நேர்த்திகாசு

இந்த கதை மிகப் பரவலாக எங்கள் குடும்பத்துப் பெண்களிடையே புழங்கி வருகின்றது. அதுவும் சற்றே அலைபாயும் மனமுடைய ஆண்களாக இருந்துவிட்டால், அவர்கள் காதில் விழும்படியாக மூத்த பெண்களாலும், வயதானவர்களாலும் குழந்தைகளான எங்களுக்குச் சொல்வது போலச் சொல்லப்படும். எங்கள் குடும்பம் புகழ்பெற்ற வணிக சமூகத்தைச் சேர்ந்தது. 1900களில் பர்மாவிற்குச் சென்று லேவாதேவி தொழில் (வட்டித்தொழில்) செய்து பெரும் பணம் ஈட்டிய குடும்பங்களில் எங்களுடையதும் ஒன்று. எங்கள் எள்ளுத்தாத்தா இரங்கூனில் ஒரு முக்கிய Read more…