நேர்த்திகாசு

இந்த கதை மிக பிரபலமாக எங்கள் குடும்பத்து பெண்களிடையே புழங்கி வருகின்றது. அதுவும் சற்றே சபல புத்தியுடைய ஆண்களாக இருந்துவிட்டால், அவர்கள் காதில் விழும்படியாக மூத்த பெண்களாலும், வயதானவர்களாலும் குழந்தைகளான எங்களுக்கு சொல்வது போல சொல்லப்படும். எங்கள் குடும்பம் பாரம்பரியமான வணிக சமூகத்தைச் சேர்ந்தது. 1900களில் பர்மாவிற்கு சென்று லேவாதேவி தொழில் செய்து பெரும் பணம் ஈட்டிய குடும்பங்களில் எங்களுடையதும் ஒன்று. எங்கள் எள்ளுதாத்தா ரங்கூனில் ஒரு முக்கிய புள்ளியாக Read more…

என்னோற்றாள்…

சித்ராவுக்கு எங்கோ கோவில் மணி ஒலிப்பது போல கேட்டது. அம்மன் கோவில் கொடையிலா இருக்கிறாள்? வியாபாரிகளின் சத்தமும், குழந்தைகளின் கூச்சலுமாக திடலே புழுதி பறந்து கொண்டிருக்குமே, ஏன் இத்தனை அமைதி? மஞ்சள் சேலை அணிந்த பெண்கள் தீர்த்தக்குடம் தூக்கிக்கொண்டிருந்தனர். அவளுக்கு மஞ்சள், சிவப்பு போன்றவையே பிடிப்பதில்லை. ஆனால் எப்போதும் கொடைக்கு கிடைப்பதென்னவோ மஞ்சள் சிகப்பு பாவடை சட்டை, வளர்ந்ததும் அதே வண்ண சுடிதாரோ, பாவடை தாவணியோ என்றானது. அவளுக்கு பிடித்த Read more…