்கு உத்திரவிட்ட போது, அரசின் பல செயல்பாட்டில் உடன்பாடில்லாத போதும் இந்த ஒன்றிற்காக மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன். சில நூறு தொற்றுகள் இருக்கும் போதே ஊரடங்குக்கு போவது மிகவும் பாதுகாப்பானது என நான் கருதினேன். சில பல கை தட்டல்கள் விளக்கு பிடித்தல்கள் இருந்தாலும் ஒரு ஓரத்தில் அரசின்‌ மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் கூலி தொழிலாளிகளை கையாண்ட விதம் மத்திய மாநில ஒருங்கிணைப்பு போன்ற செயல்பாடுகள் சந்தேகத்தை அதிகரிக்கவே செய்தன. நான் சற்றும் எண்ணியிராத ஒன்று பொருளாதாரம்! கீழ்மத்தியதர ஏழை குடும்பங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டன என்பதை கண்கூடாக கண்டேன். சூரத்தில் கூலி வேலை செய்யும் மகன் பணம் அனுப்ப முடியாததால் தற்காலிகமாக வீடு வீடாக யாசகம் கேட்டு அலைந்த முதியவர் ஒருவரை கண்டபோது தான் ஊரடங்கின் தீவிரம் புரிந்தது. அதே சமயம் இத்தனை வேதனைகள் பலனை அளித்தனவா என்றால் தினமும் எக்ஸ்பொனண்ட்சியலாக எகிறும் தொற்று எண்ணிக்கைகளே விடையாக அமைந்தன. சற்றே யோசிக்கையில் அரசு குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக என்னத்தையோ செய்து வைத்திருப்பது தெரிகிறது! எக்னாமிஸ்டுகளையோ, எபிடமிஸ்டுகளையோ அரசு கலந்தாலோசித்ததாக தெரியவில்லை. நியூசிலாந்தில் ஆயிரமாவது தொற்றின் போதே சமூகபரவல் ஆரம்பித்துவிட்டதாக கூறி நடவடிக்கைகளை முடுக்கி விட்டது நியூசிலாந்து அரசு. ஆனால் லட்சத்தை கடந்த பின்னும் சமூக தொற்றா அப்படியென்றால் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது அரசு. குறைந்தபட்சம் நார்டிக் நாடுகளை போலாவது அபாய கட்டம் வரை பொறுத்து பின் ஊரடங்குக்கு வந்திருந்தால் பொருளாதாரத்தை கொஞ்சம் காப்பாற்றி இருக்கலாமோ என தோன்றுகிறது. விவாசாயம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களே இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வந்திருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதை சிதைக்கும் முயற்சியிலேயே மும்முரமாக இருந்தது. இப்போது அதோடு கொரனாவும் சேர்ந்து வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இன்னுமும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்களை நினைக்கும் தோறும் அவநம்பிக்கையும் வெறுப்புமே வந்து சூழ்கிறது. நமக்கு தேவை ஒரு தலைவன். ஆனால் அப்படி யாரும் இப்போதைக்கு இல்லை அல்லது இருக்க வேண்டிய இடத்தில் இல்லை என்பதே நிதர்சனம்!

முதுவேனில் நாட்கள்

சின்ன வயதில் கோடை விடுமுறை என்றால முதல் ஓரிரு வாரங்களுக்கு க்ரிக்கெட் என்றால், அடுத்து உடனடியாக பேக் செய்யப்பட்டு வேலூர் அனுப்பப்படுவேன். தெருவில் நம் பிரபல்யம் அப்படி. ஜன்னல் உடைகிறது சாக்கடையில் விழுந்த பந்து மேலே படுகிறது போன்ற அற்ப காரணங்களால் கரூர் ஒரு மகத்தான க்ரிக்கெட் வீரரை இழந்தது எனலாம். திரும்ப வருவதற்கான அனுமதி கரூர் திருவிழா சாட்டிய பின்னரே கிடைக்கும். எனக்கு தெரிந்து சுற்று வட்டாரத்தில் கடைசியாக வருவது கரூர் மாரியம்மன் திருவிழா தான். கம்பம் போட்டுவிட்டால், தீர்த்தம் ஊற்ற என்று சொல்லி தெருவே கிளம்பிபோவோம்.

அதிகாலை இரண்டு மணி போல் உசுப்பப்பட்டு, கையில் ஒரு பித்தளை சொம்பு தரப்படும். மஞ்சள், குங்குமம், திருநீறு என பேப்பரில் பொட்டலம் கட்டப்பட்டு, போகும் வழியில் வேப்பிலைகள் ஒடிக்கப்பட்டு, பசுபதிபளையம் செல்வோம். அமராவதியின் கடைமடையாதலால், மழைக்கால வெள்ளம் தவிர்த்து அமராவதி வற்றிய மணல் கோடு தான். நகராட்சி ஆற்றில் நீர்குடைகளை அமைத்திருக்கும். குளித்து, சொம்பில், குடத்தில் நீர் நிரப்பி, மஞ்சள் கலந்து, வேப்பிலை வைத்து சாமி கும்பிட்டு தூக்கினால், அதை கோவிலில் இருக்கும் கம்பத்தில் ஊற்றும் வரை கீழே வைக்க முடியாது. ஐந்து ரோடு, கச்சேரி பிள்ளையார் கோவில் தாண்டி பஜாரில் நுழைந்தால் கூப்பிடும் தூரத்தில் கோவில். ஆனால் ஒட்டு மொத்த ஊருக்கே திருவிழா என்பதால் கூட்டம் அலை மோதும். நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டிருக்க, அதிர்ஷ்டம் இருந்தால் ஜி.ஹெச்.எஸ் பள்ளி பக்கம் வால் இருக்கும். நாம் போய் ஒட்டிக்கொள்ளலாம். சில சமயம் மார்க்கெட், சர்ச் வரை நீள்வதுண்டு. நின்று ஒரு துளி நகர்ந்து பின் நின்று என்று அட்டை போல் சில மணி நேரம் ஊறினால் கோவில். தீர்த்ததை கம்பத்தில் ஊற்றி, அவசரமாக அம்மனுக்கு ஒரு கும்பிடை போட்டுவிட்டு வெளியே வருவோம்.

பல சமயங்களில் எங்கள் ஊர் அம்மனுக்கும் அதே சமயத்தில் நோம்பி சாட்டப்பட்டிருக்கும். எனவே மறுபடி மாவடியான் கோவில் துறையில் இறங்கி ஆற்றை குறுக்கே கடந்து மேலேறி நடந்தால் திருமாநிலையூர். அருகில் இருக்கு அடிபம்பில் குடம் நிரப்பி, மஞ்சள் இட்டு இந்த அம்மனுக்கும் தீர்த்தம் ஊற்றப்படும். தலைக்கட்டுகள் குறைவு என்பதால் கூட்டமிருக்காது. பெரும்பாலும் காலை ஆறு, ஏழு மணி போல வீட்டுக்கு வந்து விடலாம். அன்று மட்டும் எட்டு, ஒன்பது மணி வரை தூங்க அனுமதி உண்டு.இளவேனிலில் பூக்களின் வாசம் என்றால் முதுவேனிலில் மாங்காயும், காலையில் வீசும் மேலைக்காற்றும். அதில் படுத்துறங்குவது போன்றதொரு மகிழ்ச்சி இல்லை.

இதன்பின் பூச்செரிதல் விழா நடக்கும். அம்மன் வீதியுலா வர தெருவெங்கும் பூக்கள் சிதறி மணந்து கொண்டிருக்கும். திருவிழாவின் உச்சம் கடைசி மூன்று நாட்கள். எப்போதும் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் வரும். அதற்குள் அமராவதியின் மேல் வளர்ந்திருக்கும் முட்கள் நிரவப்பட்டு, ராட்டினங்கள், கடைகள் என ஒரு சிறு நகரமே அங்கு உண்டாகியிருக்கும். ஆற்றில் இருந்து பஜார் ரோட்டில், போஸ்ட் ஆபிஸ் வரை நான்கு ஐந்து கிலோமீட்டர்களுக்கு இந்த கடைகள் பரவிக்கிடக்கும். ஞாயிறன்று மறுபடி தெருவில் இருப்பவர்களோடு சேர்ந்து மாவிளக்கு எடுத்து போவோம். மறுபடியும் நடந்து தான். அதே கூட்டமோ அல்லது அதை விடக்கூட்டமாகவோ கிடக்கும். போகும்போது என்ன என்ன இராட்டினங்கள் வந்திருக்கிறது, புதிதாக என்ன பொம்மை வந்திருக்கிறது என்னபதை பார்த்தபடி போவோம். அப்போது எதுவும் கிடையாது. அதிகபட்சம் கச்சேரி பிள்ளையார் கோவில் அருகில் சல்லிசா கிடைக்கும் மாம்பழங்கள் வாங்கித்தருவார்கள். மற்றபடி, நீர்மோர் பானகம் என வழியில் கிடைக்கும்.

திங்கள் அக்கினிச்சட்டி எடுப்பார்கள். அதற்கு நானும் அம்மாவும் செல்வோம். ஆற்றிற்கு சென்று அக்கினிசட்டி எடுத்து வருபவர்களில் சட்டியில் எண்ணெய் விட்டு சற்று நேரம் வேடிக்கை பார்த்து வருவோம். சாப்பிட ஐஸ்க்ரீம், டெல்லி அப்பளம் என்று அம்மா வாங்கிதருவார்கள். பெரும்பாலும் அன்றைக்கும் அம்மாவுக்கு வேலை இருக்கும் என்பதால் பெரும்பாலும் ஆறு மணிக்கு போனால ஒன்பதிற்குள் வந்துவிடுவோம். மாலை அதே இடத்திற்கு அப்பாவோடு. இப்போது இராட்டினங்களை முயற்சிக்கும் தருணம். குடை ராட்டினத்தில் ஆரம்பித்து, கப்பல், ஏரோப்பிளேன் என ஒரு ரவுண்ட் வரலாம்.

செவ்வாய் காலை பெரிதாக ஒன்றும் இருக்காது. மாலையில் பக்கத்து வீட்டாரோடு சேர்ந்தோ அல்லது நாங்கள் மட்டுமோ, கடைவீதிக்கு செல்வோம். இப்போது பொம்மைகள் வாங்குவதற்கான தருணம். சில உடனடியாக கிடைக்கும். சில இன்னும் கொஞ்சம் உள்ளே போனால நல்லதாக கிடைக்கும் என உந்தபடுவேன். எப்போதும் தவறாமல் வாங்குவது ரப்பர் பந்துகள். வீட்டிற்குள் பந்து விழுந்தால் திரும்ப தராத நல்லவர்கள் வாழும் ஊரில் பந்துகள் அத்தியாவசிய தேவையாக இருந்தது. அப்படியே போஸ்ட் ஆபிஸ் வரை சென்று கரம், ஐஸ்க்ரீம் எல்லாம் சாப்பிட்டு வீடு வர இரவு ஒன்பது பத்தாகிவிடும்.

புதன்கிழமை, கம்பம் ஆற்றில் விடும் நாள். வீட்டில் கறி எடுக்கும் நாள். உறவினர்கள் வரும் நாள். வாணவேடிக்கை நடக்கும் நாள். ஆடு, கோழி, மீன் என அசைவ வாசனையில் மூழ்கி வந்திருக்கும் உறவினர்களோடு விளையாடி என அந்த நாளே பறந்துவிடும். மாலையில் பெட்ஷீட், கூடையில் தீனி என கும்பலாக கிளம்பி ஆற்றுக்கு போவோம். அதற்குள் கம்பம் கோவிலில் இருந்து கிளம்பி இருக்கும். வந்து ஆற்றுக்குள் இறங்கியவுடன் வானவேடிக்கை. சில சமயம் எங்கள் ஊர் திருவிழாவும் இருந்தால் இரண்டு பக்கமும் வாணவேடிக்கை நடக்கும். பெரியவர்கள் ஏதாவது பேசிக்கொண்டிருக்க நாங்கள் மணல் வீடு கட்டிக்கொண்டிருப்போம். அதுவும் என் அக்காவிற்க்கு எதுவும் துல்லியமாக இருக்க வேண்டும். அது கட்டும் வீட்டுக்கு ஒரே சைஸில் கிளிஞ்சல் தேடிக்கொண்டு வருவது என் பொறுப்பு. எப்போதும் தவறாத விஷயம் மழை. மழை வராது முடிந்த திருவிழக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நனைந்து கொண்டே வீடு வந்தால், அந்தாண்டு வேனில் காலம் முடிந்தது என்று அர்த்தம். அன்றிலிருந்து இரண்டொரு நாள்களில் பள்ளி திறக்கும்.

பின் வருவதொரு பட்டங்கள் உயரப்போகும் ஒரு காற்றாடி காலம்!

இனி எல்லோரும் விவசாயி ஆகிவிடலாமா?

இந்த குவரண்டைன் நாட்களில் வாட்சப் பார்வர்டுகளில் வாருங்கள் இயற்கைக்கு திரும்புவோம், விவாசாயிகளை ஆதரிப்போம் என்ற குரல்களை கேட்கிறேன். கிராமிய தன்னிறவு பொருளதாரம் என்று சொல்லப்பட்டாலும், பெரும்பாலானவை முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை வகையறா தான். என் சிற்றறிவுக்கு எட்டிய வரை இதை வகுத்துக்கொள்ள முயல்கிறேன்.

ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் விவசாயத்தை தொடங்கினார்கள் என்கிறார்கள். ஆற்று சமவெளிகளில் தொடங்கிய விவசாயம் மனித குலத்தின் ஒரு மாபெரும் பாய்ச்சல் என்றே சொல்லலாம். அலைந்து திரிந்து கொண்டிருந்தவர்கள் நிலையாக ஒரிடத்தில் அமையவும், அதிலிருந்து குடும்பம், அரசு தனிச்சொத்து போன்றவை வலுப்பெற்றதையும் பார்க்கலாம். ஆனால், ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தான் விவசாயம் ஒரு திட்டவட்டமான பொருளியல் அமைப்பாக வலுப்பெற்றது. தமிழக வரலாற்றையே பார்த்தால், சோழர்கள் காலத்தில், புதிய ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் வெட்டப்பட்டு நீரியல் மேலாண்மை செம்மையாக்கப்பட்டது. பின்னர் நாயக்கர்கள் காலத்தில் இது மேலும் வலுப்படுத்தப்பட்டது. கிராமிய அமைப்பே விவசாயத்துக்கு சாதகமானதாக மட்டும் உருவாக்கப்பட்ட ஒன்று எனலாம். ஆடுகள், மாடுகள் போல மனிதர்களில் ஒரு பகுதியினரை சாதியால் விலக்கி அவர்களின் மனிதவளம் உறிஞ்சப்பட்டது. இது பொருளியல் ரீதியாக சாதகமானதாகவும், இப்படிப்பட்ட அமைப்பின் மூலம் மட்டுமே உபரியை அடையமுடிந்ததாகவும் இருந்ததால், இந்த அமைப்பு ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் சிதையாமல் இருந்துள்ளது. இது இந்தியாவில் மட்டுமல்ல, கருப்பின அடிமைகளில் இருந்து மேலும் பல உதாரணங்கள் மூலம் இதை உலகம் எங்கும் பார்க்கலாம்.

ஆனால், தொழில்புரட்சி இயந்திரமயமாக்கலை கொண்டு வந்த போது இந்த அமைப்புகள் சிதற தொடங்கின. தண்ணீர் பாசனத்தில் இருந்து, உழவு, விற்பனை வரை இயந்திரங்களின் பங்கு விவசாயத்தில் நேரடி தாக்கத்தை உண்டாக்கியது. மேலும் தொழிற்சாலைகளின் வருகை அடிமைப்பட்டு கிடந்தவர்களுக்கு பொருளியல் சுதந்திரத்திற்கான ஒரு மாபெரும் வாய்ப்பாக உருவாகியது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் இருந்த ஐஸ் பேக்டரி போன்ற இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களே அதிகம் வேலை செய்ததாக தெரிகின்றது. இது சிறிது சிறிதாக நிலவுடமை அமைப்பை சிதைத்தது என்றால் மிகையல்ல. உழுவதற்கு எருது, அதன் சாணம் உரம், வயலின் வைக்கோல் மாட்டுக்கு உணவு என்பதில் இருந்து, உழ ட்ராக்டர், செயற்கை உரம் என வெளி தேவைகளாக உருமாறியது. காரணம், அதிகரித்த மக்கள் தொகை, அதீத உணவு உற்பத்தியைக் கோரியது. செயற்க்கை உரமும், இயந்திரங்களின் பங்களிப்பும் இல்லாதிருந்திருந்தால் பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியிலேயே இறந்திருக்கக் கூடும்.

இன்று விவசாயம் லாபகரமானது அல்ல என்ற நிலைக்கு வந்துவிட்டதாக சொல்கின்றனர். விவசாயிகளின் தற்கொலைகளில் இருந்து, வீட்டுமனைகளாகும் வயல்கள் வரை எல்லோருக்கும் தெரிந்த தகவல்கள் தான். விவசாயத்தின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? என் வரையில் இந்த மூன்றினைக் கூறுவேன். சீசனல் என்று சொல்லக்கூடிய பருவம் சார்ந்த விதைப்பு, உற்பத்தி – நுகர்வு சங்கிலி சார்ந்து திட்டமிடாதது, இறுதியாக இடைத்தரகர்கள். எனக்கு தெரிந்து கூடை முப்பது ரூபாய் என்று கொள்முதல் செய்யப்படும் தக்காளி பத்து கிலோமீட்டர் தள்ளி சந்தையில் கிலோ இருபதாக இருக்கும். எரிபொருள், உரம், வாகனத்துக்கு என வெளி ஆட்களை கொண்டுவர விவசாயம் அதிக மூலதனத்துக்கான தேவையை உண்டாக்கியது. இது கடனாகவே பெரும்பாலும் பெறப்படுகின்றது. இதனால் ஓரிரு வெள்ளாமை பொய்த்தாலே அதீத கடன் விவசாயிகளை நெருக்கத்தொடங்கி விடுகிறது. விவசாயிகளுக்கும் இது தெரியும், ஆனால் கட்டுபடுத்த கூடிய அளவிற்கு அவர்கள் பெரிய அமைப்போ, அல்லது சேமித்து வைக்க குளிர்பதன கிடங்குகளையோ ஏற்படுத்தும் அளவுக்கு வசதியோ இல்லாதவர்கள். இன்னுமும் நமது கிராமிய சமூகம் சாதி சார்ந்தே இருப்பதும், விவசாயிகள் பெரும் அமைப்பாக திரள்வதை தடை செய்கின்றன. மேலும் பருவம் சார்ந்து விதைக்கும் போது, வானிலையின் சிறு மாற்றமும் பெரும் இழப்பாக மாறுகின்றது. குறிப்பாக புவி வெப்பமடைதலால் அதீத பருவ மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் நாட்களில் இது ஒரு பெரும் பிரச்சனையா உருவெடுக்கக்கூடும். அதே போல ஒரே சமயத்தில் ஒரே பயிரை பலரும் விதைக்கும் போது இயல்பாகவே சப்ளை – டிமாண்ட் செயினில் அதித ஏற்தாழ்வுகள் நட்டமாக உருவெடுக்கின்றன.

இந்த நிலையில் முற்றிலும் இயற்க்கை விவசாயம் என்பதை போன்ற ஏமாற்று வேலை வேறு இருக்க முடியாது. காரணம், குறைவான மனிதவளத்தில் இருந்து உற்பத்தி அளவு வரை பல இடங்கள் கேள்விக்குறியது. குறிப்பாக இயற்கை உரங்கள் இடுகையில் ஒரு சில விதைப்புகளுக்கு பிறகு நிலத்தின் உற்பத்தி குறைவதாக சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். 2050ல் உலக மக்கள் தொகை 20 பில்லியனை தொடும் என்கிறது ஐக்கியநாடுகளின் சபை அறிக்கை ஒன்று. ஆனால் இப்போதைய விவசாய நிலத்தில் இருந்து அதிகபட்சம் 4% மட்டுமே புதிய நிலங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதே அறிக்கை சுட்டி காட்டுகிறது. நிச்சயமாய் வரும் காலங்களில் மக்கள் தொகை இன்னும் தான் பெருகும் என்கிற நிலையில், இயற்க்கை விவசாயம் எந்த அளவுக்கு தேவைகளை நிறைவு செய்யும் என்பது சந்தேகத்திற்க்குரியதே. மேலும் இப்போதைய விவசாய முறை அதீத தண்ணீரை வீணடிப்பதாகவும், புவி வெப்பமயமாதலுக்கு பெரும் பங்களிப்பு செய்வதாகவும் இருக்கிறது. மரபான பயிர்கள் பொதுவாக அதிக சக்தியை உட்கொண்டு குறைவான மகசூல் தருபவை என்பதையும் கவனிக்க வேண்டும். உலகம் ஒற்றை ஊர் என மாறிவரும் காலங்களில் உள்ளூர் பிரச்சனை உலகளாவிய பிரச்சனை என்று பிரித்து பார்க்கவேண்டியிருக்காது என நினைக்கிறேன். எனவே முன் போல என் குடும்பம், என் கிராமம் என்பதற்கான சாத்தியங்களும் குறைவு தான்.

இப்போதைக்கு மனிதர்களின் உணவு பழக்கத்தில் மாற்றம் வரும் என்பதாக தெரியவில்லை. தேவை இருக்கிறது. எப்படி லாபம் பார்ப்பது? பழங்குடி வாழ்க்கையில் இருந்து நிலவுடமை சமூகத்திற்கும், பின் அதிலிருந்து இயந்திரமயமாக்கலுக்கும் வந்தோம். இந்த இருபது ஆண்டுகளில் தொலைத்தொடர்பு சார்ந்து பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறோம். இன்று ஓவ்வொரு துறையுமே தகவல் தொடர்பு சார்ந்து தங்கள் உற்பத்தி முறைகளில் மாற்றம் கொண்டுவர, அது விவசாயத்திலும் நிகழ்வது தான் நியாயம். பெரும் குளிர்பதன் கிட்டங்கிகளை உருவாக்குவதை காட்டிலும் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யலாம் என்கிற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம். வானிலையை சார்ந்து இருப்பதில் இருந்து பெரிய பச்சை குடில்களில் விவசாயம் பார்ப்பது லாபகரமானது என்கிறனர் சில early adopters. இம்மாதிரியான குடில்களில் சூழ்நிலையை துல்லியமாக கணிக்கமுடியும் என்பதில் இருந்து செயற்க்கை நுண்ணறிவைக்கொண்டு ஆரம்பத்திலேயே செடிகளை தாக்கும் நோய்களை கண்டறிவது, மண் இல்லாமல் குறைவான இடத்தில் அதிக உற்பத்தி தரும் ஏரோபோனிக்ஸ் போன்றவை தான் விவசாயத்தின் வருங்காலமாக இருக்க முடியும். ஏற்கனவே ஸ்வீடன், ஜப்பான் போன்ற நாடுகள் இதன் சாத்தியத்தை உணர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவிலேயே, ஆந்திர மாநிலத்தில் மைக்ரோசாப்ட் 175 தேர்ந்தெடுத்த விவசாயிகளுக்கு விதைப்பு, நில மேலாண்மை, உரம் சார்ந்த தொழில்நுட்ப தகவல்களை வழங்குகிறது. இதன் மூலம் 30% உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. மேம்படுத்தபட்ட சூழ்நிலைகளில் செயற்கை அறிவின் துணையோடு மிகக்குறைந்த மனித வளத்தில் உற்பத்தியில் தன்னிறைவையும் எட்டமுடியும். இதற்காக பாஷ் போன்ற நிறுவனங்கள் நிலவளத்தை கண்கணிக்கும் கருவிகளையும், ரோ-பாட் போன்ற நிறுவனங்கள் அறுவடை கருவிகளையும் உற்பத்தி செய்யத்தொடங்கியுள்ளன. மேலும் துல்லிய விவசாயம் என்று ட்ரோன்கள் மூலம் பயிர்களை கண்காணித்தல், நோய்களை கண்டறிதல், அறுவடைக்கு தயாரன பயிர்கள் குறித்த தகவல்களை திரட்டுதல் என பல சாத்திய கூறுகளை விஞ்ஞானிகள் முன் வைக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம், திறந்த மனதோடு தொழில்நுட்பத்தை வரவேற்பதே ஆகும்.

இறுதியாக, எல்லோரும் விவசாயி ஆக வேண்டுமா? தேவையில்லை. இஞ்சினியர், மருத்துவர் போல இதுவும் ஒரு தொழில் என்ற புரிதல் மட்டுமே நமக்கு வேண்டும். புனிதப்படுத்துவதால் எதனையும் அடைய இயலாது. வேதியலில் பிரபலமான ஒரு கூற்று ஒன்றுண்டு. If you’re not the part of the solution, you’ll be precipitated. விவசாயத்திற்கும் இது பொருந்தும்.

மஞ்சள் மாதினங்கள்

இந்த குளிர் தினம் சில நினைவுகளை கொண்டு வருகிறது. இன்று மலர்கள்.

மார்கழியில் இருந்து மாசி, தை, பங்குனி வரை மலர்களின் காலம். குறிப்பாக மஞ்சள் மலர்கள். ஐப்பசி மழை இண்டு இடுக்கிலெல்லாம் பச்சையை தூவி விட்டு போக, அடுத்த இரண்டு மூன்று வாரத்தில் சின்ன நட்சத்திரங்கள் என வெள்ளையும், நீலமும், அதிகமாக மஞ்சளும், அதிசயமாக சிவப்பிலும் மலர்கள் எட்டி பார்க்கும். சின்ன வயதில் டிசம்பர் என்பது ஒரு பூ மலரும் மாதம் என்றே நினைத்திருந்தேன். வீட்டின் பின்புறம் ஊதாவும், மஞ்சளுமாய் பூத்துக்கிடக்கும். அம்மாவுக்கு மிகப்பிடித்த மலர்களுள் ஒன்று. பள்ளிக்கு செல்லும் முன் எடுக்கப்பட்ட என் அனைத்து புகைப்படங்களிலும் தவறாமல் ஒரு சரம் டிசம்பர் பூக்கள் என் தலையை அலங்கரித்திருக்கும்.

பின் மார்கழி வந்தால் அதிகாலையில் உசுப்பி விடப்பட்டு, பூசணி பூக்கள் தேடி அனுப்பப்படுவோம். தெருவின் கடைசியில் பால்காரர் வீட்டு போர்பட்டி வைக்கோல் அடுக்குகளுக்கு அருகில் பூசணிக்கொடிகள் பரவிக்கிடக்கும். ஒரு நாளைக்கு ஒரு பூ தான். கொண்டு வந்தால், வீட்டின் முன் கோலத்தில் சாணி பிள்ளையார் தலை மேல் நாள் முழுவதும் அலங்கரித்திருக்கும்.

தை, மெல்லிய வெய்யிலோடு ஆவரம் பூக்கள் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் மாதம். தை மாதம் காப்புகட்ட ஆவாரம் பூவையும், பூலப்பூவையும் தேடி அலைவது இன்னும் ஒரு சுவரசியமான நினைவு. அப்போது தான் திண்ணப்பா நகர் உருவாகி வந்து கொண்டிருந்தது. அதையும் தாந்தோணியையும் இணைக்கும் ஒத்தையடி பாதையை தவிர்த்தால் வெறும் செம்மண் காடு. பனையும், வேம்பும், சீத்தமரங்களும் விரவிக்கிடக்க இடையில் ஆவாரம் எட்டி பார்க்கும். சரியாக ஓரிரு நாட்களுக்கு முன்பே சென்றுவிட வேண்டும். விட்டுவிட்டால் ஆடு மேய்ப்பவர்கள் பறித்து கட்டி லைட் ஹவுஸ் திருப்பத்தில கத்தை ஐந்து ரூபாய் என்று விற்பதை வாங்க வேண்டும். நான் பாரதிதாசனுக்கு வந்த போது, சாலைகளையும், கட்டிடங்கள் இருந்த இடங்களை தவிர்த்து எங்கும் ஆவாரமாய் கிடந்தது. காப்புகட்ட ஒரு கொத்துக்கு ஒரு கீற்று ஆவரையில் இருந்து, கட்டில் மொத்தமாய் பாரதிதாசனின் மஞ்சள் மலர்கள் வீட்டில் சிரிக்க ஆரம்பித்தது.

தை கடைசியில் ஆரம்பித்து, மாசி மாதமெல்லாம் விடுதியில் நின்றிருந்த சரக்கொன்றை பூக்க ஆரம்பித்துவிடும். வேறெந்த மலரும் அத்தனை அழகாய் இருக்குமா எனத்தெரியவில்லை. கொன்றை மட்டுமே மகிழ்ச்சி பீறிடும் ஒளி துகள்களாய் வெடித்து ஆடிக்கொண்டிருக்கும். என் வாழ்க்கையில் ஏதாவது மலரை அதிகமுறை புகைப்படமெடுத்திருப்பேன் என்றால் அது சரக்கொன்றையாய் மட்டுமே இருக்கும். இன்னும் அதன் மீதாதான பைத்தியம் தீர்ந்த பாடில்லை.

பங்குனியில், இளவேனிலில் இன்னும் பல மரங்கள் பூக்க, வேம்பும், புங்கையும் இலை பழுத்து உதிர்க்கத் தொடங்கும். பின் அனைத்தும் பற்றியெரியும் முதுவேனில் நிலமொன்றில், பகலில் தன் அடர்நிலலில் பருத்த அரிசியென புங்கை பூக்கள் சிதறிக்கிடக்க, மெல்லிய குளிர் தெரியும் இரவுகளில் வேம்பூவின் வாசனை மெல்லிய தூரத்து நட்ச்சத்திரமென உடன் வரும்.

How to creat a web app using nativefier?

It’s always tireding me to switch between the tabs of the browser to accesses my frequntly used websites. I used solutions like Franz to use the online chat services. But it is not so great for general web pages.

With a bit of knowledge on electron and node.js we can creat a web app. But I recently found a much easier solution to solve this one.

There is command line tool called “nativefier” is available to create web apps in a much easier way. All you need is to have npm preinstalled in your system.

If it is not installed, install it (in an ubuntu system) using the following command:

sudo apt install npm

Then install nativefier package by

sudo npm install nativefier -g

And that’s it. Now you’re ready to create your first desktop app.

Just get the URL of an desired web app and convert it to app using the command

nativefier --name "nameoftheapp" "http://www.url.com"

After few seconds you can find a folder in your home directory with the appname and platform details. You can launch the app by double clicking the appimage. If you want to create the shortcuts in your GNOME activities launcher, create a .desktop file with the following details and copy it to ~/.local/share/applications.

[Desktop Entry]
Type=Application
Name=Minecraft
Comment=Minecraft
Icon=/home/bram/Applications/Minecraft/icon.png
Exec=/home/bram/Applications/Minecraft/minecraft
Terminal=false
Categories=Minecraft;game

If you find a failure in app launch, please check the permission tab to ensure that it allowed to run as an executable.

P.S. Nativefier is OS independent and you can use it for windows as well as for Mac OS. See the nativefier documentation for more details.

எலும்புகள் போதும் நமக்கு

சந்தோஷங்கள் சடங்குகளாய்
மாறும் நேரம்
புன்னகைகள் மழைக்கால
விட்டில்களாய் உதிர்கின்றன.

உதிர்பவைகளை மொத்தமாய்
எரித்துவிடு
புகையும் சாம்பலில் கிடக்கும்
எலும்பு துண்டுகள் போதும்
அவர்கள் உனக்கு
எத்தனை முக்கியமானவர்களென
பிறருக்கு காட்ட.