பாரதிதாசனின் தலைவாரி பூச்சூடி எனக்கு பிடித்த வரிகளுள் ஒன்று. சமீபமாக இந்த வரிகள் அடிக்கடி நினைவில் வந்தன, ஆனால் அதற்கு பிறகு என்ன என்பது தெரியவில்லை. விளையாடப்போவென்றாள் அன்னை பின் சேர்த்த போது சுவரசியமாய் இருந்தது. பிறகு இணையத்தில் மீதி பாடலை பார்த்து என்னுடைய தனி பதிப்பாக இதை எழுதியாயிற்று! பாரதிதாசன் மன்னிப்பாராக!

தலைவாரி பூச்சூடி விளையாட போவென்றாள் அன்னை
நீயோ சிலைபோல ஏனங்கு நின்றாய்?
நீ இல்லாத வலிகளை ஏன் வந்ததென்றாய்
இலை போட்டால் வந்து விழுமாவுடல்
நலம்?
வீதி தோறும் சுற்றி வருதல் கொண்டு
சேர்க்குமுள நலம்.
தீங்கனிச்சாறள்ளவோ ஆட்டம் - நீ வயிராற பருகுவாய் போ
என் புதல்வி!
இளையாத பெண்ணாய் இருந்தால் கேலி பண்ணுவார் ஊரார்
ஆதவன் மறையும் முன் ஆடி வந்துவிடு
என் கண்ணல்ல
அண்டை வீட்டு பெண்களோடு
களைப்பாய் இருக்கும் இப்போது - விளையாடித்தீர்க்க மனம் பொங்குமப்போது.
முக்கடல் கொண்ட தமிழ்நாடு
அலைபோலே நீ விளையாடு!