குறியீடுகளின் குறியீடு என்ன?

சில படங்கள் எப்போதும் மனதில் நின்றிருக்கும். சிறந்த படம் என்பதால் அல்ல. இன்னும் கொஞ்சம் சிறப்பாய் இருந்திருக்கலாமே என்பதால். முன்பு செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் போல. இப்போது கர்ணனை போல.

படத்தை மூன்றாக பிரிக்கலாம். ஒன்று ஒரு ஊரின், மக்களின் வாழ்க்கை பதிவு. இரண்டு, தொன்மங்கள் குறியீடதாலாக. மூன்றாவதாக தீமையை அழிக்கும் எளிய கதாநாயகன் எனும் வழக்கமான தமிழ் சினிமாவாக. ஆனால் மூன்றும் ஒரே படமாக வருவதால், திரைக்கதை ஜவ்வாய் இழுக்கின்றது.

பொதுவாக பள்ளர், பறையர் சமூகத்தினர், 7ம் நூற்றாண்டுக்கு முன் பெளத்த மதத்தினராக சமூக படிநிலையில் உயர்ந்த இடத்தில் இருந்தார்கள் என்றும் இந்து மத மறுமலர்ச்சி காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக சோழர்களால் படியிறக்கப்பட்டார்கள் என்கிறார் அயோத்திதாசர். ஆக நவீன தலித் இலக்கியங்களில் குறியீட்டு ரீதியான இந்து மதம் மீதான விமர்சனம் புரிந்து கொள்ள தக்கது. இதில் இன்னொரு முக்கிய அம்சம், இந்து மத புராணங்களை மாற்று பார்வையில் மீட்டுருவாக்கம் செய்வது. புதிய இராமயணத்தில் இராவணன் தான் கதாநாயகன். இராமன் வில்லன்.

கர்ணனிலும் இதன் தொடர்ச்சியை காணலாம். இங்கே கதாநாயகன் கர்ணன். வில்லன் கண்ணன். மீனை குறிப்பார்த்து அடித்து வெல்வது அர்ஜூனன் அல்ல கர்ணன். மேலும் தலையில்லாத புத்தர் சிலை பழங்குடி பண்பாட்டு அம்சங்களான இறந்த பெண் குழந்தை கன்னி தெய்வமாக படம் நெடுக வருவது, கதாநாயகனின் ஆன்மாவை குறிக்கும் விதமான கழுதை என்று குறியீடுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

படம் கொடியங்குளம் சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது. அந்த கிராமத்தினரில் பலர் வெளிநாடு சென்று சம்பாதித்து நல்ல நிலையில் இருந்தார்கள். காவல்துறை தாக்குதல் குறிப்பாக அந்த சொத்துக்களை நோக்கி தான் என பல அறிக்கைகளில் பதிவாகி இருக்கின்றது. நகைகளையும், பணத்தையும் காவலர்கள் எடுத்து சென்றார்கள் என்பது முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று. படத்தில் யானை/குதிரை வைத்திருக்கும் சமூகம் என வருவது அந்த செல்வத்தை குறித்தே என நினைக்கின்றேன். பஷீரின் ‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ நினைவுகளில் வந்து செல்கின்றது. குறியீடுகளின் அடிப்படை அம்சம் அவை நாம் அறியாமல் நம் அடி மனதில் சென்று பதியும் என்பதே. ஆனால் அதிகப்படியான குறியீடுகள் எல்லாம் சேர்ந்து திகட்ட வைக்கின்றது.

படத்தின் முதன்மையான பேசு பெருள், சாதியை காரணமாக காட்டி ஒரு சாரருக்கு பேருந்து வசதி மறுக்கப்படுகின்றது என்பது. ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள், கவனமாக இதை பார்த்துக்கொள்கிறார்கள். கெஞ்சல்களுக்கும் கோரிக்கை மனுக்களுக்கும் பிறகு நிறுத்தலேனா, நிறுத்துவோம் என மக்கள் இறங்கும் போது என்ன ஆகின்றது என்பது தான் படம். ஆனால், முதல் பாதியில் அங்கும் இங்கும் என அலைந்து திரிகின்றது. குறிப்பாக கதாநாயகி, அவர் வரும் காதல் பகுதிகள் போன்றவை தனியாக துருத்தி கொண்டிருக்கின்றன. அதே போல வழக்கமான சினிமாவாக தனியொருவனை நம்பி ஊர் இருப்பதும், அவன் வந்து வில்லனை கொன்று பழி தீர்பதுமாய் இருப்பதும் சற்றே ஏமாற்றம்.

கொடியங்குளம் சம்பவத்தில் பல அடுக்குகள் உண்டு. அங்கிருந்த பள்ளியில் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமையில் இருந்து, தேவர் சிலை அவமதிக்கப்பட்டது வரை. அந்த சம்பவத்தின் பின்ணனியில் உயர்சாதி தலைவர்கள், உயர் மட்ட அரசு அதிகாரிகள் என்று பலர் இருந்ததும் பின்னாட்களில் தெரிய வந்தது. ஆனால் படத்தில் ஒரு அதிகாரியின் ஆணவமாக மட்டும் சுருங்கி போனது, படத்தின் தாக்கத்தை குறைத்தாக படுகின்றது. பேருந்து வர விடாமல் தடுக்கும் உயர்சாதியினருக்கும் காவல் துறையினருக்கும் எந்த சம்மந்தமுமே இல்லை என்பது போல அமைந்திருப்பதும் திரைக்கதையின் குளறுபடியா, இல்லை அப்படித்தான் எழுதப்பட்டதா என்றும் தெரியவில்லை.

இந்திய அளவில் தலித்களின் வாழ்க்கையை பேசிய முக்கியமான படங்களில் ஒன்று மலையாளத்தில் வந்த கம்மாட்டிபாடம். அதன் ஆழத்தோடும், திரைக்கதையோடும் ஒப்பிட்டால் கர்ணன் எவ்வளவு மேலோட்டமானது என்று தெரியும். இதை தமிழ் சினிமா சூழலில் வைத்து புரிந்து கொள்வது எளிது தான். தனுஷ் படத்திற்கு எந்த அளவிற்கு உழைப்பை தந்திருக்கின்றாரோ, அதே அளவு பலவீனத்தை சேர்த்திருக்கின்றார். ஹீரோயிச காட்சிகள், காதல் காட்சிகள் போன்றவை அவரின் ரசிகர்களை மனதில் வைத்து சேர்த்ததாக கொள்ளலாம்.

அதே போல திரைக்கதையும், எடிட்டிங்கும் இன்னும் சற்று சிறப்பாக இருந்திருக்கலமோ என்று தோன்றுகின்றது. பல இடங்களில் விரிவாக சொல்லப்படும் சம்பவங்கள் அப்படியே விடப்பட்டு அலைந்து கொண்டிருக்கின்றது. தனுஷின் தந்தை மேல் வரும் இறந்த தங்கை, தன் சிறுவாட்டை காண்பித்துக்கொடுக்கிறாள். ஆனால் அதன் பின் தூரத்தில் இருந்து பார்ப்பதோடு சரி. மீண்டும் தந்தை மேல் வந்து அண்ணனுக்கு ஆணையிடுவது போல் இருந்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும். இன்னொன்று வாள். தனுஷின் அம்மா அதை போய் மறுபடி குளத்தில் தூக்கி போட்டுவிட்டு வர அடுத்த காட்சியிலேயே தனுஷ் போய் அதை எடுத்து வருகிறார். இயக்குனர் என்ன சொல்ல வருகின்றார் என்பது அவருக்கே வெளிச்சம். அதே போல பெருமாளின் கருடன் ஏழைகளின் கோழிக்குஞ்சை தூக்கி செல்கிறார். உன்னை கேக்க ஒருத்தன் வருவான் என்கிறார் ஏழை கிழவி. தனுஷ் வருகிறார் தான் ஆனால் குறியீட்டு ரீதியாக அந்த முடிவு சொல்லப்படவில்லை.

இத்தனை குறைகளை தாண்டியும் தமிழில் இது ஒரு முக்கியமான திரைப்படம். 90களில் திருப்பி அடிப்போம் என தலித் மக்கள் தங்கள் குரலை உயர்த்திய ஒரு வரலாற்றின் ஒரு துண்டு இந்த படம். இங்கே கோபம் கொண்டு பரியேறும் கதாநாயகனை தான் பதினைந்து வருடம் கழித்து இன்னொருவன் பெயராக கொண்டு சட்டம் படிக்க செல்கிறான். அந்த நாட்களைய திருமாவளவின் பேச்சை கர்ணனின் குரலாக கொண்டால், இன்றைய திருமாவின் அரசியலை பரியேறும் பெருமாளின் குரலாக காணலாம். ஆனால் இன்னும் தராசு சமநிலைக்கு வரவில்லை என்பது தான் அடிக்கோடிட்டப்பட வேண்டிய விஷயம்.

முதலில் சொன்னது போல, மிகச்சிறப்பாய் வந்திருக்கவேண்டியது, ஆனால் ஒரு புறம் இயக்குனர் கவித்துவாய் குறியீடாய் சொல்ல வந்த விசயங்களும், இன்னொரு புறம் வழக்கமான தமிழ் சினிமாவுக்கான காட்சிகளும், இன்னொரு நன்றாக வந்திருக்க வேண்டிய படமாக கர்ணனையாக்குகின்றன.

தொன்னூற்றி ஐந்தா, தொன்னூற்றி ஏழா?

கர்ணன் படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், 95ல் நடந்த கொடியங்குளம் வன்முறையை 97ஆக காட்டி திமுக மீது அவதூறு பரப்புகிறார் மாரி செல்வராஜ் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து அது பற்றி படித்த போது கிடைத்த தகவல்களை இங்கு தொகுக்கிறேன்.

Image Courtesy: www.newsclick.in

90களில் தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் என்பது அன்றாடம். இதை 80களில் வலுப்பெற தொடங்கிய தலித் அரசியலோடு இணைத்து பார்க்கலாம். அந்த சமயத்தில் தான் தலித்கள் இன்னும் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று தலித் இலக்கியம், தலித் மைய அரசியல் போன்றவை வேர் கொண்டன. அப்போது உருவாகி வந்த தலைவர்களில் திருமாவளவனும் ஒருவர். இது பரவி 90களில் தலித்கள் தங்கள் மீதான சாதிய அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்தபோது அவர்கள் மீதான ஆதிக்க சாதியினரின் வன்முறை உக்கிரமாக இருந்தது[1]. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மூன்று சம்பவங்கள் 95ல் நடந்த கொடியங்குளம் வன்முறை[2,3], 97ல் நடந்த மேலவளவு படுகொலைகள்[4], 99ல் நடந்த தாமிரபரணி படுகொலைகள்[5]. அதாவது கட்சிகளுக்கு அப்பாற்ப்பட்டு தலித்கள் மீதான அடக்குமுறையும் வன்முறையும் நிகழந்து கொண்டிருந்தன.

ஜெயா ராணி Wireல் “A study by the Madurai-based organisation Evidence says that between 1990 and 2015, there have been 16 clashes during the DMK period and 21 during the AIADMK period. Most of these are related to caste issues. Almost every caste clash has been brought to an end by police violence.”[6] என்கிறார். அதே போல அரசுகளும் இதை எந்த அளவுக்கு சிக்கலாக்க முடியுமோ அதை சிறப்பாக செய்தன. 91-96ல் அன்றைய அதிமுக அரசு சாதி தலைவர்கள் பெயரை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சூட்டியது. பின்னர் வந்த திமுக அரசும் இதை தொடர்ந்தது. குறிப்பாக வீரன் சுந்தரலிங்கனார் பெயர் தென் மாவட்ட தேவர் சாதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது[7]. இதன் தொடர்ச்சி தான் மேலவளவு படுகொலை. ஆக இதில் எந்த கட்சி ஆண்டாலும் அதிகார வர்க்கம் ஆதிக்கசாதியினர் பக்கமே நின்றிருக்கின்றது என்பது புரியும்.

மேலவளவு சம்பவத்தையே எடுத்துக்கொண்டால் கைது செய்யப்பட்ட 17 பேரில் மூவர் 2008 திமுக ஆட்சியிலும் (அண்ணா பிறந்தநாளுக்காக), மீதமிருப்போர் 2019 அதிமுக ஆட்சியிலும் (எம்ஜியார் பிறந்தநாளுக்காக) முன்னதாகவே விடுவிக்கப்பட்டனர். மேலும் இதனினும் கொடூரமான சம்பவம் மாஞ்சோலை டீ எஸ்டேட் தொழிலாளர் படுகொலைகள். திமுக ஆட்சியில் நடந்த அந்த வன்முறை சம்பவத்தை பற்றி பல இடங்களில் மாரி செல்வராஜ் குறிப்பிட்டு இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக கூட இந்த ஆண்டு கணக்கு வந்திருக்கலாம். பொதுவாக தலித் இயக்கங்கள் திராவிட இயக்கங்கள் மேம்போக்கா ஒரு சில விஷயங்களை செய்துவிட்டு ஆதிக்கச்சாதியினருக்கு ஆதரவாவே நடந்து கொள்ளுகின்றன என காலங்கலாமாக குற்றம் சாட்டி வருகின்றன (அது உண்மையும் கூட). அதனால் ஒட்டுமொத்தமாக இந்த பின்ணனிகளை எடுத்துக்கொண்டு பார்த்தால் 95ஒ, 97லோ, அதிமுகவோ திமுகவோ என்பது முக்கியமல்ல, ஆனால் தலித் அடக்குமுறை தொடர்ந்திருக்கிறது என்று புலப்படும். பின்னரும் உத்தபுரம் சாதிச்சுவர், பரமக்குடி கலவரம் என்று தொடர்ந்து இன்று அரக்கோணம் படுகொலை வரை வந்திருக்கின்றது. தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நாம் என்ன பிராயசித்தம் செய்தாலும் அது அவர்கள் அனுபவித்த வேதனையிம் ஒரு துளிக்கு ஈடாகாது என்றார் காந்தி. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிக்கும் போது அது யாருக்கு சாதகமாய் ஒலிக்கிறது என்பதைக்காட்டிலும், அதன் ஆழம் என்ன, வலி என்ன அறிந்து, ஒட்டுமொத்த சமுதாயமும் வெட்கி தலைகுனிவதே பொருத்தமாயிருக்கும்.

இணைப்புகள்:

[1]. https://www.hrw.org/reports/1999/india/India994-07.htm
[2]. https://en.wikipedia.org/wiki/1995_Kodiyankulam_violence
[3]. https://thenewscrunch.com/is-dhanushs-karnan-movie-depicting-history-in-a-wrong-way/35001/
[4]. https://en.wikipedia.org/wiki/1997_Melavalavu_massacre
[5]. https://en.wikipedia.org/wiki/Manjolai_labourers_massacre
[6]. https://thewire.in/caste/sterlite-protest-dalit-thoothukudi
[7]. https://thefederal.com/states/south/tamil-nadu/caste-in-tamil-cinema-karnan-raises-the-bar/

ஏன் போரட்டம்? என்ன சொல்லுகின்றது விவசாய சட்டங்கள்?

நான் விவசாயி அல்ல. விவசாயத்தின் அடிப்படைகள் குறித்தும் அவ்வளவு புரிதல்கள் கிடையாது. பால் பாக்கெட்டில் வரும், அரிசி மூட்டையில் கிடைக்கும் என்பதே என் அறிதல்கள். ஆகவே இந்த விவசாயிகள் போராட்டம்பற்றிப் பெரிதாக ஆர்வம் எழவில்லை. நேற்று ரிகானாவின் ட்வீட்டும் அதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியினர் வரிசையாக வந்து அதற்குப் பதில் ட்வீட் போட்டதும் தான், அப்படி என்ன தான் இந்த விவசாய மசோதா சொல்லுகின்றது, ஏன் விவசாயிகள் எதிர்கின்றனர், தமிழகத்தின் நிலை என்ன என்று தேடிப்பிடித்து படித்துப்பார்த்தேன். புரிந்து கொண்ட வகையில் அதை அப்படியே கேள்வி பதிலாகத் தொகுத்திருக்கின்றேன்.

முதலில் இந்த மசோதா என்ன சொல்லுகின்றது?

மூன்று விஷயங்களை இந்த மசோதா சொல்லுகின்றது. முதலாவது மண்டி முறையிலிருந்து விடுபட்டு, விவசாயிகள் நேரடியாக யாருடன் வேண்டுமானலும் வணிகம் செய்து கொள்ளலாம் என்பது. இரண்டாவது ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்யலாம் என்பது. அதாவது ஆறு மாதத்துக்கு இந்த விலையில் நான் தக்காளி விலைவித்து தருகின்றேன் என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விவசாயம் செய்வது. மூன்றாவது, அத்யாவசிய உணவுப் பொருட்கள் என்பதன் கீழ் வரும் வெங்காயம், உருளை, பருப்பு போன்றவற்றை அந்தப் பட்டியலிலிருந்து நீக்கி விடுவது தொடர்பானது.

இதனால் என்ன லாபம் (என்று அரசு சொல்லுகின்றது)?

  1. மண்டி முறையை நீக்குவதால் தரகர்களிடமும் மண்டி வரியாக மாநில அரசுக்குச் செலுத்தும் தொகையும் இல்லாமலாகும். விவசாயிகள் யாரிடம் வேண்டுமானாலும் விவசாய பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம்.
  2. ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்யும்பொழுது குறு/சிறு விவசாயிகளைச் சந்தை விலை ஏற்றத் தாழ்வு பாதிக்காது.
  3. அத்யாவசிய உணவு பட்டியலிலிருந்து மேல் கண்ட பொருட்களை நீக்குவதால், இந்தத் துறையில் தனியார்/வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும்.

ஏன் இதை விவசாயிகள் எதிர்கிறார்கள்?

  1. அரிசி, கோதுமை போன்றவற்றுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ஆதார விலை இனி இல்லாமலாகும். எனவே தனியார் அடிமாட்டு விலைக்கு விவசாய பொருட்களைக் கொள்முதல் செய்வார்கள்.
  2. மேலும் மண்டி அமைப்பிலிருந்து வெளியே வந்தபிறகு ஆள், பண பலம் பொருந்திய பெரிய நிறுவனங்களுடன் சிறு/குறு விவசாயிகள் பேரம் பேசித் தங்கள் பொருட்களை விற்க இயலாது.

இது தவிர்த்து வேறு பிரச்சினைகள் இருக்கின்றனவா?

அ. ஆம். விவசாயம் இதுவரை பெரும்பாலும் மாநில அரசாலேயே கட்டுப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. இந்த மசோதாக்கள் மாநில அரசின் உரிமைகளை மேலும் குறுக்கி அதிகாரத்தை மத்திய அரசை நோக்கி நகர்த்துகின்றது. இந்த மசோதாக்கள் அமல் படுத்தப்படும்போது மாநிலங்களின் வருவாயில் 1 – 8% வரை இழப்பு இருக்கும் என்று கணிப்படுக்கின்றது.

ஆ. இந்த மூன்று மசோதக்களும், அரசு அமைப்பைவிடத் தனியார் அமைப்புகள் சிறப்பாகச் செயல்படும் என்ற முன்முடிவின்படி அமைந்திருக்கின்றது. தனியாரை கட்டுப்படுத்தவோ, கடினமான நேரங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவோ எந்தச் சரத்துகளும் இந்த மசோதாக்களில் இல்லை. மேலும் தரகர்கள், விவசாயிகள் இடையேயான உறவானது வியாபரம் அடிப்படையிலானது மட்டுமல்ல. தரகர்களிடமிருந்து விவசாயிகள் முன்பணம்/கடன் பெற்றுக்கொள்கிறார்கள். சிறந்த தரம் மட்டுமின்றி விளைவித்த அனைத்து பொருட்களையும் தரகர் எடுத்துக்கொள்வார், ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் இது போன்ற செயல்பட வாய்ப்பு குறைவே.

இ. தற்போது மண்டிகள் மூலமான கொள்முதல் என்பது நாலில் ஒரு பங்குக்கும் குறைவானதே. மீதம் இருப்பவை தனியார் சந்தைகளிலேயே கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், தனியார், மண்டி விலையை அடிப்படையாக வைத்தே தங்களின் கொள்முதல் விலையைத் தீர்மானிக்கின்றனர். அடிப்படை விலையும், மண்டிகளும் ஒழிக்கப்பட்டால் தனியார் வைத்ததே விலை என்றாகி விடும்.

ஈ. கடைசியாக, உலகளாவிய பெருந்தொற்று காரணமான பொருளாதார மந்தநிலை பல்வேறு உற்பத்தி நிறுவனங்களிலும் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியாவின் கையிருப்பில் இருக்கும் 90 மில்லியன் டன் தானியங்கள் கவனத்தை ஈர்த்திருக்கக்கூடும். மேலும் இந்த மந்த நிலையிலும் இந்திய உணவு உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலி சிறப்பாக லாபத்துடன் செயல்பட்டிருக்கின்றது. எனவே இதில் முதலீடு செய்வது அவர்களுக்கு லாபகரமானது. ஆனால், நடைமுறையில் இருக்கும் விநியோக சங்கிலியை உடைக்காமல் அதில் முதலீடு செய்ய முடியாது. ஆக அவர்களுக்குச் சாதகமாக இந்தத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாமெனப் பொருளாதர நிபுணர்கள் கருதுகிறார்கள்.

டெல்லியில் போராடுபவர்கள் யார்?

பஞ்சாப் மற்றும் ஹரியானவை சேர்ந்த விவசாயிகள். கடந்த ஐந்து வருடங்களில், பஞ்சாபில் விளைந்த அரிசி மற்றும் கோதுமையில் 85 சதவீதமும், ஹரியானவின் விளைச்சலில் 75 சதவீதமும் இந்திய அரசால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு இருக்கின்றது. இவை ஆதார விலையின் அடிப்படையில் வாங்கப்பட்டவை. ஆதார விலையை நீக்கும்போது சந்தை விலை கடுமையாகக் குறையும் என இப்பகுதி விவசாயிகள் அஞ்சுகின்றனர். மேலும் மண்டிக்களுக்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இந்த மாநிலங்கள் பெருமளவு முதலீடு செய்துள்ளன. குறிப்பாகக் கொள்முதலுக்காகக் கிராம சாலைகள் அமைத்தது, வலுவான தரகர் அமைப்புகளை உண்டாக்கியது போன்றவற்றைச் சொல்லலாம். பஞ்சாப்பிற்கு மட்டும் மண்டி வரியால் ஆண்டிற்கு 3500 கோடிவரை வருமானம் வருகின்றது. இவை இல்லாமலாகும்போது மக்கள் நலத்திட்டங்களில் செலவிடுவது குறையலாம். இது போன்ற அச்சங்கள் இந்த மாநில விவசாயிகளை டெல்லி வரை போராட்டத்திற்கு வரசெய்திருக்கின்றது.

தமிழகத்தின் நிலை என்ன?

தமிழகத்தில் மூன்று விதங்களில் விவசாய பொருட்கள் கொள்முதல் நடக்கின்றது. முதலாவது முறைப்படுத்தப்பட்ட கொள்முதல், இரண்டாவது தனியாரின் நேரடி கொள்முதல் மூன்றாவது ஓப்பந்த அடிப்படையிலான கொள்முதல். குறிப்பாகக் கரும்பு, பிராய்லர் கோழி முதலியவை ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் வெற்றிகரமா செயல்பட்டு வருகின்றன. அதே போல முறைப்படுத்தப்பட்ட கொள்முதலுக்கான வரியும் தமிழகத்தில் ஒரு சதவீதம் தான் என்பதால் பெரும் எதிர்ப்பு இல்லை. அதே சமயம், ஆதார விலை உள்ளிட்டம் சில விஷயங்களில் விவசாய சங்கள் மாற்றங்கள் வேண்டும் என்று கோரியுள்ளன.

இந்து மதம்: மதமாற்றமா, மன மாற்றமா?

“கண்ணில் பட்ட புத்தர் சிலைகளை எல்லாம் உடைத்தது,பௌத்தவிகார்களை உடைத்தும் மாற்றியும் சைவ கோயிலாகவும்,வைணவ கோயிலாகவும் மாற்றிக்கொண்டது.ஆனால் மக்களிடத்தில் ஐக்கியப்பட்டிருந்த போதி மரமாம் அரசமர வழிபாட்டையும்,அரசமரத்தடியில் இருந்த புத்தர் சிலை வழிபாட்டையும் அழிக்க முடியாத நிலை இருந்தது. இதனை எதிர்கொள்ள விநாயகன் என்று அழைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு பதிலாக அதே விநாயகர் என்ற பெயரிலே பிள்ளையார் என்ற பெயரிலும் யானை முக சிலையை வைத்து திசை மாற்றினர்.”

இப்படியொரு பதிவை பார்க்க நேர்ந்தது. புத்த மற்றும் சமண மதத்தவர்கள் பெரும்பாலும் மலைகளிலும், குகைகளிலும் தங்கி இருந்தால் இவற்றை உடைக்க ரொம்ப சிரமமாய் இருந்திருக்குமே என்று தான் முதலில் தோன்றியது. ஏனெனில் பெரிய கட்டுமானங்களுக்கு பெரிய அளவில் நிதி வேண்டும். அதை செய்பவர்களின் படைப்பூக்கத்தை நழுவ விட்டாத அளவுக்கு அவர்களின் அன்றாடங்களை சமுகம் எடுத்து கவனித்திருக்க வேண்டும். பேரர்சுகளின் காலத்தில் தான் வரண்ட தமிழகத்தில் ஏரிகள் வெட்டப்பட்டு, விவசாயம் தழைத்தது. அதன் உபரி கலைக்கும், கோவிலுக்குமாய் செலவிட்டப்பட்டது. இதைப்பற்றி சற்று விரிவாய் பார்ப்போம். முதலில் புத்தர் தான் விநாயகர்னு சொல்றதுக்கு அதீத கற்பனை வேணும்னாலும், அந்த மாதிரி பல்வேறு விஷயங்கள இந்து மதம் புத்த மததுக்கிட்ட இருந்து கடன் வாங்கி இருக்கு. ஆனா, அத வரலாற்று ரீதியான உரையாடல்னு புரிஞ்சிக்கறது தான் சரியா இருக்கும்.

இது முக்கியம் ஏன்னா, பகுத்தறிவுவாதிகள் மேற்கத்தி அடிப்படையில பொதுவா மதத்தை அணுகறாங்க. ஆபிரகாமிய மதங்களான கிறித்தவம், மொகமதிய மதங்களுக்கு இது சரியா இருக்கும். ஆனா இந்தியாவ பொருத்த வரை, மதம்ங்கற ஒரு சொல்லுக்குள்ள, இங்க இருக்கற மெய்யியல், வழிபாட்டு முறைகள அடக்க முடியாது. ஏன்னா, இந்து மதம்ங்கறதே, சைவம், வைணவம், கணபதியம், செளரம் மாதிரியான ஆறு மதங்களோட தொகுப்பு தான். அதாவது சூரியனும், கணபதியுமே தனி மதத்த சார்ந்தவங்க. ஆனா எல்லா கோவில்லயும் இருப்பாங்க. அதுனால கணபதிய மதத்தங்கள இந்து மதம் அல்லது சைவம் கபளீகரம் பண்ணீடுச்சினு இல்ல. மாறா கணபதியத்த ஏத்துக்கிட்டு சைவம் பெருமதமா மாறுச்சினு சொல்லலாம். ஆனா இதே விஷயத்த மேற்கத்திய கண்ணோட்டத்தோட அதே மதங்கள வச்சி பாத்தோம்னா, இன்னும் எளிதா புரியும். இப்ப நபிகள் ஏசு’வ வழிப்பட்டருங்கறதோ, அல்லது ஒரு மசூதி வாசல்ல ஏசு சிலை இருக்குனோ நம்மளால கற்பனையாயவாவது சொல்ல முடியுமா? இந்து மதம் ஒரு வேளை அப்படி வெற்றி கொண்டு இருந்தாலும் தோற்றவங்களோட கடவுள் தாங்களும் ஏன் சேர்ந்து வணங்கறதுங்கற் முடிவுக்கு வந்திச்சி? இதே மொகமதியர்கள் இந்தியாவ பிடிச்சப்ப பல இந்துக்கள மொகமதிய மதத்துக்கு மாத்துனாங்க. ஆனா, குறைஞ்ச பட்சம் மாறுன மொகமதியர்களாவது தங்கள் கடவுளயும் அந்த மதத்துக்குள்ள நுழைக்க முடிந்ததானு பாத்தா, இந்து மதம் கட்டாய மதம் மாற்றம் மாதிரி பரவலைங்கறது தெரியும்.

இந்திய மெய்யியல் வரலாற்ற இப்படி பிரிச்சுக்குவோம். பொது ஆண்டுக்கு முன்னாடி, பழங்குடி வழிபாட்டு தெய்வங்கள். பின்னாடி ஒன்றில் இருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை பழங்குடி தெய்வங்கள் பெருங்கடவுள்களாக ஆதால். இந்த சமயத்துல தான் சூரியன்கற இயற்க்கை ஆற்றல், ஒரு மனித உருவமுள்ள கடவுளா உருவகிப்பட்டுச்சுனு சொல்லலாம். மூன்றில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரை வணிக மதங்களான, சமணம், புத்தம் போன்றவற்றின் எழுச்சி. பின்னாடி, விவசாயத்தோட எழுச்சிக்கு பின் பேரரசுகள் உருவான போது, பக்திங்கறது வளத்துகான அடிப்படையா வச்சி தெற்கில் இருந்து வடக்கு நோக்கி போயிற்று. இத தான் நாம பக்தி இயக்க காலகட்டம்னு சொல்லறோம். இந்த காலகட்டதில மற்ற மதத்தவர்கள அழிச்சு ஒற்றை மதமா இந்து மதம் பரிணாமிக்கல. மாறா, அவைகளோட உரையடல்கள்ல தன்னை மாற்றிக்கிட்டு அவங்கள உள்ள இழுத்துகிச்சுனு சொல்லலாம்.

குதிரைய,பசுவ சூரியனுக்கு பலியிடற பாடல்கள் பல வேதங்கள்ல உண்டு. ஆனா கொல்லாமை, ஊண் உண்ணாமை மாதிரியான சமண தத்துவங்கள ஏற்றுக்கொண்டதால தான் இன்னைக்கும் அவையெல்லாம் இந்து மதத்தில ஒரு முக்கியமான கூறா நிலைச்சிருக்கு. அதே மாதிரி இந்து மதத்தை சார்ந்தவங்க எல்லாருக்கும் மூன்று விதமான வழிபாடு இருக்கும். ஒன்னு பாம்பு, சூரியன் மாதிரியான இயற்க்கை மற்றும் முன்னோர் வழிபாடு. இரண்டாவது குல தெய்வ வழிபாடு, மூன்றாவது பெரு தெய்வ வழிபாடு. சிவன், திருமால் மாதிரியன் தெய்வங்கள வணங்கறது. எங்க குல தெய்வம் அங்காளபரமேஸ்வரி சுத்த சைவம். சக்கரை பொங்கலும், பஞ்சாமிர்தமும் படைச்சிட்டு வெளிய வந்தா வாசல்ல நிக்கற கருப்பு சுத்த அசைவம். கெடா வெட்டி வெண்பொங்கல் போடறதுண்டு. இதில எந்த குழப்பமும் இல்ல. மாறா பகுத்தறிவுனு மேற்கத்திய எண்ணங்கள இங்க நேரடியா எடுத்திட்டு வரும் போது வர்ற குழப்பம் தான் புத்த மதத்தில இருந்து இந்து மதம் திருடிச்சிங்கற மாதிரியான கருத்துக்கள்.

ஏன் பெரு மதங்கள் தேவை பட்டுச்சினு கேட்டா, மக்களை இணைக்கங்கறது தான் பதில். ஏன்னா, மக்கள் ஏற்கனவே குலங்கள், இனங்களா பிரிஞ்சிருந்தாங்க. பெருமதம் அப்படிங்கும் போது அவர்களோடது எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு அதுக்கும் மேல ஒரு பெரிய விஷயத்த வைக்கும் போது, உன் குல விஷயம் தனியா தீர்க்கபட வேண்டியது, அதை எல்லாத்துக்கும் பொதுவானதா வைக்காதேனு பிரிக்க முடிந்தது. இதனால யாருமே பாதிக்கப்படல அப்படினெல்லாம் சொல்லிட முடியாது. ஏன்னா நிலவுடமை சமூகத்துல உபரி ஒரு சாரர அடிமைப்படுத்துவதன் மூலமே பெறப்பட்டுச்சி. இது தான் உலகம் எங்கையுமே. அப்படித்தான் ஏறத்தாழ எல்லா பேரரசுகளுமே கட்டப்பட்டுச்சி. உலகம் முழுவதுமே நிலவுடைமை சமுகத்துல இருந்து தொழில் சமுகமா மாறி பின்னர் தொழில்நுட்ப சமுகத்துக்கு மக்கள் வந்தாங்க. ஆனா அடிமைப்பட்டு கிடந்த நம்ம நேரடியா நவீன சிந்தனைகளை நோக்கி போன போது அது இரண்டு விதமான் சமுகங்களை இந்தியால உண்டாக்கி அதுல ஒருத்தர் நவீனமானவர்கள்னும், மற்றவர்கள் அறியாமைல உழண்றுகிட்டு இருக்காங்க மாதிரியான பிம்பத்த தெரிஞ்சோ தெரியாமலையோ உண்டாக்கிட்டோம். அதனால மத நம்பிக்கைகள இன்றை அளவுகோள்கல் விமர்சிக்கறதும், அரைகுறையான விஷயங்கள இப்படித்தான் ஏமாற்றப்பட்டோம்னு முன் வைக்கிறதும் மேலும் மூர்க்கமா நம்பிக்கை உடைய மக்களை அது நோக்கி போய் தான் விழவைக்கும்.

இன்றைய இந்துத்துவ எழுச்சிக்கும் அதுவே காரணம். என்னளவில ஒருத்தரோட தனிப்பட்ட நம்பிக்கை இன்னொருத்தர பாதிக்காத வரை அவர விமர்சிக்க நமக்கு உரிமை இல்லை அப்படிங்கறது. கடைசியா, இப்படி புத்தர் விநாயகர் ஆனார்னு நிருபிச்சாலும் அதனால என்ன நன்மைனு எனக்கு புரியல. ஒருவேளை ஒரு பக்தருக்கு அது ஒரு சின்ன அதிர்ச்சிய தரலாம். ஆனா அவருக்கு வேண்டியதெல்லாம், தொழில்ல இவ்வளோ லாபங்கறது. அதனால, நீ இவ்வளோ தா நான் உனக்கு இது செய்யறேன்னு வேண்டிக்கறாரு. அது அவரோட முன்னோர்கள்ட்ட இருந்து அவருக்கு வந்திருக்கலாம். அது புத்தரா இருந்தாலும், ஏசுவா இருந்தாலும் அது அவருக்கு பழக்கப்பட்டு இருக்கு அதானல செய்வாரு. சோ, பொதுவாவே இந்த மாதிரியான நிறூபித்தல்கள்ல எனக்கு நம்பிக்கை இல்லை. அறிவியல் அல்லது தத்துவபூர்வமான அதுக்கு வேற களங்கள் இருக்குங்கறது தான் என் எண்ணம்.

பாரம்பரிய மருத்துவத்தில் என்ன தான் பிரச்சினை?

ஏன் அலோபதி மட்டும் தான் மருத்துவமுறையா? மாற்று மருத்துவமே கிடையாதா? இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் எப்படி மருத்துவம் செய்து கொண்டோம் என்ற குரல்களில் இருந்து, கபாசுரகுடிநீரை உலகெங்கும் பரப்பி கொரோனாவை ஒழித்து நம் முன்னோர் புகழ் பரப்ப வேண்டும் என்பது வரை குரல்கள் சமீபமாக ஒலித்து வருகின்றன. அவர்களுக்காக இந்த கட்டுரை.

முதலில் மாற்று மருத்துவம் என்கிற பதத்தையே நான் நிராகரிக்கிறேன். உங்கள் வண்டிக்கு அப்போலோ டயர் போட்டு இருக்கின்றீர்கள், சரியில்லை என எம்.ஆர்.எப்க்கு சென்றால் அது மாற்று. மரடயர் மாட்டி ஓட்டுவேன் என்பது வெறும் பிதற்றல். அதெப்படி ரப்பரில் ஓடும் வண்டி மர டயர் இட்டால் ஓடாதா என்றால் ஓடும். ஒன்று அது ரப்பர் டயர் அளவு ஆப்டிமைஸ் செய்யப்பட வேண்டும் அல்லது அப்படி ஓட்டுவதால் வரும் விளைவுகளை சந்திக்க வேண்டும். ஏறத்தாழ இதே நிலை தான் பாரம்பரிய மருத்துவத்திற்க்கும்.

இன்னோரு எடுத்துக்காட்டை பார்ப்போம். உங்களுக்கு நெஞ்சு வலிக்கிறது. ஒரு மாத்திரை போட எண்ணுகிறீர்கள். ஒருவர் வந்து, அந்த மாத்திரையை நூறாக உடைத்து அதில் ஒரு துண்டை எடுத்து நூறு லிட்டர் நீரில் கலக்குகிறார். பின் அதில் இருந்து ஒரு மில்லி எடுத்து மறுபடி ஒரு நூறு லிட்டர் நீரில் கலக்குகிறார். இப்படியே முன்னூறு முறை செய்த பிறகு கடைசி ஒரு மில்லியை உங்களிடம் தந்து இந்தா இது அந்த மாத்திரையை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது ஆனால் பக்க விளைவுகள் இல்லாதது என்கிறார். குறைந்தபட்ச அறிவோ அல்லது பன்னிரென்டாவது வேதியலோ படித்தவர்கள் சிரித்துவிடுவார்கள் இதற்கு. ஆனால் ஹோமியோபதி மருந்துகள் இப்படித்தான் தயார் ஆகின்றன. இதைக்கொண்டு தான் கொரோனாவை குணப்படுத்த வேண்டும் என்கிறார்கள். வெளிநாடுகளில் ஹோமியோ மருந்துக்களில் placebo என்று முத்திரை குத்தப்பட்டு வர, நம் நாட்டில் தான் அதற்கொரு மினிஸ்ட்ரியை உருவாக்கி அவர்கள் வாட்ஸப் பார்வர்டுகளை விட மோசமாக அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அதே போல நிச்சயமாய் இயற்கையாய் கிடைக்கும் பொருட்களுக்கு மருத்துவதன்மை உண்டு தான். ஆனால் அதை எந்த அளவுக்கு உபயோகிப்பது என்பது தான் கேள்வி. பாலில் மிளகுத்தூள், மஞ்சள் போட்டு குடித்தால் இருமல் குறையும். ஆனால் டிபி’க்கு இதை மட்டுமே மருந்தாக பரிந்துரைக்கலாமா? மேலும் சித்த/ஆயுர்வேத மருத்துவம் குடும்ப தொழிலாக அவர்களுக்குள் மட்டும் புழங்கி கொள்கிற ரகசிய மொழியாகவே இருந்து வந்துள்ளது. காலவோட்டத்தில் இவை சிதைந்த பின் இது தான் சித்த மருத்துவம் என்று ஏமாற்றும் கும்பலே இப்போது அதிகம்.

இன்னொன்று சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் பல சித்தர் பாடல்களில் இருந்து வருகிறது. அவை பெரும்பாலும் தத்துவ புலம்பல்கள். இருபொருள் கொள்ளத்தக்க வரிகளே அதில் அதிகம் (சித்தர் பாட்கள் என்று வழங்கும் 18, 19ம் நூற்றாண்டு பாடல்கள் பெரும்பாலும் இட்டுகட்டியதே. மொழியியல், ஏன் சித்த அறிஞ்சர்களே அவற்றை பொருட்படுத்துவதில்லை). அவற்றின் உண்மையான பொருள் அறிந்தாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாவரங்களை நாம் அறியோம். வெகுபரவலாக படிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு வரும் சங்க இலக்கியத்தில் வரும் தாவரங்களையே நாம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் பண்பாட்டு கலாச்சர மாற்றதிற்கு ஏற்ப தாவரங்களின் பெயர்களுக் மாறி வந்துள்ளன. கர்னாடக இசை தான் தமிழிசை. ஆனால் அதில் உள்ள ஒரு ராகத்தை சங்க பண்ணோடு நம்மால் இணைக்கமுடியுமா? நிலைமை இப்படி இருக்க குத்துமதிப்பாக புரிந்து கொள்ளப்பட்டு குத்துமதிப்பாக தான் செயல்பட்டு வருகிறது சித்த ஆயுர்வேத மருத்துவம்.

இதில் முக்கியமானதொன்று, சித்த மருத்துவத்தில் பதப்படுத்தி மருந்து வழங்கிய செயல்கள், என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, குறைவு தான். பெரும்பாலும் வைத்தியர் வீடுகளுக்கு அன்றன்று சென்று மருந்தரைத்து பெற்றுவருவது நடந்திருக்கும் அல்லது வழங்கப்பட்ட குறிப்புகளை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று வழங்கப்படும் சித்த/ஆயுர்வேத மருந்துகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன? பெரும்பாலான சித்த மருந்துகளில் உலோகங்களோ, செயற்கை வேதிப்பொருட்களோ கலக்கப்பட்டு ஸ்டபளைஸ் பண்ணப்படுகிறது. இதில் உலோக கலப்பு மிகப்பெரிய பாதிப்பை உண்டு பண்ணக்கூடியது. உத்திரவாதமாய் கிட்னி சட்னியாகிவிடும்.

ஏன் அலோபதியில் பின் விளைவுகள் இல்லையா? நிச்சயமாய் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி பலனளிக்க கூடியது. 30 – 40 சராசரி வாழ்நாளாக இருந்தது இன்று 68 ஆகியிருப்பது அலோபதியால் தான். கண்டிப்பாக இதில் நிறுவனங்களின் பேராசை இருக்கிறது, மக்களை கொள்ளையடிக்கிறார்கள் இன்னும் பல குறைகள் இருக்கிறது ஆனாலும் மாற்று மருத்துவத்தை விட சிறந்தது. நாம் மாற்றம் கொண்டுவர வேண்டியது இங்குதானே ஒழிய ஒட்டு மொத்தமாய் மரப்பக்கு திரும்புகிறேன் என்பதல்ல. அப்படியானால் சித்தா, ஆயுர்வேதம் இருக்கக்கூடாதா? இருக்கலாம். அவற்றின் விதிகள் யுனிவர்சலாக இருப்பின். இந்த நோய்க்கு இந்த மருந்து எடுத்தால், அது இப்படி செயல்பட்டு இவ்வாறு நோய் நீக்கும் என்று சொல்ல முடிந்தால் அவற்றை முயற்சிக்கலாம். அதைவிட்டு கபசுரநீர் அருந்தினால் எதிர்ப்பு சக்தி பெருகும் என்று ஜல்லி அடிப்பது சரிப்பட்டு வராது. ஏனெனில் வழைப்பழமும் எதிர்ப்புசக்தி தரும், எழுமிச்சையும் தரும், இஞ்சியும் தரும். இவற்றின் எதிர்ப்புசக்தி அளவென்ன, இவற்றை விட கபசுரநீர் எப்படி சிறந்தது. அது எப்படி செயல்படுகிறது என்பதை விளக்காத வரை இது அரைகுறை ஆர்வக்கோளாறாகவே பார்க்கப்படும்.

இறுதியாக அரசே இம்மாதிரி பரிந்துரைப்பதை உண்மையிலேயே திசை திருப்பும் வேலையாகத்தான் நான் பார்க்கிறேன். பொது மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது என எத்தனையோ விஷயங்கள் செய்வதற்கு இருக்க, கபசுர குடிநீர வழங்கிவிட்டோம் இனி ஒன்றும் பிரச்சனை இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதே மிகப்பெரிய ஏமாற்று வேலைதான். மக்களுக்கு எல்லாவற்றிலும் புது டெக்னாலஜி வேண்டும். ஆனால் ஏன் மருத்துவத்தில் மட்டும் இந்த பிற்போக்குத்தனம்? பசுமை புரட்சி இல்லையென்றால் லட்சகணக்கானோர் பசி பட்டினியில் இறந்திருப்பார்கள். வெண்புரட்சி இல்லையேல் பலநூறு சவளை குழந்தைகள் பத்து வயதிற்க்கு முன்பே இறந்திருக்கும். நவீன மருத்துவம் இல்லையேல் அம்மை, வைசூரி, காலரா என்று மனித இனமே அழிந்திருக்கும்.

இது ஒரு மாபெரும் மானுட சங்கிலி. பல்லாயிரம் பேரின் உழைப்பும் தியாகமும் நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. இதை விமர்சிப்பது எளிது. ஆனால் கைவிட்டு மாற்றை உண்டாக்குவது சாத்தியமே இல்லாத ஒன்று. எத்தனை வேண்டுமானாலும் தூற்றலாம், எதனை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் இறுதியில் உயிர் போய்விடுமோ என்கிறபோது அலோபதிக்குத்தான் ஓடி வரவேண்டும். அதிகரித்து வரும் பாரம்பரிய மருத்துவம் குறித்த கூச்சல்களை நான் வியாபார சதியாகவே பார்க்கிறேன். ஒரு சிலரின் வணிக நோக்குக்காக திட்டமிட்டு முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல வகையறா கருத்துகள் பரப்பப்பட்டு அவற்றை படித்த சிலருமே திரும்ப சொல்லும் நிலைமைக்கு வந்திருக்கிறோம். மேற்ச்சொன்னவற்றில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். ஆனால், எந்த ஒரு அலோபதி மருந்தை அல்லது பெரும்பாலனவற்றில் ஒன்றை எடுத்துக்கொண்ட்டாலும் அதன் வேதியியல் குறியீட்டில் இருந்து அது செயல்படும் முறை, பின்விளைவுகள் என இன்று உட்கார்ந்த இடத்திலேயே நீங்கள் தெரிந்து கொள்ளமுடியும். அந்த நிலைக்கு மாற்று மருத்துவ முறைகளும் வரும் வரை அவற்றை போலி என்றே சொல்லுவேன். ஒரு போதும் அவை விவாதிக்கும் இடத்திற்கு மாற்று மருந்துக்கள் வராது என்றும் அடித்து சொல்லுவேன். அப்படி ஒரு நிலை வருமாயின் மேற்கொண்டு விவாதிக்கலாம். அதுவரை மேற்சொல்ல எனக்கொன்றுமில்லை.

திராவிட போர்வாட்கள்!

நேற்று ஜெயமோகன் ராஜன்குறையை விமர்சித்து, நாடக காதல் என்ற பதத்தை உருவாக்கியது அவரும் அவர் சார்ந்த இயக்கமும் தான். அவை ஆய்வுக்கட்டுரைகளாக வெளியிடப்பட்டு, அனைவருக்கும் தெரிந்த உண்மையாகவும் வைக்கப்பட்டு, ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே இராமதாஸ் அந்த பதத்தை வந்தடைந்தார் என்று குறிப்பிட்டுருந்தார்.

இன்று அந்த ஆய்வுக்கட்டுரையினை முழுமையாக படிக்க நேர்ந்தது. அதன் உரலி இதோ (https://www.jstor.org/stable/4412773?seq=1). தலித் ஆண்கள், தங்கள் ஆண்மை திமிரின் காரணமாகவும், கட்டுபாடற்ற தன்மையினாலும் ஒரு வேலையில் நிரந்திரமாக இருக்கமுடிவதில்லை. மேலும் சாகசத்திற்க்காக உயர்சாதி பெண்களை துரத்தி காதலிக்கின்றனர் என்றெல்லாம் ஆய்வுகட்டுரை போகிறது. உயர்சாதியினர் இதனாலேயே தங்கள் பெண்பிள்ளைகளை இளம்வயதிலேயே மணமுடித்து தந்துவிடுகிறார்கள் என்றும் பதிவு செய்கிறது கட்டுரை. இம்மாதிரியான ஒரு விஷயத்தை ஜெயமோகனோ, அல்லது வலதுசாரி இயக்கதினரோ வெளியிட்டு இருந்திருந்தால் இன்னேரம் என்ன நடந்திருக்கும்? ஏன் திராவிட போர்வாட்களுக்கு மட்டுமிந்த விதிவிலக்கு?

இதில் இன்னும் ஒரு சுவரசியமான விஷயம், அந்த ஆய்வு கட்டுரை எழுதியவர்களில் ஒருவர் இன்று பொருளாதார மேதை என்று அறியப்படும் ஜெயரஞ்சன் அவர்கள். ராஜன் குறை களாஆய்வு நடத்தி சேகரித்த தகவல்களை எம்.எஸ்.எஸ். பாண்டியனின் மனைவியும், ஜெயரஞ்சனும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். எம்.எஸ்.எஸ் பாண்டியனை தெரியாதவர்களுக்கு – திராவிடப் பேரறிஞர் என்று கொள்ளவும்.

பொதுவாக திராவிட இயக்கங்களை பாப்புலிஸ்ட் பார்ட்டீஸ் எனலாம். அந்தந்த காலத்தில் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை எதிரொலிப்பது இந்த கட்சிகளின் தன்மை எனலாம். ஆனால் அவர்கள் கொள்கை என்று வைப்பது என்னவென்று பார்த்தோமெனில் இம்மாதிரியான ஆய்வுகளை தான். இதை ஜெயமோகன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில்,

“இதைப்போன்ற உள்நோக்கம் கொண்ட, தன்னலம்மிக்க, ஆய்வாளர்கள் பேரழிவுகளை உருவாக்கிவிடுவார்கள். எல்லா சூழலிலும் பிற்பாடு அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் அழிவுக்கருத்துக்கள் முதலில் இவர்களால்தான் உருவாக்கப்படும். ஓர் உதாரணம் சொல்கிறேன். இன்று கன்னடச்சூழலில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக பெருகி பேரழிவை உருவாக்கிய காழ்ப்பை ஓர் அரசியல் கருத்தாக முன்வைத்தவர் சிதானந்தமூர்த்தி என்ற பேராசிரியர். அவர் ஆய்வுச்சூழலில்தான் அந்தக் கருத்தை உருவாக்கினார். அது வாட்டாள் நாகராஜ் வழியாக தெருவுக்கு வந்து தலைகள் உருள காரணமாக ஆகியது. இந்தியா முழுக்க இத்தகைய தன்னலமே நோக்கமாகக் கொண்ட, பேராசிரியர்கள் ஆய்வுச்சூழலில் உருவாக்கி வெளியே விடும் கருத்துக்கள் பேரழிவை விளைவித்திருக்கின்றன. அத்தகைய ஒருவர் ராஜன் குறை.”

பொதுவாக திராவிட இயக்கத்தினரின் மேல் வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாடுகளில் ஒன்று அவர்கள் பெரும்பான்மையினரான நடுநிலை சாதியினரையே தங்கள் வாக்கு வங்கியாக கொண்டு அவர்களை வைத்தே அரசியல் செய்கிறார்கள் என்பது. அதனால் தான் பிராமணர்கள் மிக குறைவாகவோ அல்லது முற்றிலுமே அல்லாத கிராமங்களில் தான் சாதியம் உக்கிரமாக பாவிக்கப்படுகிறது என்பதை வசதியாக மறந்துவிட்டு தலித்துகளின் அத்தனை இடர்களுக்கும் காரணம் பிராமணர்களே என்று முன்வைக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் 90களில் இந்த திராவிட அறிஞர்களால் உருவாக்கப்பட்ட நாடக காதல் பதம் இன்று வெற்றிகரமாக நிறுவப்பட்ட ஒரு உண்மையாகவே தமிழ் சமூகத்தில் புழங்குகிறது. இந்நிலையில் திராவிட இயக்கம் மெய்யகவே சமூகநீதி பற்றியெல்லாம் கவலைப்படுகிறதா என்பதே என்னுடைய சந்தேகம்!

வந்து சூழும் இருள்

மத்திய அரசு மார்ச்சில் முழு ஊரடங்குக்கு உத்திரவிட்ட போது, அரசின் பல செயல்பாட்டில் உடன்பாடில்லாத போதும் இந்த ஒன்றிற்காக மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன். சில நூறு தொற்றுகள் இருக்கும் போதே ஊரடங்குக்கு போவது மிகவும் பாதுகாப்பானது என நான் கருதினேன். சில பல கை தட்டல்கள் விளக்கு பிடித்தல்கள் இருந்தாலும் ஒரு ஓரத்தில் அரசின்‌ மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் கூலி தொழிலாளிகளை கையாண்ட விதம் மத்திய மாநில ஒருங்கிணைப்பு போன்ற செயல்பாடுகள் சந்தேகத்தை அதிகரிக்கவே செய்தன. நான் சற்றும் எண்ணியிராத ஒன்று பொருளாதாரம்! கீழ்மத்தியதர ஏழை குடும்பங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டன என்பதை கண்கூடாக கண்டேன். சூரத்தில் கூலி வேலை செய்யும் மகன் பணம் அனுப்ப முடியாததால் தற்காலிகமாக வீடு வீடாக யாசகம் கேட்டு அலைந்த முதியவர் ஒருவரை கண்டபோது தான் ஊரடங்கின் தீவிரம் புரிந்தது. அதே சமயம் இத்தனை வேதனைகள் பலனை அளித்தனவா என்றால் தினமும் எக்ஸ்பொனண்ட்சியலாக எகிறும் தொற்று எண்ணிக்கைகளே விடையாக அமைந்தன. சற்றே யோசிக்கையில் அரசு குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக என்னத்தையோ செய்து வைத்திருப்பது தெரிகிறது! எக்னாமிஸ்டுகளையோ, எபிடமிஸ்டுகளையோ அரசு கலந்தாலோசித்ததாக தெரியவில்லை. நியூசிலாந்தில் ஆயிரமாவது தொற்றின் போதே சமூகபரவல் ஆரம்பித்துவிட்டதாக கூறி நடவடிக்கைகளை முடுக்கி விட்டது நியூசிலாந்து அரசு. ஆனால் லட்சத்தை கடந்த பின்னும் சமூக தொற்றா அப்படியென்றால் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது அரசு. குறைந்தபட்சம் நார்டிக் நாடுகளை போலாவது அபாய கட்டம் வரை பொறுத்து பின் ஊரடங்குக்கு வந்திருந்தால் பொருளாதாரத்தை கொஞ்சம் காப்பாற்றி இருக்கலாமோ என தோன்றுகிறது. விவாசாயம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களே இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வந்திருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதை சிதைக்கும் முயற்சியிலேயே மும்முரமாக இருந்தது. இப்போது அதோடு கொரனாவும் சேர்ந்து வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இன்னுமும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்களை நினைக்கும் தோறும் அவநம்பிக்கையும் வெறுப்புமே வந்து சூழ்கிறது. நமக்கு தேவை ஒரு தலைவன். ஆனால் அப்படி யாரும் இப்போதைக்கு இல்லை அல்லது இருக்க வேண்டிய இடத்தில் இல்லை என்பதே நிதர்சனம்!

மோடி அரசு குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்…

எனக்கு அரசியல்மாற்றங்கள் வழியாக நிகழும் சமூகவளர்ச்சிமேல் பெரிய நம்பிக்கை ஏதுமில்லை. ஒரு குறிப்பிட்ட பொருளியலமைப்புக்குள் ஆட்சி மாற்றம் என்பது மேலோட்டமானதுதான். கேரளத்தை காங்கிரஸ் ஆட்சி செய்வதும் பினராயி விஜயன் ஆட்சிசெய்வதும் குறைந்த அளவிலான வேறுபாட்டையே உருவாக்குகிறது. பொருளியலை, சமூகமாற்றத்தை உருவாக்கும் விசைகளே வேறு. ஆகவே எப்போதுமே அரசியல்களத்தில் சொல்லாடுவதில்லை. அரசியல் சார்ந்து மிகைநம்பிக்கை கொள்வதுமில்லை

ஆகவேதான் நரேந்திரமோடி ஆட்சியை நெருங்கிக்கொண்டிருந்த உச்சகட்டப் பிரச்சார காலத்திலும் சரி, அவர் ஆட்சியைப்பிடித்தபோதும் சரி, நான் ஒரு சொல்கூட பேசவில்லை. அவருடைய ஆட்சி அமைந்தபோது எளியமுறையில் வாழ்த்தோ நம்பிக்கையோ தெரிவித்துகூட எதுவும் எழுதவில்லை. உண்மையில் அவருடைய அரசு அமைந்த அத்தேர்தல்முடிவுகள் வெளிவந்தபோது ஊட்டி காவியஅரங்கு நடந்துகொண்டிருந்தது. தேர்தலின்பொருட்டு அதை ஒத்திவைக்கக்கூட நான் ஒப்பவில்லை. அந்த அளவுக்கு தேர்தலரசியல்மேல் நம்பிக்கை கொண்டவர்கள் வரவேண்டாம் என்பதே என் நிலைபாடாக இருந்தது – கணிசமானவர்கள் வரவில்லை. அதை நான் பொருட்படுத்தவுமில்லை.

அவ்வரசு அமைந்த அன்று ஊட்டியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்னேன், பாரதிய ஜனதா கட்சி இருபதாயிரம் கோடிரூபாய் பிரச்சாரத்திற்குச் செலவிட்டு பதவியைப்பிடித்துள்ளது என்கிறார்கள். ஆகவே இரண்டுலட்சம் கோடியையாவது அதை அளித்தவர்களுக்கு திரும்ப அளிப்பதே அதன் ஆட்சியின் முதல் கடமையாக இருக்கும். ஆகவே அதைப்பற்றி எனக்கு எந்தக் கற்பனாவாத மயக்கமும் இல்லை என்று.

பின்னர் பாரதிய ஜனதாக் கட்சியின் இரண்டு நடவடிக்கைகளை நான் ஆதரித்தேன். ஒன்று, டெல்லியில் அதிகாரங்களாக உறைந்துவிட்டிருந்த சில கலாச்சார மையங்களைப் பெயர்க்கும் அதன் முயற்சியை. ஆனால் மிக விரைவிலேயே அந்த மையங்கள் அனைத்திடமும் பாரதிய ஜனதா சமரசம் செய்துகொண்டது. எந்த ஆட்சி வந்தாலும் அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்களே இன்றும் உடனிருக்கிறார்கள். அவர்கள் சென்ற ஆட்சிக்காலத்தில் அதிதீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்கள், இன்று ஆதரவாளர்கள்.

பாரதிய ஜனதாவின் இந்த ஆட்சிக்காலத்தில் கலாச்சாரத் தளத்தில் அதன் செயல்பாடுகள் அருவருக்கத்தக்கவை. அவர்கள் இடதுசாரிகளை ஆதரிக்கவேண்டுமென்பதில்லை , அவர்களின் தரப்பிலேயே பொறுப்புடன் பேசும் உண்மையான அறிஞர்களை, அவர்களுக்காகவேகூட இத்தனை ஆண்டுகளாக பணியாற்றியவர்களை, பொறுப்புகளுக்குக் கொண்டுவந்திருக்கலாம். மாறாக பெரும்பாலான பதவிகள் கவனிப்பாரற்று காலியாகவே விடப்பட்டன. நிரப்பப் பட்டவற்றில் சென்ற காலத்துத் துதிபாடிகளோ இன்றைய ஆட்சியாளர்களின் அடிப்பொடிகளான வெற்றுமனிதர்களோதான் நியமிக்கப்பட்டார்கள். கலாச்சார அமைப்புகள் இருப்பதையே டெல்லியை ஆளும் மிகச்சிறிய அதிகாரக்குழு அறிந்திருக்கவில்லை. அவர்களின் உலகில் அப்படி ஒரு விஷயமே இல்லை. அவர்களின் அறிவுத்தரமும் பண்பாட்டுத்தரமும் இங்கே ஒரு அடகுக்கடை நடத்தும் மார்வாடியின் அளவுக்கு சற்றும் மிகுந்ததாக இருக்கவில்லை.

இரண்டாவதாக, பணமதிப்புநீக்கத்தை நான் ஆதரித்தேன். அதை ஆதரிப்பதற்கான காரணங்கள் மேல் இன்றும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியத் தொழில் – வணிகத்துறையை அறிந்தவர்கள் இங்குள்ளது வரிகட்டுவோருக்கும் கட்டாதவர்களுக்கும் இடையேயான போட்டி என்று அறிந்திருப்பார்கள். இந்தியாவின் தொழில்வணிகத்தை பெரும்பாலும் கையில் வைத்திருக்கும் குஜராத்தி – மார்வாடி குழுக்கள் முற்றிலும் வரிகட்டுவதில்லை. வரி ஏய்ப்பை ஆயுதமாகக்க் கொண்டு வரி கட்டுவோரை வீழ்த்தி சந்தையில் ஆதிக்கம் கொள்வதே அவர்களின் வழிமுறை. அவர்களின் ஆதரவால் பதவிக்கு வந்தவர் மோடி. பணமதிப்பு நீக்கம் நேரடியாகவே அவர்களுக்கு எதிரான நடவடிக்கை. அவர்களின் அடித்தளத்தை நொறுக்குவது. அதை அவர் எடுத்ததே அவர்மீதான நம்பிக்கையை உருவாக்கியது. இந்தியாவின் வரிவசூலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைக்கான முதற்படி அது என தோன்றியது. அத்துடன் இந்தியப்பொருளியலின் பெரும் நோய்க்கூறான கள்ளநோட்டுப் புழக்கத்தை பத்தாண்டுகளுக்காவது அது கட்டுப்படுத்தக்கூடும் என நம்பினேன்.

சாதாரணமாக எந்த ஆட்சியாளரும் அத்தகைய ஒரு நடவடிக்கையைச் செய்யத் துணியமாட்டார்கள்.ஏனென்றால் அது உடனடியாக கடுமையான மக்கள் எதிர்ப்பையே உருவாக்கும். நீண்டகால அளவில்தான் அதன் பொருளியல் லாபங்கள் அறியப்படலாகும், அதற்குப்பின்னரே தேர்தல்கள லாபங்களை எதிர்பார்க்க முடியும். அதற்கு ஓர் ஆட்சியாளர் துணிவதென்பது அவருடைய நல்ல நோக்கத்தையே காட்டுகிறது என்று எண்ணினேன். வரலாற்றில் இடம்பெறுதல், மீண்டும் பதவிக்கு வருதல் போன்ற பல காரணங்களுக்காக ஆட்சியாளர்கள் மெய்யான நடவடிக்கைகளை எடுப்பதுண்டு. இருக்கும் அமைப்பின் எல்லைக்குள் சில முன்னடிவைப்புகளை அவர்கள் உருவாக்கக் கூடும். நரசிம்மராவ் போல நல்விளைவுகளை உருவாக்கவும் வாய்ப்புண்டு. அன்று என் எதிர்பார்ப்பு அதுவே.

அந்நடவடிக்கை தொடங்கியதுமே அதன்மேல் உருவான எதிர்ப்பு ஏமாற்றத்தை அளித்தது. அதன் எதிரிகள் இன்று சொல்வதுபோல அது ஒரு மோசடி என்பதனாலோ அதனால் நன்மை நிகழாதென்பதனாலோ அவர்கள் அதை எதிர்க்கவில்லை. அந்த அளவுக்கு மேதைகளல்ல அவர்கள். அரசியல் எதிரி எதைச்செய்தாலும் எதிர்க்கும் எதிர்க்கட்சி மனநிலை மட்டுமே அவர்களிடமிருந்த்து. அதனால் உருவான மக்கள் எதிர்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர். உண்மையிலேயே மோடி அரசியல் ஆதாயம்பெற்றுவிடக்கூடும் என அஞ்சினர். அந்த அவசரம் எனக்கு கசப்பளித்தது. அதையே நான் கண்டித்தேன்.

பணமதிப்புநீக்கம் தோல்வியடைவதை கண்கூடாகவே பார்த்துக்கொண்டிருந்தேன். சில தனியார் வங்கிகள் அதை உடைத்து பெரும்லாபம் ஈட்டின. கணக்காளர்களும் வங்கியாளர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கைகோர்த்துக்கொண்டு அதை அழித்தார்கள். நான் அறிந்தது உண்மை என்றால் கெடு முடிந்து எட்டுமாதங்கள் கடந்தும்கூட பழையநோட்டுக்களை மாற்றிக்கொண்டிருந்தார்கள். முதலில் தயாரிப்பின்மை, அரசுநிர்வாகத்தின்மேல் ஆள்வோருக்கு கட்டுப்பாடு இல்லாமை ஆகியவையே அதற்குக்காரணம் என நம்பினேன். ஆனால் அத்தனை நோட்டுகளும் திரும்பி வந்துவிட்டன என்றால் அதன்பொருள் ஒன்றே, இதில் பாரதியஜனதா கட்சியும், இந்த அரசும் ரகசிய லாபமீட்டாமல் இவ்வாறு நிகழாது. அவர்கள் உடனிருக்காமல் இத்தனை முழுமையான மோசடி நிகழவே முடியாது. அவர்கள் அதற்குப்பொறுப்பேற்றே ஆகவேண்டும். அதன் விளைவான அனைத்து அழிவுகளுக்கும்.

கடுமையான அரசியல் நிலைபாடு கொண்டவர்கள், மதக்காழ்ப்புகளை அரசியலாக வெளிக்காட்டுபவர்கள் தவிர இந்தியாவின் எளிய குடிமக்கள் பெரும்பாலானவர்கள் அந்நடவடிக்கை வந்தபோது நான் கொண்டிருந்த நம்பிக்கையையே கொண்டிருந்தார்கள். அதை அம்மக்களுடன் எளிய முறையில் உரையாடிய எவரும் உணர்ந்திருக்கலாம். இன்று அவர்களில் பலரும் நான் உணரும் ஏமாற்றத்தையும் கசப்பையும் தாங்களும் அடைந்திருப்பார்கள். ஒரு குடிமகனாக தனிப்பட்ட முறையில் அவமதிக்கப்பட்டவனாக, சுரண்டப்பட்டவனாக உணர்கிறேன். நரேந்திரமோடியின் ’மனதோடு பேசும்’ நிகழ்ச்சியில் உள்ள அசட்டு நாடகத்தனம், செயற்கையான பாவனைகள், புனிதர்களுக்குரிய நல்லுபதேச மொழிகளை கூச்சமே இல்லாமல் சொல்லும் தோல்தடிமன் உச்சகட்ட வெறுப்பையே உருவாக்குகிறது.

ஆயினும் நடுநிலையில் நின்றபடித்தான் பார்க்கவேண்டும் என எனக்கே சொல்லிக்கொண்டேன். இந்த ஆட்சியின் செயல்பாடுகளை என் தனிச்சூழலிலும் நான் செய்யும் பயணங்களிலும் கூடுமானவரை உளப்பாகுபாடின்றியே நோக்குகிறேன். கருத்துக்கேட்கும்போது அரசியல்திரிபுகள் அற்றவர்கள், சொல்லப்போனால் ஆதரவுநிலையுடன் இவ்வரசை நோக்கியவர்களிடமிருந்தே கேட்டறிகிறேன். விளைவாக உருவான என் எண்ணம் சுதந்திரத்திற்குப்பின்னர் இந்தியாவில் உருவான அரசுகளில் முழுத்தோல்வியடைந்த இரண்டு அரசுகளில் ஒன்று இது என்பதே. இன்னொன்று 1971- 77 ல் இந்திராகாந்தி அமைத்த அரசு.

இரு அரசுகளையும் பலவகையிலும் ஒப்பிட முடியும், பொதுவான மூன்று அம்சங்களைச் சொல்லலாம்.

ஒன்று, ஒற்றைமனிதரை முன்னிறுத்தும் நபர்வழிபாட்டு அரசியல். அனைத்து இடங்களிலும் ஒரு மனிதரை அரசே முன்வைப்பது. அரசு ஊடகம் அனைத்து ஆற்றல்களையும் கொண்டு, கோடானுகோடி ரூபாய்ச் செலவில் அவரை விளம்பரப்படுத்துவது. அவரை ஒரு தீர்க்கதரிசி, அவதாரம், ரட்சகர் நிலைவரை கொண்டுசென்று வைப்பது. எழுபதுகளில் இந்தியாவே இந்திரா என்னும் கோஷத்திற்கும் இன்று நரேந்திர மோடிமேல் அரசு குவித்துப்பெருக்கும் துதிக்கும் வேறுபாடில்லை. ஒருவரை நம் அரசு வரிப்பணத்தால் மிகைவிளம்பரம் அளித்து பூதாகரமாக்கி நிறுத்தி அவர்களுக்கு எதிராக பிறர் அரசியல்செய்வேண்டும் என்னும் நிலையை உருவாக்குவது ஜனநாயகத்தை அழிப்பது.

இரண்டு, சமையற்கட்டுச்சபையின் நிர்வாகம். தனிமனிதனை மையமாக்கிய அரசு அமையும்போது இயல்பாக உருவாவது இது. அவருக்கு அணுக்கமான ஒரு சிறுகுழுவுடம் அனைத்து அதிகாரங்களும் சென்று சேர்கின்றன. வெவ்வேறு துறைநிபுணர்கள், அனுபவம் மிக்கநிர்வாகிகள், களத்தொடர்புடைய அரசியலாளர்கள் ஆகியோர் கூடி செயல்படுவதாகவே இந்தியா போன்ற ஒரு மாபெரும் நாட்டின் நிர்வாகம் இருக்கமுடியும். இங்கே ஒவ்வொன்றையும் பலதரப்புகளைக் கலந்தாலோசித்து சிறிய அளவில் செய்து பார்த்து , தொடர்ச்சியாக விமர்சனங்களை கவனித்து பிழைகளைக் களைந்தே நிறைவேற்றவேண்டும். ஏனென்றால் இதன் சமூகப்,பொருளியல் அமைப்பு எந்த மேதையாலும் புரிந்துகொள்ளமுடியாதபடிச் சிக்கலானது. சமையற்கட்டுச்சபையில் வெறும்துதிபாடிகளும் சதிகாரர்களுமே அமர முடியும். அங்கே என்ன நிகழ்கிறதென்றே எவருக்கும் தெரியாது – அமைச்சரவையில் இருப்பவர்களுக்கும் கூட. இந்த அரசு அத்தகைய சிறு குழு ஒன்றால் நடத்தப்படுகிறது. அவர்களைச்சுற்றி தன்னலமிகளான வணிகர்களின் ஒரு வட்டம். கட்சியோ அரசின் பிற அமைப்புகளோ எந்த அதிகாரமும் இல்லாத வெற்றுப்பார்வையாளர்களாக மாறிவிட்டிருக்கின்றனர். எழுபதுகளின் இந்திரா அரசும் இத்தகையதாகவே இருந்தது

மூன்றாவதாக இது ஓர் அதிகாரியாதிக்க அரசு என்பது. இத்தகைய தனிமனிதமைய, சமையற்கட்டு நிர்வாக அரசு அது நடைமுறையில் செயல்பட அதிகாரிகளின்திரளையே நம்பியிருக்கும். ஆகவே வேறுவழியில்லாமல் அதிகாரியாதிக்க அரசு [ bureaucratic government] ஒன்று உருவாகிறது. அதிகாரியாதிக்க அரசின் இயல்புகளில் முக்கியமானது அது எவ்வகையிலும் முன்னகர விரும்பாது என்பதுதான். வழக்கமானவற்றை மட்டுமே செய்தபடி தன் வட்டத்தில் சுற்றிவருவதே அதற்கு உகந்தது. ஆகவே அனைத்து மாற்றங்களையும் அது காகித அளவில் மட்டுமே செய்யும். கத்தைகத்தையாக அறிக்கைகளை மட்டுமே தயாரித்து மேலே அனுப்பும். அரசதிகாரிகள் அளிக்கும் அத்தனை அறிக்கைகளும் பெரும்பாலும் பொய்யே. தகவல்களை முடைந்து பொய்யான அறிக்கைகளை உருவாக்குவதில் பயிற்சியே அரசூழியர் முதலில் அடைவது. அந்த அறிக்கைகளையே ஆட்சியாளர்கள் மக்களை நோக்கித் துப்பிக்கொண்டிருப்பார்கள்.

இந்திய அதிகாரிவர்க்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்தே ஊழல் வழியாக உருவாகி ஊழலினூடாக நிலைநிறுத்தப்படுவது. ஊழலுக்கான நடைமுறைகள் அனைத்தும் இருநூறாண்டுக்காலச் சடங்குகளாக மாறிவிட்டிருக்கின்றன. அதிகாரிகளின் கட்டமைப்பு ஆளும் அரசின் ஏவற்கருவியாக ஆகவேண்டும் என்றால் அரசு அதன் ஊழலுக்கு தடையற்ற முழு வாய்ப்பு அளித்தாகவேண்டும். அரசின் அனைத்து திட்டங்களையும் அவர்கள் முழுமையாகவே உண்டு செரிப்பார்கள். வான் உடைந்து பெய்தாலும் ஒரு துளிகூட தரைக்கு வராது. இன்றைய அரசு மிதமிஞ்சிய வரிகளை உருவாக்கி அதை அதிகாரிகளை அதை வசூல்செய்யும் வேட்டைவிலங்குகளாக்கி அவர்கள் ஊழலில் திளைக்க வழிவகுத்துள்ளது. இன்றும் வரிகட்டாத பழம்பெருமை கொண்டவர்கள் அதே வீச்சில் தொடர்கிறார்கள்.

இம்மூன்று அம்சங்களால்தான் முற்றிலும் செயல்படாத, ஆனால் இடைவிடாது வெற்றுச்சொற்களை வீசிக்கொண்டே இருக்கும் அரசு உருவாகிறது. ஒரு கட்டத்தில் அரசே அதிகாரிகாள் அளிக்கும் அறிக்கைகளை நம்ப ஆரம்பிக்கிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் வேலையின்மையும் வறுமையும் உச்சத்திலிருந்த, இந்தியாவின் வளர்ச்சி மாபெரும் தேக்கத்தை அடைந்த காலகட்டம் இந்திராவின் ஆட்சிக்காலம். நம்மைச்சூழ்ந்திருந்த நாடுகளெல்லாம் நம்மைக் கடந்து நெடுந்தொலைவு சென்றது அப்போதுதான். ஆனால் வறுமையை விரட்டுவோம் [கரீபி கடாவோ] போன்ற கோஷங்களால் அதை நாம் இன்று நினைவுகூர்கிறோம். இன்றைய அரசும் மிகப்பெரிய பொருளியல்குளறுபடிகளை, தேக்கத்தை உருவாக்கிவிட்டு கவற்சியான சொற்களை உமிழ்ந்துகொண்டிருக்கிறது

நரேந்திர மோடிக்கும் இந்திராகாந்திக்கும் இடையேயான ஒற்றுமைகள் வியக்கவைப்பவை. இருவரும் ஆழ்ந்த பாதுகாப்பின்மை உணர்வு கொண்டவர்கள். ஆகவே செயற்கையாக ஓர் இரும்புத்தோற்றத்தை நடிக்கிறார்கள். சர்வாதிகாரம் மூலம் ஆற்றல்கொண்டவர்களாக ஆக முயல்கிறார்கள். அதற்காக நம்பிக்கைக்குரியவர்களின் சிறுகுழுவை உருவாக்கி அதை சார்ந்திருக்கிறார்கள். தனிமனிதப்பிம்பம், மிகையுணர்ச்சிப்பிரச்சாரம் வழியாக அரசியலை கையாளமுடியும் என நினைக்கிறார்கள். தேசப்பாதுகாப்பு குறித்த அச்சத்தை மக்களிடையே உருவாக்கி தங்களை ரட்சகர் எனக்காட்டி அதிகாரத்தைக் கையாள்கிறார்கள்‘என்னைக்கொல்லச் சதி’ என இந்திரா காந்தி கூச்சலிடாத நாளே இல்லை. இவர்கள் இந்தியாவை ஆள்வதற்கான அறிவாற்றலோ நிர்வாக அமைப்போ இல்லாத நிலையில் முற்றிலும் செயல்படாத ஒரு கருங்கல்லை அரசு என மக்கள்மேல் சுமத்துகிறார்கள்.

சென்ற ஐந்தாண்டுகளில் பொருளற்ற காகிதத் திட்டங்களை அறிவித்து அதிகாரிகள் அளிக்கும் அறிக்கைகளை அதன் விளைவுகளாக முன்வைக்கும் செயலை மட்டுமே மோடி அரசு செய்திருக்கிறது. அறிவிக்கப்பட்ட எந்தத் திட்டமும் எவ்வகையிலும் நடைமுறைக்கு வரவில்லை. இவர்கள் சாதனைகளாகச் சொல்லும் அனைத்துமே பழைய திட்டங்களைப் பெயர்மாற்றம் செய்து முன்வைப்பவை. இயல்பான வளர்ச்சித்தகவல்களை தாங்களே செய்ததாக சொல்லிக்கொள்பவை. எவ்வகையிலும் சரிபார்க்கமுடியாத வெற்றுப்புள்ளிவிவரங்கள். நரசிம்மராவ் ஆட்சியில் ராவின் நிதானமான திட்டமிடலால், நிபுணர்களின் ஒத்துழைப்பால் உருவான இந்தியப்பொருளியல் மலர்ச்சி பின்னர் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களால் பின்னிழுக்கப்பட்டது. அது முழுமையாகவே படுத்து மீண்டும் எழுபதுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது இன்றைய இந்தியா

காகிதத்திட்டங்களின் பொருளின்மையை பல நிலைகளில் நாம் காணலாம். பலமுறை முன்னரும் எழுதியிருக்கிறேன். முதல் உதாரணம், ஸ்வச் பாரத். இந்தியா குப்பையில் மூழ்கிக்கிடக்கிறது. நான் சென்ற நாடுகளில் குப்பைக்குள்ள்ளேயே கிடக்கும் ஒரே நாடு இந்தியாதான். நம்மைவிட பொருளியலில் பிற்பட்ட ஆப்ரிக்க நாடுகளோ கம்போடியாவோகூட நம்மைவிட மேலான சூழல்தூய்மைகொண்டவை. ஏனென்றால் இங்கே குப்பையை அள்ளுவதற்கான அமைப்பு என எதுவும் சென்ற ஐம்பதாண்டுகளில் உருவாக்கப்படவில்லை. வெள்ளையர் ஆட்சியில் உருவான அதே குப்பை அள்ளும் முறைதான். அதையும்கூட நிதிப்பற்றாக்குறை என்று சொல்லி தனியாருக்கு குத்தகைக்கு அளித்துச் செயலிழக்க வைத்துள்ளனர். குப்பையை ஒழிப்பதாகச் சொல்லி கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து உருவாக்கப்பட்ட திட்டம் ஸ்வச் பாரத். அதனூடாகச் செய்யப்பட்ட ஒரே ஏற்பாடு குப்பைகள் கிடந்தால் அதை அரசிடம் தெரிவிக்க ஒரு செயலி உருவாக்கப்பட்டது மட்டுமே.

சிலமுறை அதில் என்ன நிகழ்கிறது என சோதித்துப் பார்த்திருக்கிறேன். புகார்செய்ததுமே குறுஞ்செய்திகள் வரத் தொடங்கும். ‘உடனே செய்யப்படும்’ என்று. ‘செய்துமுடித்துவிட்டோம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்று. நாலைந்து நாளைக்கு செய்திகள் வரும். நாம் செய்த புகாரை தொடர்ந்துசென்று பார்க்காதவர் என்றால் மனநிறைவு அடைந்துவிடுவோம். அரசு செயல்படுகிறது என நினைப்போம். ஆனால் குப்பை பெரும்பாலும் அங்கேதான் கிடக்கும். அல்லது சற்று இடமாற்றம் செய்யப்படும். ஏனென்றால் இந்தியாவெங்கும் எந்நகரத்திலும் எந்தக்கிராமத்திலும் குப்பையை அள்ளுவதற்கான அமைப்புகள் இல்லை. குப்பை அள்ள வண்டிகள் இல்லை, ஊழியர்கள் இல்லை, அள்ளப்பட்ட குப்பையை எரிக்கவோ அழிக்கவோ எந்த வசதியும் இல்லை. செயலி இருந்து என்ன பயன்?

இதேதான் ரயிலிலும். சென்ற ஐந்தாண்டுகளில் ரயில்பயணம் தாளமுடியாத அளவுக்கு சீரழிந்துள்ளது.பயணம் பலமடங்கு பெருகுகிறது, ஆனால் ரயில்துறை தேங்கிக்கிடக்கிறது. தத்கால், அர்ஜெண்ட் தத்கால் என பல திட்டங்களால் மறைமுகமாக கட்டணம் கூட்டப்படுகிறது. கழிப்பறைகள் கழுவப்படுவதில்லை. பெட்டிகள் தூய்மைசெய்யப்படுவதில்லை. ஆனால் புகார் கொடுப்பதற்குச் செயலிகள் உண்டு. புகார் கொடுத்தால் ஐந்தே நிமிடத்தில் மறுமொழிகள் வரத்தொடங்கும். உடனே ஓர் அதிகாரி வந்து உடனே செய்கிறோம் என்பார். நான் புகார்கொடுத்தபோதெல்லாம் உடனே வந்து கழிப்பறையை நீரூற்றி ஃபினாயில் ஊற்றிவிட்டுச் சென்றனர். ஆனால் பின்னரும் ரயில் கிளம்பும் இடத்திலேயே நாறித்தான் கழிப்பறைகள் காணப்பட்டன.

சமீபத்தில் நாகர்கோயில் – கோவை எக்ஸ்பிரஸில் நாறிக்கிடந்த கழிப்பறை பற்றி புகார் செய்தேன். நெல்லையில் வந்து தூய்மை செய்தனர். ஆனால் ஒர் அதிகாரி குமுறித்தள்ளிவிட்டார். ஏனென்றால் தூய்மைசெய்யும் ஊழியர்களே இல்லை. மொத்தப்பணியும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. குத்தகை எடுப்பவர் பலவகையான ’கழித்தல்’களுக்குப்பின் பெறுவது ஏலத்தில் கால்பங்கு. அந்த மிகக்குறைந்த தொகைக்கு அவர் நாலைந்து பிகாரி பையன்களை வேலைக்கு வைக்கிறார். நாகர்கோயிலிலேயே பிகாரிகள்தான் அப்பணி செய்கிறார்கள் .ஒருநாளைக்கு இருநூறு ரூபாய் ஊதியம். ஒரு ரயில்நிலையத்தின் அனைத்து பெட்டிகளையும் தூய்மை செய்ய ஊதியமாக அளிக்கப்படுவது ஒருநாளைக்கு மொத்தமாகவே ஆயிரம் ரூபாய்கூட இல்லை. அந்த பிகாரிகள் காலையில் வந்து சாயங்காலம் சென்றுவிடுவார்கள். அந்திக்குமேல் கிளம்பும் ரயில்களை தூய்மை செய்ய ஆளிருப்பதில்லை. கோவை ரயில் காலை நாகர்கோயில் வந்ததும் உடனே இன்னொரு எண் பெற்று கொல்லம் சென்று திரும்புவது. பல்லாயிரம்பேர் பயணம் செய்தது. கழிப்பறை நாறாமல் என்ன செய்யும்?

நாற்பது பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலின் நூற்று அறுபது கழிப்பறைகளை ஓர் ஊழியர் ஒருமணிநேரத்தில் தூய்மை செய்தால் எந்த அளவுக்குத் தூய்மை செய்யமுடியுமோ அதுவே சாத்தியம். ரயில் கிளம்பியபின் அந்த ஒப்பந்த ஊழியர்களான பிகாரிகள் பயணிகளின் கருத்தைக்கோரும் ஒரு படிவத்துடன் பரிதாபமாக வந்து நிற்பார்கள். இந்தி அல்லாது ஒரு சொல் தெரியாது. என்னதான் செய்வது? பரிதாபப்பட்டு கையெழுத்துபோட்டு அளிப்பார்கள் பயணிகள். பலசமயம் நான் ஐம்பது ரூபாய் அளித்து என் பெட்டியின் கழிப்பறைகளை மட்டும் தூய்மைசெய்யச்சொல்வேன்.

சாதாரண ‘ஸ்லீப்பர் கோச்’களின் நிலைமை சென்ற சில ஆண்டுகளில் நம்பமுடியாத அளவுக்கு கீழிறங்கிவிட்டது வடகிழக்கு நோக்கிச் செல்லும் ரயில்களில் அனைத்துப்பெட்டிகளிலும் முன்பதிவுசெய்தாலும் அமரக்கூட இடம்கிடைப்பதில்லை. நான்குநாட்களுக்கு முன் என் மகனும் கடலூர் சீனுவும் படுக்கை முன்பதிவு செய்திருந்தும் ஒரிசாவிலிருந்து ஓர் இருக்கையில் எட்டுபேர் என அமர்ந்தபடி திரும்பி வந்தனர். பெட்டிக்குள் இருநூறுபேருக்குமேல்.ஏனென்றால் செலவுசுருக்க நடவடிக்கைகளால் டிக்கெட் பரிசோதகர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இன்று பதினைந்து பெட்டிகளுக்கு ஒருவர் தான் கண்காணிக்கிறார். அவரால் இந்தப்பெரும்கூட்டத்தை என்ன செய்ய முடியும்? ரயில்வே காவலர்களின் எண்ணிக்கையும் சென்ற ஆண்டுகளில் தொடர்ந்து குறைக்கப்படுகிறது. இந்திய ரயில்பெட்டிகள் இன்று எந்தப்பாதுகாப்பும் இல்லாத ஒரு பெரும் அராஜகவெளி. ஆனால் புகார் செய்ய செயலிகள் உண்டு. மென்மையான பதில்கள் உடனே கிடைக்கும். அதிகாரிகளின் அரசின் காகிதத்தோற்றம் என்றால் இதுதான்

இந்த அரசு அளிக்கும் அத்தனை செயல் அறிக்கைகளும் பொய்யானவை. இந்தியா முழுக்க இருபதாண்டுகளுக்கு முன் போடப்பட்ட நாற்கர நெடுஞ்சாலைகள் புதுப்பிக்கப்படாமல் பழுதடைந்து கிடக்கின்றன. ஆனால் அவற்றில் செல்ல பல்லாயிரம் ரூபாய் கட்டணம் கட்டவேண்டியிருக்கிறது. வட இந்தியாவில் சில இடங்களில் தேசியநெடுஞ்சாலைகள் கிராமச்சாலைகளைவிட மோசமாக உள்ளன. நாகர்கோயில்- மதுரை நெடுஞ்சாலையே துண்டுதுண்டாக பள்ளமும் உடைசலுமாகக் கிடக்கிறது.விமானநிலைய விரிவாக்கங்கள் அனைத்தும் தேங்கிக்கிடக்கின்றன. கல்வித்துறைக்கு நிதி இல்லை. மருத்துவத்துறையில் பெருந்தேக்கம். எங்கும் எந்தவிதமான செயல்பாடும் இல்லை. வளர்ச்சி போகட்டும், பராமரிப்பே நிகழவில்லை.

ஆனால் இந்தியவரலாற்றிலேயே அதிகமாக இன்று தனிமனிதன் வரிகட்டிக்கொண்டிருக்கிறான். சில துறைகளில் ஜிஎஸ்டி,வருமானவரி,சேவைவரி உட்பட ஒரே தொழிலுக்கு மூன்று வரி. வருமானத்தில் 40 சதவீதத்தை நேரடி வரியாக கட்டவேண்டியிருக்கிறது. வாங்கும்பொருட்களின் மறைமுக வரியையும் சேர்த்தால் ஈட்டுவதில் 70 சதவீதம் வரியாகப்போகும். அதற்கு மாற்றாக குடிமகன் பெறுவதென்ன? கட்டணம்கொடுத்தாலும் நல்லசாலைகள் இல்லை. கல்வி, மருத்துவம் என அனைத்துக்குமே பெரும்பணம் அளிக்கவேண்டும். நல்வாழ்வுத்திட்டங்கள் என ஒன்றுமே கிடையாது. இத்தகைய அதிக வரிவிதிக்கும் நாடுகள் முழுக்குடிமகனின் வாழ்க்கைக்கும் பொறுப்பேற்கும் நலம்நாடும் அரசுகள். இங்கே இந்த வரி வெவ்வேறு பொய்முதலீடுகள் வழியாக தனியார் கைகளுக்குச் செல்கிறது. வரி என்பதே அரசைப்பயன்படுத்தி சிலர் அடிக்கும் நேரடியான கொள்ளை என்றாகிவிட்டிருக்கிறது .

இந்த அரசு ஊழலற்றதா? இன்றுவரை பெரிய ஊழல்களை அவைக்குக் கொண்டுவர எதிர்க்கட்சிகளால் இயலவில்லை என்பது உண்மை. ஆனால் இத்தகைய பெருங்கொள்ளை நிகழ்கையில் அதை ஊழல் என்று அல்லாமல் எப்படி மதிப்பிட முடியும்? எங்கே செல்கிறது இந்த மாபெரும் வரிவசூல் செல்வம்? வரிகட்டும் எனக்கு அதிலிருந்து ஒரு பைசாகூடத் தரப்படாது என்றால் அதைப் பெற்றுக்கொள்பவர் எவர்? ஊழலைச் சட்டபூர்வமாகச் செய்யும் வழிகள் கண்டடையப்பட்டுள்ளன, அவ்வளவுதான்.

இந்திரா காந்தியாவது சில நலத்திட்டங்களைச் செய்ய முயன்றார். ஆனால் மோடி அரசு பசப்புச் சொற்கள், பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது. எளிய அளவில்கூட ஒரு நலம்நாடும் திட்டம் கிடையாது. வளர்ச்சித்திட்டங்கள் எவையுமில்லை, எளிய கவற்சித்திட்டங்கள் கூட இல்லை. சொல்லப்போனால் இங்கே மக்கள் என ஒரு திரள் இருப்பதையே இவர்கள் அறியவில்லை எனத் தோன்றுகிறது. இந்த நம்பிக்கை மிக ஆபத்தானது. மேலும் மேலும் கொள்ளையிடுவதற்கான அனுமதியை இந்தியச் சமூகம் அளிப்பதாகவே இவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதன்பொருட்டேனும் இவர்கள் அகன்றாகவேண்டும் .வேறு வழியே இல்லை. இதுவே என் அரசியல்

இந்த அரசை இந்துமதம் அழியவேண்டும் என நினைப்பவர்கள் எதிர்க்கிறார்கள், இந்தியாவைத் துண்டாடவேண்டும் என நினைப்பவர்கள் வெறுக்கிறார்கள், ஆகவே இதை ஆதரிக்கிறோம் என்பதே பலருடைய நிலைபாடாக இருக்கிறது. இந்திய எதிர்ப்பாளர்களின் உக்கிரமான கசப்புப்பிரச்சாரமே உண்மையில் மோடியை ஆதரிக்குமிடத்திற்கு பலரைத் தள்ளுகிறது. ஆனால் எதன்பொருட்டென்றாலும் குடிமக்கள் என சிலர் இருக்கிறார்கள், அவர்களிடமிருந்து வரி பெறுகிறோம், பதிலுக்கு அவர்களுக்கு சில பருக்கைகளையாவது அள்ளிவீசவேண்டும் என்றுகூட எண்ணாத ஓர் மூடுண்ட அரசை ஆதரிப்பது அறிவின்மை. நம் வாழ்க்கையை நாமே அழித்துக்கொள்வது அது. ஒருவர் இந்து என தன்னை உணர்கிறார் என்பதனால், இந்து என்னும் பெயரை இவர்கள் சொல்கிறார்கள் என்பதனால் இவர்களை ஆதரிப்பார் என்றால் அதைப்போல ஒரு வீழ்ச்சி பிறிதில்லை.

இன்று இருபக்கமும் உச்சகட்ட வெறுப்பரசியல் நிகழ்கிறது. அரசியல் என்பது மதத்துடன் இணைக்கப்பட்டிருக்கையில் வளர்ச்சி, மக்கள்நலம் எதுவும் எவருக்கும் ஒரு பொருட்டல்ல. இந்த அரசை நீக்கும் வெறிகொண்டிருக்கின்றனர் எதிர்தரப்பினர் , அரசைக் காக்கும் வெறி மறுபக்கம். ஆகவே உச்சகட்ட அரசியல்பிரச்சாரமும் எதிர்ப்பிரச்சாரமும் நிகழ்கிறது. இந்த கூச்சல்விவாதங்களில் இடம்பெற நான் விரும்பவில்லை. சமூகவலைத்தளங்களில் கட்சிகட்டி தகவல்திரிபுகள், சதிவேலைக்கண்டுபிடிப்புகள், சாதிமதக்காழ்ப்புகள், போலிப்புள்ளிவிவரங்கள் என கூச்சலிடும் எவருடனும் இதைப்பற்றி விவாதிக்கவும் தயாராக இல்லை. நான் இக்கருத்துக்களைச் சொல்வது நான் முன்னர் பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்தேன் என்பதனால், அந்த மாபெரும் பிழையால், இவ்வரசை ஆதரிக்கிறேன் எனும் எண்ணம் எழுந்திருக்கக்கூடும் என்பதனால் மட்டுமே

மேற்கொண்டு எதையும் பேசப்போவதில்லை. இது என் அரசியல் நிலைபாடு. எளிய குடிமகனின் அரசியல் இது. கட்சி சார்பு அரசியல் அல்ல. என் நண்பர்களில் பலர் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள், பலர் எதிர்ப்பார்கள். எங்கள் நட்புக்குழுமம் முழுக்க இருசாராரும் கொம்புமுட்டி பூசலிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இருசாராரிடமும் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. என் தளத்தை அவ்விவாதத்தின் களமாக ஆக்கவும் விரும்பவில்லை. எனவே எவரும் எனக்கு இதுகுறித்து எழுதவேண்டியதில்லை. இதுகுறித்து மேலும் நான் எதுவும் சொல்லப்போவதுமில்லை. இதுகுறித்து எக்கடிதம் வந்தாலும் அதை எழுதியவரை என் மின்னஞ்சல்பட்டியலில் இருந்து விலக்க எண்ணுகிறேன். எனக்கு வேலைகள் நிறைய உள்ளன.

பதிவின் இணைப்பு: https://www.jeyamohan.in/112865

ஜல்லிக்கட்டு — சில புரிதல்கள்

ஜல்லிக்கட்டு போராட்டம் இப்போது ஒரு குழப்பமான நிலையை அடைந்திருக்கிறது. ஆளுக்கு ஆள், வா வீட்டுக்கு போலாம் என்றோ, நீ வேண போ நான் நிரந்தர சட்டம் வராம வரமாடேன் என்றோ குழப்(ம்)பிக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலான அரசியல் தலைவர்களும், ஜல்லிக்கட்டுக்காக பல ஆண்டுகளாக போராடி வந்த இராஜசேகரன், சிவசேனதிபதி போன்றோர் போதும் என்கிறார்கள்.

இவர்களில், அரசியல்வாதிகளுக்கோ, ஜல்லிக்கட்டை தவிர்த்து பிற காரியங்களுக்காக போராட்டம் தொடர்ந்தால் தலைவலி. விவசாய பாதுகாப்பு, மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு தடை போன்றவற்றை கூட விடுங்கள், PETAவுக்கே அவர்களால் தடை வாங்க முடியாது என்பது தான் நிதர்சனம். ஜல்லிக்கட்டுக்காக இத்தனை ஆண்டுகளாக போராடியவர்களை பொருத்தவரை அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க கூடியது இச்சட்டம். இது அவர்களுக்கு படத்தின் முடிவாகவும் இருக்கலாம் அல்லது, இடைவேளையாகவும் இருக்கலாம். ஒருவேளை நாளை இச்சட்டம் தொடர்பாக சிக்கல் வந்தாலும் மீண்டும் ஒரு போரட்டத்துக்கு அவர்கள் தயாரே. ஆனால் இதன் பொருட்டு அரசின் நெருக்குதல்கள் அவர்களுக்கு வேண்டாம்.

இதில் ஒப்புக்கொள்ள முடியாத ஒரே விஷயம், ஆதியின் ‘தேசத்துக்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில் எந்த போராட்டம் நடந்தாலும் சர்வ சாதரணமாக கேட்க கூடிய கோரிக்கை ‘எங்களை அத்து விடு’ என்பது தான். அதெல்லாம் உண்மையென்றால், தமிழ்நாடு என்றோ தனிநாடயிருக்கும். இந்த போராட்டம் தீவிரமடைவதற்க்கு முன்பு நடந்த பல அடையாள ஆர்பாட்டங்களிலும் கூட பலர், ‘எங்களை மதிக்காவிட்டால், தனிநாடுதான்’ என்று சலம்பிக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுதெல்லாம், இது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்று ஆதிக்கு தோன்றாமல் போனது தான் ஆச்சரியம்.

எனக்கென்னமோ, அரசு சற்று பொறுமையாக, ‘இந்தங்கப்பா, நீங்க கேட்ட அவசரசட்டம். இத திங்கள்கிளம சட்டமன்றத்துல வச்சு சட்டமாக்கிறுவோம். இடையில நடத்தனும்னு நினைக்கிறவன், அனுமதி வாங்கிட்டு, இந்த இந்த நடைமுறைகளை எல்லாம் கடைபிடிச்சு நடத்திக்குங்க’ என்றிறுந்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு ‘நாந்தான் மாட்ட அவுத்துவுடனும்னு சின்னம்மா சொல்லுச்சு’ என்று முந்திரிக்கொட்டைத்தனமாக விழா ஏற்பாடுகள் செய்யப்படவே தான் மக்கள் ‘நீ அவ்ளோ நல்லவன் இல்லையே’ என்றுவிட்டார்கள்.

இப்போராட்டம் குறித்து சில சமூக மற்றும் மானுடவியல் அறிஞர்களின் கருத்துக்களை கவனித்துப்பார்த்தால், இது ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே கூடிய கூட்டம் அல்ல என்பது தெரியவரும். விவசாய அழிப்பில் இருந்து, அரசியல்வாதிகளின் சுரண்டல், அண்டை மாநிலங்களின் வஞ்சம், இந்திய அளவில் அடையாளமழிப்பு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். இதனை புரியாமல் தான், சிலர் வேலை முடிஞ்சிருச்சி நீ வீட்டுக்கு போ என்கிறார்கள். இதனை புரிந்து கொண்டதால் தான் அரசாங்கம், நாளைக்கு எல்லாரும் பள்ளிகூடத்திற்க்கு வந்திடுங்கப்பா என்கிறது.

Time for some real protest?

Now the government starts its drama. Many people, who are in the front of the protest, are rising their voice to accept the ordnance. On the other hand, government announces that from tomorrow onwards all educational institutions will starts to function. I think these moves indirectly increase the pressure on the protesting side.

Of course, there would be some diplomatic moves in favor of Jallikattu. The ordnance will be passed as a law in the TN assembly (most probably by tomorrow itself) and will be forwarded to the Central government for the approval. Central may further forwarding it to the President and once the President sign the papers, the reliability of the act will be ensured. Once these steps are over, central government will intimate the SC regarding the act. Since its a civil case, SC would take the act into consideration prior to the final verdict. In such a scenario, it may request an opinion from AWBI and PETA (since they are the petitioners). Depending upon their opinion, the verdict may or may not be in favor of TN.

But the point is, it would take at-least a week to complete these procedures. And there is no time bound for the final verdict. It may happen with in next week or in the next month or any other day. I’m sure central government wouldn’t pass any laws before the SC’s final verdict. Because, once such a thing happens then other states might also, request the things in the same manner. Already BJP’s leaders like H. Raja requesting army to dissolve the crowd. So, any positive assistance from Delhi is highly impossible and in fact TN government may be pressurized to take some firm action against the protesters.

One of the reasons for such a big success of this protest is due to the easy availability of basic needs, such as food, water, mobile toilets etc. This makes public and women (even children) to participate in the protest. Now the government will try to stop such a facilities to the protesters. Also, pressure may be mounted on the students from the institutional side. The big shops who are now providing food and water will be warned by the government to stop such offers. This moves may drastically reduce a part of the crowd. Many off-the-screen drama may also (its started already) be induced by the government and politicians, so that protesters may start to fight themselves.

I think, this is the point where a real protest starts. For the past few days people enjoying the protest like as they are in a carnival. When the pressure mounts, those who have guts to risk their future will only continue the protest. With increasing pressure and extended delay for a solution, there should be destructions and disbeliefs. I can not imagine a situation that the mass decides in such a way, that they are ready for anything. If such a thing happens, the protest will turns into something, may be a miracle. If most of them (thats what I expect) are on an other way, once again the politicians will won the crown.